ஏ. மாரியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. மாரியப்பன் (A. Mariappan)(பிறப்பு 1 ஆகத்து 1920) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1957-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேலம் - I சட்டமன்றத் தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் சேலம் மாவட்டத்தில் செங்குந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.

மாரியப்பன் அம்மாபேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக 1952 முதல் 1971 வரை இருந்தார். இந்த கூட்டுறவுச் சங்கம் தமிழ்நாட்டின் மிகப் பழமையானதும், மிகப் பெரியதுமாகும். சங்கம் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Madras, 1957". Election Commission of India. Archived from the original on 2019-09-20. பார்க்கப்பட்ட நாள் 2020-05-02.
  2. Mines, Mattison (1984). The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India. Cambridge University Press. பக். 134–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521267144. https://books.google.com/books?id=y089AAAAIAAJ&q=A.+Mariyappan. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._மாரியப்பன்&oldid=3637222" இலிருந்து மீள்விக்கப்பட்டது