ஏ. டி. நானா பாட்டீல்
Appearance
ஏ. டி. நானா பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1961-ஆம் ஆண்டின் செப்டம்பர் ஒன்பதாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஜள்காவ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஜள்காவ் மாவட்டத்தில் உள்ள பாரோளா என்னும் ஊரைச் சேர்ந்தவர்.[1]
பதவிகளும் பொறுப்புகளும்
[தொகு]இவர் ஏற்றிருந்த பதவிகளும் பொறுப்புகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
- 1998-2000: பாரோளா நகராட்சியின் பிரசிடென்ட்
- 2001-06: பாரோளா நகராட்சியின் பிரசிடென்ட்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்