உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. ஜி. நூரனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. ஜி. நூரனி (Abdul Gafoor Abdul Majeed Noorani, 16 செப்டம்பர் 1930 – 29 ஆகத்து 2024)[1] என்பவர் இந்திய வழக்கறிஞர், வரலாற்றாளர், நூலாசிரியர் ஆவார். இந்திய உச்ச நீதிமன்றத்திலும் மும்பை உயர் நீதிமன்றத்திலும் வழக்குரைஞராக வழக்காடியவர்.[2] இந்திய அரசியல் சட்டத்தில் பரந்து பட்ட அறிவு கொண்டவர் என மதிக்கப்பட்டவர்.

எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர்

[தொகு]

மும்பையில் பிறந்த இவர் அரசுப் பள்ளியில் பயின்று பின்னர் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியில் தேர்ந்தார். இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து, டாண், தி ஸ்டேட்ஸ்மன், பிரண்ட்லைன், எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்கிலி போன்ற நாளிதழ்களிலும் வார, மாத இதழ்களிலும் எழுதி வந்தார். அரசியல், சமூகம் மற்றும் சட்டச் சிக்கல்கள் தொடர்பான கட்டுரைகளை இவற்றில் எழுதினார். காசுமீர சிக்கல், ஜனாதிபதி ஆட்சி முறை, பகத்சிங் விசாரணை, இராட்டிரிய சுயம் சேவக் சங்கம் , பாரதிய சனதா கட்சி ஆசியப் பாதுகாப்புக்கு பிரஸ்னவ் திட்டம், பத்ருதீன் தியாப்ஜி, சாகிர் உசேன் ஆகியோரின் வரலாறுகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜின்னாவும் திலகரும் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார்.

படைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Renowned scholar AG Noorani passes away at 94". The Siasat Daily (in ஆங்கிலம்). 2024-08-29. பார்க்கப்பட்ட நாள் 2024-08-29.
  2. "Author Profile". Oxford University Press. Archived from the original on 13 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 10 June 2017.
  3. "The Destruction of Hyderabad". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
  4. "The Kashmir Dispute 1947-2012, Vol. 1". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
  5. "Islam and Jihad". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
  6. "Savarkar and Hindutva". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._நூரனி&oldid=4084825" இலிருந்து மீள்விக்கப்பட்டது