ஏ. ஜி. எஸ். இராம்பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. ஜி. எஸ். இராம்பாபு (பிறப்பு: 27 சூலை 1962), முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியும் ஆவார். வழக்கறிஞரும், சமூகப் பணியாளருமான இவர் மதுரை மக்களவைத் தொகுதியின் மறைந்த முன்னாள் எட்டாவது மக்களவை உறுப்பினர் ஏ. ஜி. சுப்புராமனின் மகனாவார்.

அரசியல்[தொகு]

ஏ. ஜி. எஸ். இராம்பாபு, மூன்று முறை மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 9, 10 மற்றும் 11வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1] முதன் முறையாக 1989இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் முறையாக 1991இல் தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாம் முறையாக மீண்டும் 1996இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு, வென்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரானர்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rambabu, A. Govindarajalu Subbaraman Madurai (Tamil Nadu) 09, 10, 11
  2. Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha
  3. Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha
  4. Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._எஸ்._இராம்பாபு&oldid=3006540" இருந்து மீள்விக்கப்பட்டது