இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏ. டபிள்யு. சகின்சா இலிருந்து வழிமாற்றப்பட்டது)


செ.அபூஷேக் முஹம்மத்[தொகு]

உலக மக்களின் வாழ்க்கை,, பண்பாடு மற்றும் வலிகளை யதார்த்த உணர்வுகளாக வடிக்கும் சிறு கதை எழுத்தாளர் .. .மதுரையில் பிறந்தவர் ....ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவில் தொடர்ந்து கதைகள் வெளி வருகின்றன..

அ. அ. ஹாஜா மைதீன்[தொகு]

அ. அ. ஹாஜா மைதீன் கூத்தாநல்லூரில் பிறந்து தற்போது கூத்தாநல்லூர் சவுகத் அலி தெரு, ஆசாத் நகரில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கட்டுரை எழுத்தாளருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்;

  • சமுதாய நன்மணி பட்டம்

அ. அப்துர் ரஹ்மான்[தொகு]

மௌலவி அ. அப்துர் ரஹ்மான் காசிமி (பிறப்பு: மே 25 1959). இந்தியா, திண்டுக்கல், ஈரோடு, வேடச்சுந்தூர் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஓர் இலக்கிய ஆர்வலரும், ஈரோடு முஸ்லிம் கல்விச் சங்கத்தின் செயலாளரும், தாஜுல் ஹிதாயா மத்ரஸாவின் நிர்வாகியும், நத்வதுல் உலமா அறக்கட்டளையின் தலைவருமாவார்.

அ. அய்யூப்[தொகு]

அ. அய்யூப் (பிறப்பு: மே 13 1947) இலக்கிய ஆர்வலர், பத்திரிகையாளர், மயிலாடுதுறையிலிருந்து வெளியாகும் ‘நம்ம ஊரு செய்தி’ மாத இதழின் ஆசிரியர். அனைத்திந்திய மாணிக்க வியாபாரிகள் சங்கத் தலைவர். தற்போது தாய்லாந்து தலைநகர் பேங்காக் நகரில் வசித்து வருகிறார். இலக்கிய ஆர்வம் நிரம்பியவர்.

அ. காஜா முகைதீன்[தொகு]

அ. காஜா முகைதீன் (பிறப்பு: மே 23 1953). இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) இல் பிறந்து தற்போது அகில இந்திய வானொலி குடியிருப்பு. நேரு நகர். காரைக்கால் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு அலுவலராவார்.

அ. காஜா மொய்னுத்தீன்[தொகு]

அ. காஜா மொய்னுத்தீன் (பிறப்பு: மே 18 1962) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புதுச்சேரியைப் பிறப்பிடமாகவும், புதுச்சேரி செந்தாமரை வீதி, முத்தியால் பேட்டை, சோலை நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இலக்கிய ஆர்வலருமாவார்.

அ. ச. முகமது நிஜாம்[தொகு]

அ. ச. முகமது நிஜாம் கோட்டக்குப்பம் எனுமிடத்தில் பிறந்து தற்போது புதுச்சேரி அண்ணாசாலையில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், கவிஞரும், சமூகப் பணியாளருமாவார்.

அ. சபீகுர்ரஹ்மான் மன்பஈ[தொகு]

அ. சபீகுர்ரஹ்மான் மன்பஈ (பிறப்பு: நவம்பர் 13, 1946) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், லால்பேட்டையில் பிறந்து தற்போது கடலூர் மாவட்டம் லால்பேட்டை உஹது தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், புத்தக வியாபாரியும், அரபி, உருது மொழிகளை நன்கறிந்தவரும், பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகளை எழுதிவருபவரும், சமூகசேவகருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்;

  • சேவைச் செம்மல் விருது

அ. ஜமால் முகம்மது[தொகு]

அ. ஜமால் முகம்மது (பிறப்பு: பெப்ரவரி 9, 1939) தமிழக முஸ்லிம் எழுத்தாளர், திருச்சம்பள்ளியில் பிறந்து தற்போது நாகை ஜில்லா செம்பனார் கோவில் வழி திருச்சம்பள்ளி கணி, பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் இவர் ஒர் இலக்கிய ஆர்வலரும், கவிதை எழுதுவதிலும், கவிதை நூல்களை வாசிப்பதிலும் மிக்க ஆர்வமுள்ளவரும், லயன்ஸ் கிளப்பின் தலைவருமாவார்.

அ. ஜாகிர் உசேன்[தொகு]

அ. ஜாகிர் உசேன் (பிறப்பு: மே 12, 1973) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புது ஆயக்குடியில் பிறந்து திருச்சி தென்னூர் ஹிதாயத் நகரில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், குர்ஆன் ஆய்வாளரும், கணிப் பொறி சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதியவருமாவார். இவர் திருச்சியில் உள்ள எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியில் கணிப்ப்பொறித்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அ. பக்ருத்தீன்[தொகு]

அ. பக்ருத்தீன் (பிறப்பு: செப்டம்பர் 12 1953), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கோட்டக்குப்பம் எனுமிடத்தில் பிறந்து தற்போது கோட்டக்குப்பம் நாட்டாண்மை தெருவில் வாழ்ந்துவரும் இவரொரு இலக்கிய ஆர்வலரும், கல்விப் பணியில் நாட்டம் கொண்டவரும், அரபி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை பரீட்சயமானவரும், கோட்டக்குப்பம் பைதுல்மால் தலைவருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • நல்லாசிரியர் விருது

அ. பசீர் அகம்மது[தொகு]

ஹாஜி லயன் அ. பசீர் அகம்மது (பிறப்பு: 12 ஜூன், 1955) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், தஞ்சாவூர் மாவட்டம், வழுத்தூர் எனும் பிரதேசத்தில் பிறந்து தஞ்சாவூர் மாவட்டம், வழுத்தூர் கீழத்தெருவில் வசித்துவரும் இவர் இலக்கிய ஆர்வலரும், பதிப்பாளரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவருமாவார். இவர் இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு பரிசில்களை வென்றுள்ளார்.

அ. ர. அப்துல் குத்தூஸ்[தொகு]

அ. ர. அப்துல் குத்தூஸ் (பிறப்பு: சூலை 25, 1944) இந்திய முஸ்லிம் எழுத்தாளர் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் எனுமிடத்தில் பிறந்த இவர் 'குர்ஆனின் குரல்' மாத இதழில் 'களாக் கண்டேன்' எனும் தொடரை தொடர்ந்து 10 வருடகாலங்களாக எழுதியவர். நீருர் மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான இவர், நூருல் ஹதா எனும் பெயரில் அரபி மத்ரஸா ஒன்றை பொறுப்பாக நின்று நடத்தி வருகின்றார்.

அ. ரபியுதீன்[தொகு]

அ. ரபியுதீன் (பிறப்பு: மார்ச்சு 4 1956) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், நீடூரில் பிறந்து மஜீது காலனி நீடூரில் வசித்துவரும் இவர் தாய்லாந்து தமிழ் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் தலைவர். இலக்கிய ஆர்வலர்.

மாணிக்க வியாபாரம் செய்து வருகிறார்.

அ. ராசா நசீர் அகமது[தொகு]

அ. ராசா நசீர் அகமது (பிறப்பு: சனவரி 26 1958) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சக்கராப்பள்ளி அய்யம்பேட்டையில் பிறந்து தற்போது சென்னை இராயப்பேட்டை தஞ்சாவூர் ஜில்லாவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமுதாய நலத்தொண்டருமாவார். இவர் பல ஆக்கங்களை ஊடகங்களில் எழுதியுள்ளார்.

அ. ருக்னுத்தீன்[தொகு]

அ. ருக்னுத்தீன் இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பகாவேரிப்பட்டினம், கோவிந்தராஜபுரத்தில் வசித்துவரும் இவர் தீன்மதி எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர். இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், ஊடகவியலாளரும், இஸ்லாமியப் பதிப்பக அலுவலருமாவார்.

அ. லியாகத் அலி[தொகு]

அ. லியாகத் அலி (பிறப்பு: டிசம்பர் 1 1962 இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கோட்டக்குப்பம் எனுமித்தில் பிறந்து தைக்கால் தெரு கோட்டக்குப்பம் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் அச்சகத் தொழிலாளரும், எழுத்தாளரும், மணிச்சுடர் நாளிதழில் பல கட்டுரைகள், கவிதைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரும், பல மாநாடுகளை சிறப்பாக நடத்தியவருமாவார்.

அ. லியாக்கத் அலி[தொகு]

அ. லியாக்கத் அலி (பிறப்பு: சூன் 1 1955) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சேந்தமங்கலம் எனுமிடத்தில் பிறந்து மணவெளி தெரு குத்தாலம் எனுமிடத்தில் வாழ்ந்துவரும் இவர் இலக்கிய ஆர்வலரும், துபை இந்தியன் முஸ்லிம் அஸோஸியேசன் பொதுச் செயலாளரும், துபை ஐக்கிய முஸ்லிம் பேரவைத் தலைவருமாவார்.

அ. ஹனிபா[தொகு]

அ. ஹனிபா (பிறப்பு: ஏப்ரல் 13 1938) திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையத்தில் பிறந்து தற்போது மார்கண்டன் கோவில் தெருவில் வசித்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும், ஓய்வுபெற்ற தலைமையாசிரியருமாவார். இவரது படைப்புகள் பல இஸ்லாமிய இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

அர. அப்துல் ஜப்பார்[தொகு]

முனைவர் அர. அப்துல் ஜப்பார் (பிறப்பு: ஆகத்து 16, 1937, இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பாலக்கரை, (திருச்சி) எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஜமால் முகமது கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவரும், வண்ணக்களஞ்சியப் புலவரின் 'இராஜ நாயமும் பிற படைப்புகளும்' என்ற தலைப்பில் ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் பெற்றவருமாவார்.

பெற்ற விருது: தமிழ்மாமணி

அலாவுதீன் பாசா[தொகு]

அலாவுதீன் பாசா (பிறப்பு: மே 5 1960) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா ஈரோடு எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், சென்னிமலை ரோடு விவேகானந்தர் நகரை வாழ்விடமாகவும் கொண்ட இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், காசிபாளையம் நகராட்சியின் தலைவருமாவார்.

ஆ.கா.அ.பாத்திமா முசப்பர்[தொகு]

ஆ.கா.அ.பாத்திமா முசப்பர் (பிறப்பு: ஏப்ரல் 28 1971 இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர், தற்போது ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னையில் வசித்துவரும் இவர் சென்னையில் டிராவல்ஸ் ஏஜன்ஸீஸ் உரிமையாளரும், அரசியல் ஈடுபாடு மிக்கவரும், முஸ்லிம் லீக் மகளிர் அணித் தலைவரும், இலக்கிய ஆர்வலரும், ஆன்மீகம், அரசியல் போன்ற துறைகளில் ஈடுபாடு மிக்கவரும், மீலாத் விழாக்கள் மற்றும் பள்ளிவாசல் திறப்பு விழாக்களில் சிறப்பாகப் பேசி வருபவருமாவார்.

இ. குல்முஹம்மது[தொகு]

கலைமாமணி ஹாஜி இ. குல்முஹம்மது இந்திய முஸ்லிம் எழுத்தாளர், காரைக்கால், கணபதி நகர், பள்ளிவாசல் தெரு, சல்மா மன்ஜிலில் வாழ்ந்து வரும் இவர் ஒரு இஸ்லாமியப் பாடகரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவரும், இசைக் குறுந்தகடுகளை வெளியிட்டவருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • இன்னிசைச்சுடர்
  • கலைரத்னா
  • ஆன்மீகத் தென்றல்
  • கலைமாமணி
  • தமிழ்மாமணி
  • வாழ்நாள் சாதனையாளர்
  • கலைமாமணி

இக்பால் பாசா[தொகு]

டாக்டர் இக்பால் பாசா (பிறப்பு: சூன் 2 1941 இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கோட்டக்குப்பம் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் விழுப்புரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவராவார்.

உ. உசேன்கான்[தொகு]

உ. உசேன்கான் (பிறப்பு: சூலை 30 1982 இந்திய முஸ்லிம் எழுத்தாளர். விழுப்புரம் எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இவர், ஒரு உதவிப் பேராசிரியரும், கருத்தரங்குகளில் பங்கேற்பவருமாவார்.

உ. ஜெஸிமா ஹஸன்[தொகு]

உ. ஜெஸிமா ஹஸன் (பிறப்பு: சனவரி 8 1969) தொண்டி எனுமிடத்தில் பிறந்து காஜியார் சந்து காரைக்காலில் வாழ்ந்துவரும் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழக விலங்கியல் பட்ட மேற்படிப்பு ஆய்வில் முதல் மாணவியாகத் தேறியவரும், இலக்கிய ஆர்வலரும். பேச்சாளரும், எழுத்துத் துறை ஈடுபாடுமிக்கவருமாவார்

உபைதுர் ரஹ்மான்[தொகு]

காஜி உபைதுர் ரஹ்மான் (பிறப்பு: சூலை 24 1950) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு ஓய்வுபெற்ற அரசு ஊழியரும், இலக்கிய ஆர்வலருமாவார்.

எ. ஹபீப் முஹம்மது[தொகு]

எ. ஹபீப் முஹம்மது (பிறப்பு: அக்டோபர் 31 1940) வவ்வாலடியில் பிறந்து தற்போது வவ்வாலடி ஏனங்குடி வடக்குத்தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், திரையொளி எனும் மாத இதழின் துணை ஆசிரியரும், அன்னை கதீஜா மாத இதழின் துணை ஆசிரியருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

எச். எம். சதக்கதுல்லா[தொகு]

எச். எம். சதக்கதுல்லா (பிறப்பு: சூலை 19 1941) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், அம்மாபட்டனிம் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஓய்வுபெற்ற அரச பொறியியலாளரும், இலக்கியம், ஆன்மீகத் துறைகளில் மிக்க ஈடுபாடுமிக்கவரும், வானொலிப் பேச்சாளரும், இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவருமாவார். மேலும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்துள்ளன.

எச். சாகுல் ஹமீது[தொகு]

எச். சாகுல் ஹமீது காரைக்காலில் பிறந்து தற்போது ராஜாந்தி நகர் பின்புறம் பாரீஸ் நகரில் வசித்துவரும் இவர் சென்னை பொறியியல் கல்லூரிப் பேராசிரியரும், கணினி, தத்துவம், அளவையில் துறைகளில் ஆர்வமிக்கவரும், எம்.டெக். பாடத்தில் முதலிடம் பெற்று புதுவைப் பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்றவரும்,மென்பொருள் ஆய்வில் நாட்டம் மிக்கவருமாவார். அத்துடன் இவரது ஆய்வுக் கட்டுரைகள் உலகளாவிய ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.

பிர்தவுஸ் ராஜகுமாரன்[தொகு]

இயற்பெயர் எச். நஸீர் (பிறப்பு: பெப்ரவரி 27, 1961) கோயம்புத்தூரில் பிறந்து தற்போது கோவை கரும்புக்கடை பூங்கா நகரில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், கட்டிட வரைவு அலுவலரும், கதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் என பல இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருபவருமாவார். இவரது பல்வேறு படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் வெளிவந்துள்ளன. "நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல " மற்றும் " போன்சாய் மரங்கள் "ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்புகளில் இவரது சிறந்த எழுத்தாற்றலை காணமுடிகிறது . சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை உட்பட நிறைய பரிசுகள் பெற்றுள்ள இவர் இப்போது நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார் .

என். எம். அப்துல் காதர்[தொகு]

என். எம். அப்துல் காதர் (பிறப்பு சூலை 1, 1959) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஈரோடு எனும் பிரதேசத்தைப் பிறப்பிடமாக்க கொண்ட இவர், இலக்கியத்துறையில் அதிக ஆர்வம் கொண்டவரும், ஈரோடு மாநகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளருமாவார். சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்களால் 'சமுதாயத்தின் போர்வாள்' எனும் விருதினைப் பெற்றுள்ளார்.

என். சாகுல் ஹமீது[தொகு]

என். சாகுல் ஹமீது (பிறப்பு: சூன் 16 1974), இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர், ஈரோடுவில் பிறந்து ஈரோடு பழைய இரயில்வே நிலையம் ரோடு கல்யாண சுந்தரம் வீதியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், மஸ்ஜித் இஃக்வான் நிர்வாகக் குழுவின் துணைச் செயலாளரும். ஈரோடு நகர பிரைமரி துணைத் தலைவருமாவார்.

எம். எஸ். முஹம்மது ஜஹீருத்தீன்[தொகு]

எம். எஸ். முஹம்மது ஜஹீருத்தீன் (பிறப்பு: மே 20 1954) விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் எனுமிடத்தில் பிறந்து தற்போது கோட்டக்குப்பம் பெரிய தெருவில் வசித்துவரும் இவர் ஓர் அரபிக் கல்லூரிப் பேராசிரியரும், இஸ்லாமிய மார்க்க அறிஞரும், இஸ்லாமிய கட்டுரைகள் எழுதிவரும் எழுத்தாளருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • ஃபாஜில்
  • அன்வாரி
  • தேவ்பந்த்
  • இவர் மாநில ஜமாஅத்துல் உலமா சபையில் பல பொறுப்புகளில் இருந்தவர். கோட்டக்குப்பம் அல்  ஜாமி ஆத்தூர் ரப்பானிய அரபி கல்லூரியின் முன்னாள் தலைவர். தற் போது புதுவை பைக்கடை தெரு பள்ளிவாசல் இமாமாக இருக்கிறார். கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக சபையில் பஞ்சயத் உறுப்பினராகவும் உள்ளார்

எம். எஸ். பசீர்[தொகு]

எம். எஸ். பசீர் இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சென்னை, அண்ணாசாலை சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலையம் எனும் முகவரியில் வாழ்ந்துவரும் இவரொரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், பல்வேறு நூல்களை எழுதியவரும், பல்வேறு விருதுகளைப் பெற்றவரும். ஆய்வாளரும், பல்வேறு கட்டுரைகளை எழுதியவருமாவார்.

எம். எஸ். எம். புகாரி மஹ்லரீ பாகவி[தொகு]

எம். எஸ். எம். புகாரி மஹ்லரீ பாகவி (பிறப்பு: சூன் 21 1953) இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர், குளச்சல் எனுமிடத்தில் பிறந்து இலப்பை விளை குளச்சல் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு வியாபாரியும், இலக்கிய ஆர்வலரும். மேலும் இவர் ரஹ்மத், சிராஜ், உங்கள் தூதுவன் போன்ற மாத இதழ்களிலும் எழுதி வருகின்றார்.

எம். என். முஹம்மது அபூபக்கர்[தொகு]

எம். என். முஹம்மது அபூபக்கர் (பிறப்பு: மார்ச்சு 14 1935) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், காயல்பட்டினத்தில் பிறந்து தற்போது காயல்பட்டினம் சதுக்கை தெருவில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கணினி வடிவமைப்பாளரும், ஊடத்துறையில் அதிக ஆர்வமுள்ளவருமாவார்.

எம். ஈ. அப்துல் ஹக்கீம்[தொகு]

ஹாஜி எம். ஈ. அப்துல் ஹக்கீம் (பிறப்பு: பிப்ரவரி 7 1941), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா திருப்பூர்ரில் பிறந்த இவர் காவேரி நகர், வீரப்பன் சத்திரம் ஈரோடு எனுமிடத்தில் தற்போது வசித்து வருகின்றார். இவர் ஒரு கவிஞரும், கோவை வானொலி நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவரும், பல்வேறு சமூக அமைப்புகளில் பொறுப்பேற்று சிறப்புடன் செயலாற்றி வருபவருமாவார்.

என். முஹம்மத் இலியாஸ்[தொகு]

என். முஹம்மத் இலியாஸ் (பிறப்பு: மார்ச்சு 12 1976) கல்பாக்கம் எனுமிடத்தில் பிறந்து தற்போது விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதை ஜாகீர் உசேன் நகரில் வாழ்ந்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், கட்டிட வண்ணம் தீட்டும் ஒப்பந்தக்காரருமாவார்.

என். முகம்மது அப்துல் காதர்[தொகு]

என். முகம்மது அப்துல் காதர் (பிறப்பு: சூலை 1 1959) ஈரோடுவில் பிறந்து தற்போது ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேசன் ரோடு கல்யாணசுந்தரம் வீதியில் வசித்துவரும் இவர் ஓர் இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளருமாவார்.

எம். ரியாஜ் அகமது[தொகு]

எம். ரியாஜ் அகமது (பிறப்பு: மார்ச்சு 5 1979) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சக்கராப்பள்ளி எனுமிடத்தில் பிறந்து தற்போது சக்கராப்பள்ளி மில்லத் நகரில் வசித்துவரும் இவர் கவிதைகள் புனைவதில் ஆர்வமிக்கவரும், இலக்கிய ஆர்வலரும், சமூகப் பணிகளிலும், நூல்களை வாசிப்பதிலும் அக்கறை செலுத்தி வருபவருமாவார். இவர் மில்லத் நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைச்செயலாளரும்கூட.

எம். ரஜ்முன்னிசா முஅஸ்கரியா[தொகு]

எம். ரஜ்முன்னிசா முஅஸ்கரியா (பிறப்பு: சனவரி 1 1974), திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியில் பிறந்து தற்போது தூத்துக்குடி மாவட்டம் தெற்குப் புதுமனையில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், மேடைப்பேச்சளாரும், கவிஞரும், ஆசிரியருமாவார். இவரது சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • அப்ஸலுல் உலமா

எம். முஹம்மது ரபீக் ரசாதி[தொகு]

மௌலவி, அல்ஹாபிழ், காரி எம். முஹம்மது ரபீக் ரசாதி (பிறப்பு: சூன் 2 1980) விழுப்புரம் எனுமிடத்தில் பிறந்து தற்போது விழுப்புரம் அஞ்சல் 7, செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்துவருகின்றார். இவர் ஒரு இளம் எழுத்தாளரும், விழுப்புரம் மத்ரஸா அன்வாருல் ஹதாவின் முதல்வரும், சென்னையின் மத்ரஸாயே நிஸ்வானின் கண்காணிப்பாளருமாவார். இஸ்லாமிய சமய அடிப்படையிலான பல ஆக்கங்களை இவர் எழுதியுள்ளார்.

எம். முகம்மது அபூபக்கர்[தொகு]

எம். முகம்மது அபூபக்கர் (பிறப்பு: மே 17 1976) கழநீர்குளத்தில் பிறந்து இந்தியா சென்னை கரிகலான் நகர், செங்குன்றம் மூவேந்தர் தெருவில் வாழ்ந்துவரும் இவரொரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளருமாவார்.

பெற்ற விருதுகள்:

  • சேவைச்சுடர் விருது
  • மக்கள் மத நல்லிணக்க சேவை விருது

எம். மஹபூப் சுப்ஹானி[தொகு]

எம். மஹபூப் சுப்ஹானி (பிறப்பு: மே 4 1967) இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எனுமிடத்தில் பிறந்து தற்போது கீழக்கரை வடக்குத்தெருவில் வசித்துவரும் இவரொரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், இதழியல் ஊடகத்துறையில் ஆர்வமிக்கவரும், ஒர் ஆலிமாவுமாவார்.

எம். பசீர் அஹமத்[தொகு]

எம். பசீர் அஹமத் (பிறப்பு: செப்டம்பர் 13 1956) தமிழக எழுத்தாளர், சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் வாழ்ந்துவரும் இவரொரு இலக்கிய ஆர்வலரும், அரசியல், ஆன்மீகத் துறைகளில் மிக்க ஆர்வமுள்ளவரும், சமூக சேவகருமாவார்.

எம். நூர் முஹம்மது[தொகு]

எம். நூர் முஹம்மது (சேட்) (பிறப்பு: மே 15 1964) ஈரோடு சூரம்பட்டி வலசு கட்டபொம்மன வீதியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும் ஆடை வியாபாரியும், பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிப்பவருமாவார்.

எம். தாஜுதீன்[தொகு]

எம். தாஜுதீன் (பிறப்பு: சனவரி 8 1976) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், நரிப்பையூரில் பிறந்த இவர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி ஆங்கிலத்துறைப் பேராசிரியரும், இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், இலக்கியத் திறனாய்வில் மிக்க ஆர்வம் கொண்டவருமாவார்.

எம். ஜமாலுத்தீன்[தொகு]

கவிஞர் எம். ஜமாலுத்தீன் (பிறப்பு: ஏப்ரல் 24, 1961) பர்மிய நாட்டில் பிறந்து தற்போது சென்னை, வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி ஏழாவது தெருவில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கியம் படிப்பதிலும், படைப்பதிலும் ஆர்வமிக்கவரும், வணிகரும், புகைப்படம் பிடிப்பதில் மிக்க ஆர்வமுள்ளவரும், இரு நூல்களின் ஆசிரியருமாவார். இவரது பல்வேறு படைப்புகள் பல பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

எம். சுலைமான் பாட்சா[தொகு]

கோம்பை ஹாஜி எம். சுலைமான் பாட்சா (பிறப்பு: சூன் 3 1964) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சக்கரப்பள்ளி எனுமிடத்தில் பிறந்து தஞ்சை மாவட்டம் சக்கரப்பள்ளி கமாலியா தெருவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் குவைத்திலுள்ள அல்ஈமான் நற்பணி மன்றத்தின் தலைமை நிலைய செயலாளராவார்.

எம். ஏ. பசீர் அஹமத்[தொகு]

எம். ஏ. பசீர் அஹமத் (பிறப்பு: சூன் 5 1940) நாகை மாவட்டம் சீர்காழி ஜவஹர் தெருவில் வசித்து வரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், கவிஞரும், சமூக ஈடுபாடு மிக்கவரும், நான்கு நூல்களின் ஆசிரியரும், பல்வேறு பட்டங்களும், விருதுகளும் பெற்றவருமாவார்.

எம். ஏ. தாவூத் பாட்சா[தொகு]

எம். ஏ. தாவூத் பாட்சா, இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஜமாலியா தெரு ராஜகிரி தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்துவரும் இவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனரும், செயலாளரும், தாளாளரும், முதல்வரும், இலக்கியப் புரவலருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • தமிழ்மாமணி விருது

எம். எஸ். ராஜா முகமது[தொகு]

எம். எஸ். ராஜா முகமது இந்திய முஸ்லிம் எழுத்தாளர் காரைக்குடி ராஜா நகர் பெரியார் சிலை பின்புறம் டாக்டர் ஜாகீர் உசேன் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், வங்கி மேலாளரும், பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவரும், செயலாளரும், அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளருமாவார். இவரின் பல கட்டுரைகள் சிற்றேடுகளில் பிரசுரமாகியுள்ளன.

எல். எம். சரீப்[தொகு]

டாக்டர் எல்.எம். சரீப் (பிறப்பு: சனவரி 12, 1944) கோட்டக்குப்பத்தில் பிறந்து தற்போது விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ஹாஜி உசேன் வீதியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், வைத்தியருமாவார். இவரின் வைத்தியக்கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவந்வந்துள்ளன.

எஸ். கியாசுதீன்[தொகு]

தாய்லாந்து தமிழ்க் கழகம் என்ற அமைப்பின் தலைவர். மயிலாடுதுறை நகருக்கு அருகிலுள்ள குத்தாலம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் மாணிக்க வியாபாரம் செய்து வருகிறார். இலக்கிய ஆரவலர். இந்தியாவின் முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் அதிகம். ‘மக்கள் தேடும் புதிய பாரதம்’ என்ற நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

எஸ். ஃபைசுதீன்[தொகு]

எஸ். ஃபைசுதீன் (பிறப்பு: மார்ச்சு 2 1947) சிதம்பர மாவட்டம் என்னெரி எனுமிடத்தில் பிறந்து காஞ்சிபுரம் காமகோடி தெருவில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், வழக்கறிஞருமாவார். இவரது படைப்புகள் பத்திரிகைகளில் அவ்வப்போது பிரசுரமாகியுள்ளன.

எஸ். அப்துல் காதர்[தொகு]

ஹாஜி எஸ். அப்துல் காதர் (பிறப்பு: ஆகத்து 18 1932) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இராமநாதபுரம் மாவட்டத்தில், முதுகுளத்தூர் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், சமூக சேவைகளில் அதிகளவு ஈடுபாடு கொண்டவர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் ரஹ்மானியா தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளரும், ரஹ்மானியா ரிஸ்வான் பெண்கள் மத்ரஸா, ரஹ்மானியா எத்தீம்கானா முதலியவற்றின் நிர்வாகியுமாவார்.

எஸ். எம். முஹம்மது ஜக்கரிய்யா[தொகு]

அல்ஹாஜ் எஸ். எம். முஹம்மது ஜக்கரிய்யா (பிறப்பு: பெப்ரவரி 4 1935) இந்திய முஸ்லிம் கவிஞர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் பிறந்து தற்போது கோட்டக்குப்பம், வேங்கை வீதியில் வசித்துவரும் இவர் ஒரு விவசாயியும், இலக்கிய ஆர்வலருமாவார். இயல்பாக கவி பாடும் ஆற்றல் இவருக்குண்டு.

எஸ். ஏ. மும்மது இபுராகிம் மக்கி[தொகு]

எஸ்.ஏ. மும்மது இபுராகிம் மக்கி (பிறப்பு: மார்ச் 31 1975) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு காயல்பட்டினத்தில் பிறந்து, தற்போது காயல்பட்டினம் மரைக்காயர் தெருவில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், இதழியல்துறையில் மிக்கஆர்வமுள்ளவரும், சமூகசேவகருமாவார்.

எஸ். சாபிரா பேகம்[தொகு]

எஸ். சாபிரா பேகம் (பிறப்பு: ஏப்ரல் 1 1969) திருபுவனம் புதூரில் பிறந்து தற்போது அதிராம்பட்டினம் கல்லூரிச்சாலை பிஸ்மில்லா வளாகத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிப் பேராசிரியருமாவார்.

எஸ். சேக் அப்துல் காதர்[தொகு]

எஸ். சேக் அப்துல் காதர் காயல்பட்டினத்தில் பிறந்தவரான இவர் ஒரு கவிஞரும், காயல்பட்டினம் அரசுபொது நூலக வாசகர் வட்ட உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் நலச்சங்க உறுப்பினரும், காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை உறுப்பினருமாவார்.

எஸ். நூர் முஹம்மது[தொகு]

எஸ். நூர் முஹம்மது (பிறப்பு: சூன் 5 1965) நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் பிறந்து தற்போது ஈரோடு கருங்கல் பாளையத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், ஸ்டோர் நூல் எனும் புனைப் பெயரில் நன்கறியப்பட்டவரும், தமிழ், உருது போன்ற மொழிகளை நன்கறிந்தவரும், சமூக அக்கறைமிக்கவருமாவார். படைப்பிலக்கியத் துறையில் இவர் ஈடுபட்டுள்ளார்.

எஸ். பி. சையது முஹம்மது[தொகு]

எஸ். பி. சையது முஹம்மது (பிறப்பு 1932) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், திருப்பத்தூரில் பிறந்து திருச்சி பாலக்கரையில் வாழ்ந்துவரும் இவர் அன்னை கதீஜா மாத இதழின் ஆசிரியரும், ஆன்மீகத்துறையில் ஈடுபாடுமிக்கவருமாவார். இவரது படைப்புகள் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடுவன.

எஸ். பி. முஹம்மது இஸ்மாயில்[தொகு]

ஹாஜி எஸ். பி. முஹம்மது இஸ்மாயில் (பிறப்பு: மே 16 1972) சக்கராப்பள்ளி எனுமிடத்தில் பிறந்து தற்போது சென்னை பைக்கிராப்ஸ் ரோடு, ஜம்ஜம் ரியல் எஸ்டேட் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், வீட்டுமனை விற்பனையாளரும், முஸ்லிம் லீக் பதிப்பகச் செயலாளருமாவார்.

எஸ். முஹம்மது அலி[தொகு]

எஸ். முஹம்மது அலி (பிறப்பு: சனவரி 14 1937) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இராஜபாளையம் எனுமிடத்தில் பிறந்த தற்போது தேனி மாவட்டம் கம்பம். புதுப்பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் இவர் ஒருஇலக்கிய ஆர்வலரும், வணிகரும். புத்தகப்பிரியரும். இஸ்லாமிய இலக்கியங்கள் அடங்கிய சிறந்த நூலகத்துக்குச் சொந்தக்காரருமாவார்.

ஏ. ஆர். சையத் சுல்தான்[தொகு]

ஏ. ஆர். சையத் சுல்தான் இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சென்னை ஜமாலியா பெரம்பூர் நெடுஞ்சாலையில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், பி.எஸ்.ஸி. பட்டதாரியும், எழுத்தாய்வுதுறை மற்றும் சமூகப் பணிகளில் அதீத ஆர்வம் கொண்டவருமாவார்.

ஏ. ஆர். ஹாமீம் பாசா ரப்பானி[தொகு]

ஏ. ஆர். ஹாமீம் பாசா ரப்பானி (பிறப்பு: நவம்பர் 10 1978), கோட்டக்குப்பத்தில் பிறந்து தற்போது கோட்டக்குப்பம் நாட்டாண்மை தெருவில் வசித்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், இஸ்லாமிய நெறியைப் பரப்புபவரும், குர்ஆன் (தப்ஸீர்) விரிவுரையாளருமாவார்.

ஏ. இஹ்சானுல்லா[தொகு]

ஏ. இஹ்சானுல்லா (பிறப்பு: சூன் 14 1946), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கோட்டக்குப்பம் எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், விழுப்புரம் மாவட்டம் காயிதே மில்லத் தெரு, கோட்டக்குப்பத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக்கின் செயலாளரும், கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜிதின் முன்னாள் முத்தவல்லி.

ஏ. எம். எம். காதர் உசைன் சித்திக்[தொகு]

ஏ. எம். எம். காதர் உசைன் சித்திக் (பிறப்பு: நவம்பர் 5 1957) இந்தியா தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்து தற்போது கீழக்கரை மவுன் காழி எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், ஆய்வாளரும். கீழக்கரை டவுன் காழியாரும், திருச்சி அய்மான் கல்லூரி துணைத் தலைவரும் பல்வேறு விருதுகளைப் பெற்றவருமாவார்.

ஏ. எம். ஜக்கரிய்யா மரைக்கார்[தொகு]

ஏ. எம். ஜக்கரிய்யா மரைக்கார் (பிறப்பு: நவம்பர் 30 1934) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா காரைக்காலில் பிறந்து, வசித்துவரும் இவர் ஒரு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியரும், காரைக்கால் ரோட்டரி சங்கத் தலைவரும், 4 ரோட்டரி மண்டலத்தின் செயலாளருமாவார்.

ஏ. எம். ஹாஜா பந்தே நவாஸ்[தொகு]

ஏ. எம். ஹாஜா பந்தே நவாஸ் கெம்பலாபாத் தூத்துக்குடி முத்துவாப்பா மெயின்ரோடுவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும். எழுத்தாளரும், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றவருமாவார்.

ஏ. எம். ஹாஜா பந்தேநவாஸ் மஹமூது[தொகு]

ஏ. எம். ஹாஜா பந்தேநவாஸ் மஹமூது (பிறப்பு: சனவரி 30 1933 சிவராம மங்கலம் எனுமிடத்தில் பிறந்து தற்போது கேம்பலாபாத் முத்து வாப்பா மெயின்ரோடுவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும். கவிஞரும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றவருமாவார்.

ஏ. எல். முஹம்மது ஜஹபர் சாதிக் மரைக்காயர்[தொகு]

ஏ. எல். முஹம்மது ஜஹபர் சாதிக் மரைக்காயர் (பிறப்பு: சூன் 30 1980) இந்திய முஸ்லிம் எழுத்தாளர். இந்தியா காரைக்காலில் பிறந்து தற்போது காரைக்கால் மார்க்கெட் வீதியில் வசித்துவரும் இவர் கோகுலம், ராணி, தேவி, சிறுவர்மணி, தினகரன் வசந்தம், ஞாயிறு மலர், தினத்தந்தி, குடும்ப மலர், இளைஞர் மலர் மாலைமலர், மகளிர் மலர் போன்ற பல்வேறு இதழ்களில் எழுதிவருகின்றார். கோட்டுச் சேரி வ.உசிதம்பரனார் அரசு மேனிலைப்பள்ளியில் கணினி பயிற்றுனராகவும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றிவருகின்றார்.

ஏ. எஸ். அப்துல் மாஜித் ரப்பானி[தொகு]

மௌலவி ஏ. எஸ். அப்துல் மாஜித் ரப்பானி, (பிறப்பு: டிசம்பர் 30 1964), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பரகத் நகர், கோட்டக்குப்பம், விழுப்புரம் மாவட்டதைச் சேர்ந்த இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், ஆசிரியரும், கோட்டப்குப்பம் இஸ்லாமிய பைத்துல்மால் செயலாளரும் ஆவார். தற்போது பைண்டிங் தொழில் ஈடுபட்டுவருகின்றார்.

ஏ. எஸ். தாஜுதீன்[தொகு]

ஏ. எஸ். தாஜுதீன் (பிறப்பு 1962) இந்திய முஸ்லிம் எழுத்தாளர். தேரிழந்தூரில் பிறந்த இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், பாடகரும், சமுதாயப் பணிகளில் மிக்க ஆர்வமுள்ளவருமாவார். இவரது பாடல்கள் ஒலிப்பேழைகளாகவும், குறுந்தட்டுகளாகவும் வெளிவந்துள்ளன.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • தீனிசைத் தென்றல்
  • தீனிசை வேந்தர்

ஏ. எஸ். முஹம்மது ரஃபி[தொகு]

ஏ. எஸ். முஹம்மது ரஃபி இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஜெமீமா மன்சில், 3வது தெரு, நியூ பெத்லஹம் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஆங்கிலத்துறை பேராசிரியரும் பல சிறுகதைகள் எழுதி பரிசுகள் வென்றவருமாவார்.

ஏ. கே. முஹம்மது யாசீன்[தொகு]

ஏ. கே. முஹம்மது யாசீன் (பிறப்பு: அக்டோபர் 20 1950) காரைக்காலில் பிறந்து தற்போது காரைக்கால் புதுத்துறை பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் இவர் மத்திய அரசின் பொதுத்துறை நிறுனவத்தில் 32 ஆண்டுகள் பணியாற்றியவரும், நிதி ஆலோசகரும், இலக்கிய ஆர்வலரும், சமூகசேவகருமாவார். ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஏ. சேக்மதார்[தொகு]

ஏ. சேக்மதார் இந்தியா, தமிழ்நாடு, சென்னையில் பிறந்து தற்போது மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டென்ஷன் நஜீம் காம்பளக்ஸ் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், இஸ்லாமிய பாடகருமாவார்

வெளியிட்ட இசைப்பேழைகள்:

  • வரீம் யாஹபீபே
  • அருள்வாய் யாஅல்லாஹ்
  • மங்கையர்க்கரசி பாத்திமா
  • அருளிசை அருவி

ஏ. ஜே. ஆலம்[தொகு]

ஏ. ஜே. ஆலம் (பிறப்பு: டிசம்பர் 13, 1970)ல் இராமநாதபுரம் மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், 'முகவை முரசு' இதழாசிரியரும், இந்திய தேசிய காங்கிரஸின் மாவட்டப் பொதுச் செயலாளரும், இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பாளரும், பரமக்குடியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் கிளையை நிறுவி மாவட்டத் தலைவராகப் பணியாற்றி வருபவரும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் மாநில துணைச் செயலாளருமாவார்.

ஏ. டபிள்யு. சகின்சா[தொகு]

ஏ. டபிள்யு. சகின்சா (பிறப்பு: மே 19, 1959) இந்தியா, திருச்சியில் பிறந்து தற்போது திருச்சி தஞ்சை ரோடு எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், தமிழ், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை நன்கறிந்தவருமாவார். இலக்கியத்தில் கவிதைத்துறையில் இவருக்கு ஈடுபாடு அதிகம்.

ஏ. பி. எம். அப்துல் காதிர்[தொகு]

ஏ. பி. எம். அப்துல் காதிர் (பிறப்பு: மார்ச்சு 6, 1960) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இவர் மேலப்பளையம் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். குர்ஆன் அறிவியல் ரீதியாக 350க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலப்பாயைம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவரும், திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி அமைப்பாளருமாவார். சென்னையில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் 5000 ரூபாய் பொற்கிழி பெற்றுள்ளார்.

ஏ. முகம்மது இக்பால்[தொகு]

ஏ. முகம்மது இக்பால் (பிறப்பு: ஆகத்து 28 1942) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புதுமனைத்தெரு ஆக்கூர் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு விவசாயியும், இலக்கிய ஆர்வலரும், கல்விப் பணி, சமூகப் பணிகளில் அதிகம் ஆர்மிக்கவரும், ஆக்கூர் ஒரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளிச் செயற்குழு உறுப்பினருமாவார்.

ஏ. முத்தலிப்[தொகு]

ஏ. முத்தலிப் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் எனுமிடத்தில் பிறந்து தற்போது கோட்டக்குப்பம் உமறுப்புலவர் வீதியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், சமுதாயப் பணிகளில் ஆர்வமுள்ளவருமாவார்.

ஐ. லியாக்கத் அலி[தொகு]

ஐ. லியாக்கத் அலி இந்திய முஸ்லிம் எழுத்தாளர், தெய்தா வீதி காரைக்காலில் வசித்துவரும் இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் வேதியல்துறைத் தலைவரும், இலக்கிய ஆர்வலரும், அறிவியல் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியவருமாவார்.

ஓ. எம். அப்துல் காதர் பாகவி[தொகு]

ஓ. எம். அப்துல் காதர் பாகவி (பிறப்பு: சூன் 1 1948), இந்தியா, நெல்லை மாவட்டம், வடகரை எனுமிடத்தில் பிறந்த இவர், ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் நிறுவனத்தின் முதல்வராவார். நீடூர் JMH அரபிக் கலாசாலையில் சுமார் 23 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் ஆன்மீகம், இலக்கியம், பொதுநலம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்டுள்ளார்.

ஓ. நசீமா பானு[தொகு]

ஓ. நசீமா பானு (பிறப்பு ஆகத்து 9 1965) தொண்டி எனுமிடத்தில் பிறந்து தற்போது இந்தியா, தமிழ்நாடு சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசித்துவரும் இவர் இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் மகளிர் பிரிவுத் துணைத்தலைவியும், சென்னை ஜஸ்டிஸ் பசீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியரும், 2002ல் இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் ஆய்வுரை நடத்தியவரும், 2011ல் மேத்திங்களில் மலேசியாவில் இடம்பெற்ற உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் பேராளராகப் பங்கேற்றவரும், பொதிகைத் தொலைக் காட்சியில் எதிரும் புதிரும் நிகழ்ச்சியை நடத்தியவரும், ஆய்வரங்குகள் உரையரங்குகள் பட்டிமன்றங்களில் பங்கேற்பவருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • நிறைஞர் பட்டம்
  • முனைவர் பட்டம்
  • நல்லாசிரியர் விருது

பொன்னகரம் சுல்தான்[தொகு]

பொன்னகரம் சுல்தான் (பிறப்பு: மார்ச்சு 13 1942) பர்மா இரங்கூன் எனுமிடத்தில் பிறந்து தற்போது இந்தியா, சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகரில் வாழ்ந்துவரும் இவர் ஒரு கவிஞரும், எழுத்தாளரும். இலக்கிய ஆர்வலரும், பத்திரிகை ஆசிரியரும், இதழியல் துறையில் மிக்க ஆர்வமுள்ளவருமாவார்.

கா. மு. ஜக்கரியா[தொகு]

கா. மு. ஜக்கரியா (பிறப்பு: மார்ச்சு 13 1929), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், எலந்தங்குடியில் பிறந்து மயிலாடுதுறை ஆசாத் தெரு எலந்தங்குடியிலே வசித்துவரும் இவர் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் பொருளாளரும், 10 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாடுபட்டவரும், நவாசம்மா நூலகத்தின் பொறுப்பாளரும், நீடூர் அரபிக் கல்லூரிப் பொன்விழா மலரின் தொகுப்பாசிரியரும், எலந்தங்குடி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், மயிலாடுதுறை திருவாரூர் சாலை முஸ்லிம் ஜமாஅத்தின் செயலாளருமாவார். இவரது படைப்புகள் திராவிடப் புயல், உதயம், முஸ்லிம் முரசு, கல்கி, ஆனந்த விகடன், காலச்சுவடு போன்ற இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. தமிழ்மாமணி விருது பெற்றுள்ளார்.

கே. இசட். இனாயத்துல்லாஹ்[தொகு]

கே. இசட். இனாயத்துல்லாஹ் (பிறப்பு: சனவரி 4, 1969) இந்திய முஸ்லிம் எழுத்தாளர். அய்யம்பேட்டை எனுமிடத்தில் பிறந்து காரைக்குடி நாகலிங்கம் தெரு செஞ்சை எனுமிடத்தில் வசித்துவருபவருமான இவர், இலக்கிய ஆர்வலரும், சிவகங்கை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளரும், தேவகோட்டை ரஸ்தா முஸ்லிம் ஜமாஅத்தின் பொருளாளருமாவார்.

கே. உதுமான்[தொகு]

கே. உதுமான் (பிறப்பு: சனவரி 2 1957 இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புளியங்கடி எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இவர் மேனாள் நகரமன்ற உறுப்பினரும், பொதுத் தொண்டுகளில் அதிக ஆர்வமிக்கவருமாவார்.

கே. என். எஸ். ஹாஜா பதுருத்தீன்[தொகு]

கே. என். எஸ். ஹாஜா பதுருத்தீன் (பிறப்பு: அக்டோபர் 10 1956) திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பிறந்து தற்போது சவ்கத் அலித் தெருவில் வசித்துவரும் இவர், ஒரு கவிஞரும் இலக்கிய ஆர்வலரும், சமூகசேவகரும், பல அமைப்புகளின் பொறுப்பாளருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • பொதுப்பணிப் புரவலர்
  • வாழ்த்தொளி வள்ளல்

கி.மு. நூர் முஹம்மது[தொகு]

கி.மு. நூர் முஹம்மது (பிறப்பு: டிசம்பர் 4 1932) திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் பிறந்து, தற்போது நூஃபா இல்லம், # 62, மேலத்தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமூகப் பணியாளருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இந்திய, மலேசிய இதழ்களிள் பிரசுரமாகியுள்ளன.

இவர் நிறுவி, நிர்வகித்துவரும் நூலகம்:

கதீஜா ஷரீஃப் நூலகம்

கே. எஸ். ஏ. பாத்திமா கலிபா[தொகு]

கே. எஸ். ஏ. பாத்திமா கலிபா (பிறப்பு: டிசம்பர் 19 1968) இந்தியா தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறந்து தற்போது காயல்பட்டினம் நெய்னா தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், வாசிப்புத்துறையில் அதிக ஈடுபாடுமிக்கவருமாவார். அத்துடன் பல்வேறுபட்ட மாத இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

கே. ஏ. அப்துல் நசீர்[தொகு]

கே. ஏ. அப்துல் நசீர் (பிறப்பு: செப்டம்பர் 17 1964), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஹக்கீம் நகர், சக்கராப்பள்ளி என்ற இடத்தைச் சேர்ந்த இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், அய்யம்பேட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நகரச் செயலாளரும், பொதுநலப் பணிகளில் அதிக ஆர்வமுள்ளவருமாவார்.

கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர்[தொகு]

கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர் (பிறப்பு: செப்டம்பர் 6 1971) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா காயல்பட்டினத்தில் பிறந்து தற்போது, சென்னை வேப்பேரியில் வசித்துவரும் இவர் இலக்கிய ஆர்வலரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொதுச் செயலாளரும், மணிச்சுடர் நாளிதழின் நிர்வாக இயக்குநரும், காயல்பட்டினம் 15வது ஏற்பாட்டுக்குழு பொதுச் செயலாளருமாவார்.

கே. ஏ. ஜெஹபர் உசேன்[தொகு]

கே. ஏ. ஜெஹபர் உசேன் (பிறப்பு: சனவரி 24, 1962) இந்திய முஸ்லிம் கவிஞர். கூத்தாநல்லூரில் பிறந்து தற்போது திருவாரூர் மாவட்டம் மேலத்தெரு கூத்தாநல்லூரில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், சமூகசேவகரும், இலக்கியத் தென்றல் என்ற பட்டம் பெற்றவரும், நாட்டுப்புறவியலில் மிக்க ஆர்வம் கொண்டவருமாவார். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட இவர் நூல் பிணைப்பம் தொழிலையும் மேற்கொண்டுவருகின்றார்.

கே. ஏ. ராஜ் முஹம்மது[தொகு]

கே. ஏ. ராஜ் முஹம்மது (பிறப்பு: சூன் 15 1947) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை தெற்குத் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கல்விப் பணியில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று அதனை திறன்படச் செய்து வருபவருமாவார். இவரின் கல்விசார் ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. நாவலர் யூசுப் விருது பெற்றுள்ளார்.

கே. ஏ. ஹிதாயத்துல்லாஹ்[தொகு]

கே. ஏ. ஹிதாயதுல்லா (பிறப்பு: மே 30 1974) இந்தியா தமிழ்நாடு, பரமக்குடியில் பிறந்து தற்போது இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டாக்டர் ராஜன் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், பட்டிமன்றப் பேச்சாளரும், இதழாசிரியரும் இஸ்லாமியத் தமிழிக்கியக் கழகத்தின் மாவட்ட துணை அமைப்பாளருமாவார்.

கே. சாதிக்[தொகு]

கே. சாதிக் (பிறப்பு: செப்டம்பர் 16 1934), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பாளையங்கோட்டை பர்க்கிட் மாநகரத்தில் பிறந்த இவர் தற்போது சென்னை அடையாறு தாமோதரம் புறம் முதன்மைச்சாலையில் வசித்து வருகின்றார். இவர் ஒரு கவிஞரும், அறிவியல் அறிஞரும், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், 100க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதியவருமாவார்.

கே. சையத் ஜாஹிர் ஹுசைன்[தொகு]

கே. சையத் ஜாஹிர் ஹுசைன் (பிறப்பு: டிசம்பர் 30 1966) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பரங்கிப்பேட்டையில் பிறந்த இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட இளைஞர் அணி இணையமைப்பாளரும், அரபாத் நற்பணி மன்றத் தலைவருமாவார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்:

  • வி.ஜி.பி. விருது
  • தமிழ் மாமணி விருது

கே. பஜுல் ரஹ்மான்[தொகு]

கே. பஜுல் ரஹ்மான் இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கோட்டக்குப்பம் பெரிய தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், புத்தப்பிரியரும், கணக்காளரும், சமூகச் சேவகருமாவார்.

கே. முஹம்மது ஹிதாயதுல்லாஹ்[தொகு]

கே. முஹம்மது ஹிதாயதுல்லாஹ் (பிறப்பு: மே 4 1973 இந்திய முஸ்லிம் எழுத்தாளர், முதுகுளத்தூர் எனுமிடத்தில் பிறந்து தற்போது வசந்தபுரம் பரமக்குடி எனுமிடத்தில் வசித்துவரும் இவர் மணிச்சுடர் முஸ்லிம் டைம்ஸ், மறுமலர்ச்சி செய்தியாளராவார். வினாடிவினா, கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.

ச. சேட்டு மதார்சா[தொகு]

ச. சேட்டு மதார்சா (பிறப்பு: மார்ச்சு 29 1981) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஈரோடு எனுமிடத்தில் பிறந்து தற்போது ஈரோடு, மரப்பாலம் மருத்துவமனை அருகில் நேதாஜி வீதியில் வாழ்ந்துவரும் இவர் ஒர் இலக்கிய ஆர்வலரும், ஆய்வாளரும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டுக் கருத்தரங்கிலும், தேசியக் கருத்தரங்கிலும் வழங்கியவரும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசில்களை வென்றவருமாவார்.

சபீர் உசேன்[தொகு]

சபீர் உசேன் இந்திய முஸ்லிம் எழுத்தாளர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பரக்கத் நகர் புதிய பிரதான வீதியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலராவார்.

சா. அப்துல் ஹமீது[தொகு]

சா. அப்துல் ஹமீது (பிறப்பு: ஏப்ரல் 21, 1956), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பரங்கிப்பேட்டை எனுமிடத்தையைப் பிறப்பிடமாகவும், கடலூர் மாவட்டதை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் சோழிந்கநல்லூர் முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரும், சீறாப்புராணம் அலிமா முலையூட்டுப் பாடல் உரையாசிரியரும், 1979ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலையில் முதல் மாணவராகத் தேறி தெ.பொ.மீ. தங்கப்பதக்கம் பெற்று சிறப்பிக்கப்பட்டவரும், சைவ சித்தாந்தத்தில் முதல் மதிப் பெண்பெற்று திருப்பனந்தாள் மடத்துப் பரிசும் பெற்றவருமாவார்.

சா. இக்பால் உசேன்[தொகு]

சா. இக்பால் உசேன் (பிறப்பு: அக்டோபர் 8 1984)ல் இந்தியா காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஓர் இளம் கவிஞர். காட்சி வழித் தொடர்பியல், தகவல் தொடர்பியல், ஒளிப்படக்கலை போன்ற துறைகளில் அதிக ஆர்வமிக்கவர். ஹாரிசான் விளம்பரப்பட நிறுவனத்தின் பொறுப்பாளரும், இந்திய அளவில் நடைபெற்ற அனிமேசன் போட்டியில் வெற்றிபெற்றவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் செயற்குழு உறுப்பினருமாவார்.

சிராஜுல் ஹஸன்[தொகு]

சிராஜுல் ஹஸன் (பிறப்பு: செப்டம்பர் 20 1955) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சேலம் ஆத்தூர் எனுமிடத்தில் பிறந்து, சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலை சமரசம் எனும் முகவரியில் வாழ்ந்துவரும் இவர் சமரசம் இதழின் பொறுப்பாசிரியரும், 3 கட்டுரை நூல்களையும், ஒரு குழந்தை இலக்கிய நூலையும், ஒரு சிறுகதைத் தொகுப்பு நூலையும் எழுதி வெளியிட்டவருமாவார்.

செ. சர்தார் முஹம்மது மீரான்[தொகு]

செ. சர்தார் முஹம்மது மீரான் (பிறப்பு: மார்ச்சு 28 1969) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி எனுமிடத்தில் பிறந்து, திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அஞ்சல் படிக்கட்டுப் பள்ளி வாசல் தெருவில் வசித்துவருகின்ற இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமாவார்.

செ. ஜாஃபர் அலி[தொகு]

புலவர் செ. ஜாஃபர் அலி தமிழக முஸ்லிம் எழுத்தாளர் கும்பகோணம் அல்அமீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் வசித்துவரும் இவர் ஒரு தமிழாசிரியரும், இலக்கிய ஆர்வலரும், ஆங்கிலம் அரபி ஆகிய மொழிகளை நன்கறிந்தவருமாவார். இவரது பல்வேறு படைப்புகள் பல்வேறுபட்ட இதழ்களிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளன. நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

செ. முகம்மது அலீசாகிபு[தொகு]

செ. முகம்மது அலீசாகிபு (பிறப்பு: அக்டோபர் 25 1945) நம்பூந்தாழையில் பிறந்து கடலூர் தங்கராஜ் நகர் தோணித்துறை தாழையன் எனும் முகவரியைக் கொண்ட இவர் ஒரு எழுத்தாளரும், ஊடகத்துறையில் நாட்டமுடையவரும், நூலாசிரியரும், பல்வேறு விருதுகளையும், பரிசில்களையும் பெற்றவரும், 20க்கும் அதிகமான நூல்களை எழுதியவருமாவார்.

காயல் மஹபூப்[தொகு]

காயல் மகபூப் (பிறப்பு: நவம்பர் 10 1955) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு காயல்பட்டினத்தில் பிறந்து தற்போது முத்துதெரு சாந்தோம், சென்னையில் வசித்துவரும் இவர் ஒரு பத்திரிகையாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலச் செயலாளரும், மணிச்சுடர் நாளிதழின் செய்தி ஆசிரியரும், எண்ணற்ற விமர்சனக் கட்டுரைகளை எழுதியவரும், காயல்பட்டினம் மாநாட்டு மலரின் பொறுப்பாசிரியருமாவார்.

சே. சையது அபுதாகிர்[தொகு]

சே. சையது அபுதாகிர் (பிறப்பு: சூலை 20 1979) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், திருச்சி மாவட்டத்தில் இனாம் குளத்தூர் எனுமிடத்தில் பிறந்து சென்னையில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சென்னை புதுக்கல்லூரி உதவிப் பேராசிரியரும், கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகியவற்றில் மிக்க ஆர்வமுள்ளவரும், சிறந்த ஆய்வாளருமாவார்.

ஜெ. ராஜா முகமது[தொகு]

ஜெ. ராஜா முகமது (பிறப்பு: நவம்பர் 18 1946) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், உடையார் பாளையம் எனுமிடத்தில் பிறந்து ஜீவா நகர் முதல் வீதி, புதுக்கோட்டையில் வசித்துவரும் இவர் தமிழக அருங்காட்சியகத்துறையில் உதவி இயக்குநரும், 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் துணைத் தலைவருமாவார்.

ஜே. உதுமான் மைதீன்[தொகு]

ஜே. உதுமான் மைதீன் (பிறப்பு: சனவரி 26 1949) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், குமரி மாவட்டத்தில் பிறந்த இவர் ஒரு வழக்கறிஞரும், பேச்சாளரும், பல்வேறு அமைப்புகளில் பொறுப்பாளருமாவார். இவரது கட்டுரைகள் சமுதாயப் பணி, சமரசம் போன்ற இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

ஜே. நிசார் அஹமது[தொகு]

ஜே. நிசார் அஹமது (பிறப்பு: மே 8 1972) நாகூரில் பிறந்து தற்போது காரைக்கால் கணபதி நகர் பள்ளிவாசல் தெரு சல்மா மன்ஜில் எனும் முகவரியில் வசித்து வரும் இவர் ஒரு கவிஞரும், இலக்கிய ஆர்வலரும், கணினி விளம்பரத் துறையில் ஆர்வமுள்ளவரும், அஞ்சல் தலை, பழைய நாணங்கள், பழங்கால நூல்கள், பழங்கால அஞ்சல் உறைகள் சேகரிப்பதில் அதீத ஆர்வமுள்ளவருமாவார்.

ஜே. மு. அப்துல் காஸிம் ராஜாஜி[தொகு]

ஜே. மு. அப்துல் காஸிம் ராஜாஜி (பிறப்பு: சூன் 18 1972) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் பிறந்த இவர், அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயலாளரும், துபாயிலுள்ள ரமளான் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளருமாவார். பிறைச்சுடர் விருது பெற்றுள்ளார்.

ஜே. முஹம்மது தாஜ் முஹ்யித்தீன்[தொகு]

ஜே. முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் (பிறப்பு: மார்ச்சு 18 1944) ஈரோடுவில் பிறந்து தற்போது ஈரோடு திருநக் காலனியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், ஆன்மீகத் துறையில் நாட்டமுள்ளவரும், பல்வேறு விருதுகளையும், பரிசில்களையும் வென்றவரும், பல அமைப்புகளின் பொறுப்பாளருமாவார்.

ஜைனுல் ஆபிதீன்[தொகு]

காஜி ஜைனுல் ஆபிதீன் (பிறப்பு: சனவரி 21 1941) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கோட்டக்குப்பம் எனுமிடத்தில் பிறந்து விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காஜியார் வீதியில் வாழ்ந்துவரும் இவர் இஸ்லாமியத் தமிழலக்கியக் கழகத்தின் துணைத் தலைவரும், பேச்சாளரும், சமூகப் பணியாளரும், இலக்கிய ஆர்வலரும், கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தின் துணைத்தலைவரும், இலக்கியக் கழகத்தின் 6வது மற்றும் 9வது ஆண்டு பெருவிழாவை முன்னின்று நடத்திய இவர் அஞ்சுமன் நூஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்தின் பொதுச் செயலாளருமாவார். தமிழ்மாமணி விருது பெற்றுள்ளார்.

த. மு. சா. காஜா முகைதீன்[தொகு]

த. மு. சா. காஜா முகைதீன் (பிறப்பு: சூன் 3 1940 இந்திய முஸ்லிம் எழுத்தாளர், மேலப்பாளையம் எனுமிடத்தில் பிறந்து தற்போது திருநெல்வேலி மாவட்டம் உமறுப்புலவர் தெரு, மேலப்பாளையத்தில் வசித்துவரும் இவர் பதிப்பக உரிமையாளரும், நெல்லை மாவட்டத் திருக்குறள் பேரவைச் செயலாளரும், நெல்லை மாவட்டத் திருவருட் பேரவையின் பொருளாளரும், நெல்லை மாவட்ட இஸ்லாமியத் தமிழிலக்கியப் பேரவையின் செயலாளரும், மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும், நெல்லைக் கம்பன் கழகத்தின் அவைப்புலவருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

ப. கா. ஈ. அப்துல்லாஹ்[தொகு]

ப. கா. ஈ. அப்துல்லாஹ் (பிறப்பு: ஏப்ரல் 4, 1930) விவசாயம், வணிகம் ஆகிய தொழில்களைச் செய்துவரும் இவர் விளம்பரத் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் ஒரு எழுத்தாளரும், பேச்சாளரும், பத்திரிகை முகவரும்கூட. அத்துடன் மணிவிளக்கு துணை ஆசிரியராகவும், அறமுரசு நாளிதழின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய இதழ்களில் எழுதி வருபவம் இவர் பயணக் கட்டுரைகள் எழுதுவதில் திறமைமிக்கவர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவரும், நீடூர் அரபிக் கல்லூரி, தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கம் ஆகியவற்றின் செயற்குழு உறுப்பினருமாவார். தமிழ்மாமணி விருது பெற்றுள்ளார்.

ப. சிராஜுதீன்[தொகு]

ப. சிராஜுதீன் (பிறப்பு: சூலை 7 1978), கோயம்புத்தூரில் பிறந்து தற்போது ஈரோடு பெரியார் நகரில் வாழ்ந்துவரும் இவரொரு எழுத்தாளரும், சென்னைப் புதுக்கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியரும், காங்கேயம் மனிதநேயக் கமிட்டியின் கௌரவ ஆலோசகரும், ஈரோடு அல்-அமீன் முன்னாள் மாணவர்க் சங்கத்தின் ஆலோசகருமாவார்.

ப. சையத் அஹ்மத்[தொகு]

ப. சையத் அஹ்மத் (பிறப்பு: அக்டோபர் 18 1949), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் எனுமிடத்தில் பிறந்து, சீர்காழி மாவட்டம் கொள்ளிடம் பரகத் தெரு, துளசேந்திரபுரம், உம்முல் மன்சில் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமரசம் பத்திரிகையின் முகவரும், வாசிப்புத்துறையில் அதீத ஈடுபாடுமிக்கவருமாவார்.

பா. மொஹிதீன் பாசா[தொகு]

பா. மொஹிதீன் பாசா (பிறப்பு: மே 26 1989) இந்தியாவில் வளர்ந்துவரும் ஒரு முஸ்லிம் எழுத்தாளர். இந்தியா, தமிழ்நாடு, சென்னையில் பிறந்து தற்போது சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் வசித்துவரும் இவர் புதுக்கவிதைகள் எழுதுவதில் கூடிய ஆர்வம் காட்டி வருகின்றார். மேலும், மனித உரிமைக்கழக உறுப்பினரான இவர் மாவட்டக் கல்லூரி அளவில் புதுக்கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றுமுள்ளார்.

பி. எஸ். கஸ்பார்[தொகு]

பி. எஸ். கஸ்பார் (பிறப்பு: சூன் 26 1942 காரைக்காலில் பிறந்து வாழ்ந்துவரும் இவர் ஓவிய ஆசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும், 30க்கும் மேற்பட்ட நூல்களுக்கு முகப்போவியம் வரைந்தவருமாவார். இவரது கவிதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • சிறந்த ஓவியர் விருது - புதுவை மாநில ஓவியர் மன்றம்
  • ஆனந்த விகடன் நடத்திய ஹைக்கூ கவிதைப் போட்டிப் பரிசு
  • மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த ஓவியம், சிறந்த சுலோகத்துக்கான பரிசு

பி. எஸ். பசீர் அகமது[தொகு]

பி. எஸ். பசீர் அகமது (பிறப்பு: பெப்ரவரி 15 1965) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி எனும் பிரதேசத்தில் பிறந்து காரைக்கால், முதல் கிராஸ் பெசண்ட் நகரில் வாழ்ந்துவரும் இவரொரு இலக்கிய ஆர்வலரும், எழுது பொருள் விற்பனையாளருமாவார்.

பி. ஏ. முகம்மது நஜீப்[தொகு]

சிம்லா ஹாஜி பி. ஏ. முகம்மது நஜீப் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைப் பிறப்பிடமாகவும்; அய்யம்பேட்டை கள்ளத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், பொதுநலப் பணியாளரும், கட்டிடக் கலைஞருமாவார்.

பி .கே. இ. ஏ. நஸீர்[தொகு]

பி .கே. இ. ஏ. நஸீர் (பிறப்பு: மார்ச்சு 15 1970) வலங்கைமான் எனுமிடத்தில் பிறந்து சென்னை மந்தவெளி செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், விளம்பர நிறுவனரும், ஊடகத்துறையில் மிக்க ஆர்வமுள்ளவருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பி. சாகுல் ஹமீது[தொகு]

பி. சாகுல் ஹமீது (பிறப்பு: நவம்பர் 12, 1950) தோப்புத்துறையில் பிறந்து தற்போது நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறை சின்னப்பளிவாசல் தெருவில் வசித்துவரும் இவர் ஓர் இலக்கிய ஆர்வலரும், விவசாயியும், பல்வேறு கட்டுரைகளை எழுதியவரும், ஆன்மீக ஈடுபாடுமிக்கவருமாவார். சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.

பி. மு. மன்சூர்[தொகு]

பி. மு. மன்சூர் (பிறப்பு சூலை 21 1949) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கம்பம் எனுமிடத்தில் பிறந்து தற்போது மகாலட்சுமி நகர், திருச்சியில் வாழ்ந்துவரும் இவர், திருச்சி ஜமால் கம்மது கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரும், பேச்சாளரும், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவருமாவார்.

பீ. சுலைஹா சகீல்[தொகு]

பீ. சுலைஹா சகீல் (பிறப்பு: ஏப்ரல் 25 1976) இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர், காயல்பட்டணத்தில் பிறந்த இவர் ஒரு இலக்கிய ஆர்வலர்.

பொன். கௌது மீரான்[தொகு]

பொன். கௌது மீரான் (பிறப்பு: சூன் 3 1962) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், நத்தம் எனுமிடத்தில் பிறந்த இவர் ஒரு தமிழ் விரிவுரையாளரும், பேச்சாளரும், சமூகச் சிந்தனைமிக்கவரும், மனிதநேயம் வளர்க்க விரும்புவருமாவார்.

மு. அ. கா. காதர் சுலைமான்[தொகு]

மு. அ. கா. காதர் சுலைமான் (கவிபதூல்) (பிறப்பு: ஏப்ரல் 4 1966, இந்தியா, காயல்பட்டினத்தில் பிறந்து காயல்பட்டினம் அலியார் தெருவில் வாழ்ந்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், வணிகரும், ஹரம் சரீப் முதுநிலை மேற்பார்வையாளருமாவார்.

மு. அ. முகம்மது உசேன்[தொகு]

முனைவர் மு. அ. முகம்மது உசேன் இந்திய முஸ்லிம் எழுத்தாளர், (பிறப்பு: நவம்பர் 21 1967), திருவிடைமருதூர் எனுமிடத்தில் பிறந்து கும்பகோணம் திருவள்ளுவர் நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்துவரும் இவரொரு பேராசிரியரும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், ஆய்வாளரும், பல்வேறு விருதுகளையும், பரிசில்களையும் பெற்றவரும், கவிதை, இதழியல் துறைகளில் மிக்க ஆர்வமுள்ளவரும், சமூகத் தொண்டருமாவார்.

மு. அகமது கபீர்[தொகு]

மு. அகமது கபீர் (பிறப்பு: நவம்பர் 14 1958). இந்தியாவின் கோட்டாறுவில் பிறந்த இவர் ஒரு எழுத்தாளரும், சமூகப் பணியாளரும், அஞ்சல் தலை, நாணயம், பழங்கலைப் பொருள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றை சேகரிப்பில் ஆர்வம் காட்டிவருபவருமாவார். மேலும் வணிக முகவராகவும் பணியாற்றி வருகின்றார். தற்போது கோட்டாறு, இளங்கடை, மேலப் புதுத் தெருவில் வசித்து வருகின்றார்.

இலக்கியத்துறைப் பதவிகள்:

  • இலைகள் இலக்கிய இயக்கத் தலைவர்
  • பன்னாட்டு சமய சுதந்திர பேரமைப்பின் இணைச் செயலாளர்
  • சீறா செய்யது அபுபக்கர் புலவர் நினைவு நிதியப் பொருளாளர்.
  • சதாவதானி செய்கு தம்பிப்பாவலர் அரசு மேல்நிலைப் பள்ளி பீ.டி.ஏ. இணைச் செயலாளர்.
  • திருவருட் பேரவை உறுப்பினர்.
  • தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர். நலவாரிய உறுப்பினர்.
  • 'சிலாபம்' சிற்றிதழ் ஆசிரியராகவும் கடமை புரிந்து வருகின்றார்.

மு. அப்துல் சலாம்[தொகு]

மு. அப்துல் சலாம் (பிறப்பு: மே 15, 1952 இந்திய முஸ்லிம் எழுத்தாளர், நீர் தேக்கி சாலை, நாகர் கோவில் என்ற இடத்தைச் சேர்ந்த இவர், அரசுப்பணி அலுவலரும், இலக்கிய ஆர்வலரும், குமரி மாவட்ட பொதுப்பணித்துறை பணியாளர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளரும், நாகர்கோவில் குடிமக்கள் உரிமைச்சங்கம், திருவட் பேரவை, இந்திய சமூக விஞ்ஞானிக் கழகம், இஸ்லாமிய கலாசாரக் கழகம் முதலிய அமைப்புக்களில் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டுவருபவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் செயற்குழு உறுப்பினருமாவார்.

மேலும் இவர் அரசியல், கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் சமுதாயப் பணிகள் ஆகியவற்றில் மிக்க ஆர்வம்காட்டிவருபவர். பல்வேறு சிறப்பு மலர்களிலும் இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

மு. சாகுல் கமீது[தொகு]

மு. சாகுல் கமீது (பிறப்பு: சூன் 1 1954) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புளியங்குடியில் பிறந்து தற்போது திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகா புளியங்குடி, முஸ்லிம் புதுமனை, 1வது தெருவில் வாழ்ந்துவரும் இவர் தலைமையாசிரியரும், புளியங்குடி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நகரப் பொருளாளருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • மனிதநேயப் பண்பாளர்
  • சிகரம் தொட்ட ஆசிரியர்
  • நல்லாசிரியர் விருது
  • டாக்டர் இராதகிருஸ்ணன் விருது

மு. சாஹிரா பானு[தொகு]

மு. சாஹிரா பானு (பிறப்பு: பெப்ரவரி 5 1981) பெரம்பலூர் மாவட்டம் களத்தூரில் பிறந்து, பெரம்பலூர் மாவட்டம் காந்தி நகர் அரும்கபாவூர் அரசினர் மகளிர் விடுதி எதிர்புறத்தில் வாழ்ந்துவரும் இவர் தனியார் பள்ளி ஆசிரியரும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை பல இலக்கிய மாநாடுகளில் சமர்ப்பித்தவருமாவார்.

மு. சிராஜுன்னிசா[தொகு]

மு. சிராஜுன்னிசா (பிறப்பு: அக்டோபர் 31, 1969, இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர், காரைக்கால் நகரத்தில் பிறந்த இவர் தற்போது காரைக்கால் ஹாஜியார் வீதியில் வசித்து வருகின்றார். காரைக்கால் மு.வி. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாவார். இவரது கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • கீழக்கரையில் நடைபெற்ற 5ம் உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டையொட்டி நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர்க்கான கட்டுரைப் போட்டிக்கான பரிசு
  • நேரு நூற்றாண்டையொட்டிப் புதுவைப் பல்கலைக்கழகம் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர்க்கான கட்டுரைப் போட்டிப் பரிசு

மு. ஜாபர் சாதிக் அலி[தொகு]

மு. ஜாபர் சாதிக் அலி (பிறப்பு: மார்ச்சு 9, 1983) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு அள்ளுர் எனுமிடத்தில் பிறந்த இவர் ஒரு பேராசிரியரும், படைப்பிலக்கியத்திலும், ஆய்வுத்துறையிலும் மிக்க ஆர்வமுள்ளவரும், பன்னாட்டு தேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்று பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவரும், ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவருமாவார். மேலும் இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை பயின்றபோது முதல் மதிப்பெண் பெற்று “எம்.ஜி.ஆர்.” தங்கப்பதக்கத்தைப் பெற்றவருமாவார்.

மு. ஜெகபர் சித்திக்[தொகு]

மு. ஜெகபர் சித்திக் (பிறப்பு: பெப்ரவரி 15, 1975) பொறையார் எனுமிடத்தில் பிறந்து தற்போது தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் பங்களாத் தெரு சின்ன லெப்பை ஆலிம் எனும் முகவரியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், ஆசிரியருமாவார். கவிதைகள் புனைவதில் ஆர்வம் அதிகம்.

மு. மஹதும்[தொகு]

மு. மஹதும் (பிறப்பு: சூன் 18 1964) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புதுச்சேரியில் பிறந்து தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா பெரியதெரு கோட்டக்குப்பத்தில் வசித்துவரும் இவர் இளநிலைப் பொறியியலாளரும், இலக்கிய ஆர்வலரும், ஓவியரும், நிழலோவியருமாவார்.

மு. முகம்மது பைசல்[தொகு]

பொதக்குடி மு. முகம்மது பைசல் (பிறப்பு: மார்ச்சு 15 1970), அய்யம்பேட்டையைப் பிறப்பிடமாகவும் அய்யம்பேட்டை அல்டதினா தெருவை வாழ்விடமாகவும் கொண்ட இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமயக்கட்டுரையாளரும் சமூகப் பணியாளருமாவார். அல்-ஈமான் விருது பெற்றுள்ளார்.

மு. முகம்மது யூசுப்[தொகு]

மு. முகம்மது யூசுப் இந்திய முஸ்லிம் எழுத்தாளர், நாச்சிக்குளம் எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும் திருவாரூர் மாவட்டம் உதய மார்த்தாண்டபுரம் அஞ்சல் எனும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், ஆன்மீக ஈடுபாடுமிக்கவரும், பல்வேறு பரிசில்கள் மற்றும் விருதுகளைப் பெற்றவருமாவார். இவரது முதலாவது நூல் 1960ல் வெளியானது.

மு. முஜீபுர் ரஹ்மான்[தொகு]

மு. முஜீபுர் ரஹ்மான் (பிறப்பு மே 9 1977) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், விருத்தாசலம் எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், வாணியம்பாடி புதுத்தெரு சி.என்.தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், தமிழ்ப்பேராசிரியரும் பல்வேறு பரிசில்களும், பாராட்டுகளும் பெற்றவருமாவார்.

மு. முஹம்மது அப்துல் ரசீத் பாசா[தொகு]

மு. முஹம்மது அப்துல் ரசீத் பாசா (பிறப்பு செப்டம்பர் 4 1935), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புதுச்சேரியில் பிறந்து கோட்டக்குப்பம் பெரிய தெருவில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமூகசேவையாளருமாவார்.

மு. முஹம்மது ஆரிப்[தொகு]

மு. முஹம்மது ஆரிப் (பிறப்பு: நவம்பர் 16 1952) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், காரைக்காலில் பிறந்து தற்போது பியூட்டி பிரிண்ட் ஒர்க்ஸ் திருநள்ளார் ரோடு காரைக்கால் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் அச்சக உரிமையாளரும், இலக்கிய ஆர்வலரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொருளாளருமாவார்.

மு. முஹம்மது சபீர்[தொகு]

மு. முஹம்மது சபீர் (பிறப்பு: அக்டோபர் 15 1962), விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் பிறந்து கோட்டக்குப்பம் ஹாஜி உசேன் வீதியில் வசித்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், வரலாற்றுத்துறையில் ஈடுபாடுமிக்கவருமாவார்.

மு. முஹம்மது தாஹா மதனீ[தொகு]

அதிரை அருட்கவி மு. முஹம்மது தாஹா மதனீ (பிறப்பு: ஆகத்து 4 1940) அதிராம்பட்டினத்தில் பிறந்து தற்போது தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய நெசவுத்தெருவில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இணையற்ற மரபுக் கவிஞரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் துணைத்தலைவரும், எழுத்தாளரும், சொற்பொழிவளரும், ஆன்மீகப் பணியாளரும், 50 நூல்களின் ஆசிரியருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:

  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயிதே மில்லத் பொற்கிழி ரூபாய் 25000
  • கவிதைச் செம்மல்
  • தமிழ்மாமணி

முஹம்மத் ஜலாலுத்தீன்[தொகு]

வழக்கறிஞர் முஹம்மத் ஜலாலுத்தீன் (பிறப்பு: செப்டம்பர் 22 1947) இந்திய முஸ்லிம் எழுத்தாளர். இந்தியா, திருச்சியில் பிறந்து திருச்சி, பாலக்கரை, இரண்டாம்தெரு, காயிதே மில்லத் சாலையில் வாழ்ந்துவரும் இவர் ஒரு வழக்கறிஞரும், இலக்கிய ஆர்வலருமாவார். மேலும் ஆய்வுக்கட்டுரைகள் பலதை எழுதியுமுள்ளார்.

மூ. ஹாஜாகனி[தொகு]

மூ. ஹாஜாகனி (பிறப்பு: அக்டோபர் 2, 1976) திருவாரூரில் பிறந்து தற்போது இந்தியா தமிழ்நாடு, சென்னை பெல்நகர் மேடவாக்கம் முதல் சாலையில் வசித்துவரும் இவர் சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரும், மக்கள் உரிமை இதழின் இணை ஆசிரியரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளரும், மாநில அளவிலான பல்வேறு கவிதை பேச்சுப் போட்டிகளில் முதற்பரிசு பெற்றவருமாவார். அத்துடன் புதுக்கவிதைகளுக்கு இஸ்லாமியர் பங்களிப்பு எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துமுள்ளார்.

மில்லத் அகமது[தொகு]

அ. அஷ்ரஃப் மில்லத் மரைக்காயர் (பிறப்பு: மே 15, 1971) இந்தியா, புதுச்சேரி காரைக்காலில் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், ஆந்தை[1] திரைப்பட இணை இயக்குநர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர். பல்வேறு விருதுகளையும் பரிசில்களையும் பெற்றவர். ஐந்து வார்த்தையில் சிறுகதை எழுதி கலாம் உலக சாதனைப் புத்தகத்தில்[2] இடம்பெற்றவர்.

யு. எஸ். முஹம்மது ஹபீபுர் ரஹ்மான்[தொகு]

யு. எஸ். முஹம்மது ஹபீபுர் ரஹ்மான் (பிறப்பு: மே 18 1953) ஈரோடு நடுமாரியம்மன் கோவில் எதிர்சந்து பெரியார் வீதியில் வசித்துவரும் இவர் ஒரு கணக்காளரும், இலக்கிய ஆர்வலரும், ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமாவார். கவிதைத் துறையில் இவருக்கு ஆர்வம் உண்டு.

ராசா நசீர் அஹமது[தொகு]

ராசா நசீர் அஹமது (பிறப்பு: சனவரி 20 1958) இந்தியா, தமிழ்நாடு சென்னை, ராயப்பேட்டையில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், மொழிபெயர்ப்பாளரும், பல்வேறு விருதுகளையும் பரிசில்களையும் பெற்றவரும், பன்மொழிப் புலமைமிக்கவருமாவார்.

ரி.எம். அப்துல் குத்தூஸ் மிஸ்பாஹி[தொகு]

ரி.எம். அப்துல் குத்தூஸ் மிஸ்பாஹி (பிறப்பு: அக்டோபர் 25, 1959) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா கடையநல்லூர் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கோட்டக் குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானியா கல்வி மற்றும் அறக்கட்டளையின் தலைவராக செயலாற்றி வருகின்றார்.

வீ. ஆர். முஹம்மது இபுராஹிம்[தொகு]

வீ. ஆர். முஹம்மது இபுராஹிம் விழுப்புரம் மாவட்டம் முதல்தெரு கோட்டக்குப்பம் மரைக்காயர் வீதியில் வசித்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலரும், சமூக சேவகரும், ஆன்மீகத்துறையில் அதீத ஆர்வமுள்ளவரும், விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத்தலைவருமாவார்.

மு. முஹம்மது அப்துல் ரசீத் பாசா[தொகு]

மு. முஹம்மது அப்துல் ரசீத் பாசா (பிறப்பு செப்டம்பர் 4 1935), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புதுச்சேரியில் பிறந்து கோட்டக்குப்பம் பெரிய தெருவில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமூக சேவையாளருமாவார்.

வை. ரஹமத்துல்லா[தொகு]

வை. ரஹமத்துல்லா (பிறப்பு: மார்ச்சு 12 1970) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் பிறந்து தற்போது காயிதே மில்லத் பெரியதெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், அரசியல், சமூகத்துறைகளில் ஆர்வமிக்கவரும், பி.ஏ. பொருளாதாரப் பட்டதாரியும், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அதிக தேர்ச்சிபெற்றவரும், காகிதத்தட்டு தயாரிக்கும் நிறுவனமொன்றை நடத்திவருபவருமாவார். இவரின் ஆக்கங்கள் சிற்றேடுகளில் பிரசுரமாகியுள்ளன.

ஸி. தாஹிர் பாட்சா[தொகு]

ஸி. தாஹிர் பாட்சா (பிறப்பு: ஏப்ரல் 10 1977 அரும்பாவூரில் பிறந்து தற்போது பெரம்பலூர் மாவட்டம். அரும்பாவூர். காந்த நகரில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், சிறுகதை. கவிதை. கட்டுரை எழுதுவதில் ஆர்வமுள்ளவருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மனிதநேயச் செம்மல் விருது பெற்றுள்ளார்.

ஹ. சேக் முஹம்மது[தொகு]

ஹ. சேக் முஹம்மது (பிறப்பு: சூலை 26, 1973) காரைக்காலில் பிறந்து தற்போது காரைக்கால் நூல்கடைவீதியில் வசித்துவரும் இவர் ஒரு கவிஞரும், தற்காப்புக்கலை, இசைப்பாடல் பாடுவதில் திறமைமிக்கவருமாவார். வீட்டுமனைத் தொழில் செய்துவரும் இவர் பல்வேறு கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார்.

ஹ. முகம்மது சமீர்[தொகு]

ஹ. முகம்மது சமீர் (பிறப்பு: அக்டோபர் 29 1988) எலந்தங்குடியில் பிறந்து தற்போது எலந்தங்குடி ஆசாத் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமுதாய சீர்த்திருத்தவாதியும், சுழல்பந்துவீச்சாளரும், ஓவியரும், தினமணிக்கதிர் இதழின் பரிசு பெற்றவருமாவார். புதுக்கவி புனைவதில் ஆர்வமிக்கவர்.

ஹா. ஹிதாயத்துல்லாஹ்[தொகு]

ஹா. ஹிதாயத்துல்லாஹ் (பிறப்பு: மே 15 1969) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், வெள்ளையபுரம் எனுமிடத்தில் பிறந்து தற்போது திரு. வி. க. தெரு சுப்ரமணியபுரம் திருச்சியில் வசித்து வருகிறார். தனியார் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியற்றும் இவர்ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர்.

எம்.சபீனா பகுருதீன்[தொகு]

  • புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிராமத்தில் பிறந்தவர், (பிறப்பு: 4/5/1987 ) இலக்கிய ஆர்வலர் அனைப்பட்டினத்தில் முதல் பெண் இலக்கியவதி என்று பலராலும்
  • போட்டறப்பட்டு . பல இலக்கிய தமிழ் துறைகளிலும் பல விருதுகளையும் சான்றுகளையும் பெற்றவர் . தன்னுடைய சிறு வயதிலேயே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதால் தானக்கான அடையாளத்தை உருவாக்க நினைத்து பல இலக்கினையும் அடைந்து. தன்னுடைய எழுத்துக்கலால் பல மாற்றங்களை உருவாக்க நினைப்பவர்.அவருடைய எழுச்சிகரமான எழுத்துக்களில் மெய்மையால் எளிதாக ஈர்க்கக்கூடியவர். கவிதை மட்டும், உதய தாரகை இதழிலும் அவருடைய கவிதைகள் கட்டுரைகள் பிரசுரக்கப்பட்டு கொண்டுள்ளது..

மேற்கோள் பட்டியல்[தொகு]

  1. "தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் சாதனை". தின பூமி. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
  2. kumaravel. "World's Shortest Story in English and Tamil & Most Credits in a Short Film for the Same Person | Kalams World Records" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.