ஏ. சேனாபதி கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. சேனாபதி கவுண்டர் (9 செப்டம்பர் 1916 - 25 பிப்ரவரி 1992) என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக (1980, 1984, 1989, 1991) இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக பழநி பாராளுமன்றத் தொகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இவரது இறப்புவரை தொடர்ந்தது. 1952 மற்றும் 1957 தேர்தல்களில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 1962 தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்தும், 1967 தேர்தலில் காங்கேயம் தொகுதியிலிருந்தும் நான்குமுறை தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.[1]

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பதவி
1952 தாராபுரம் இந்திய தேசிய காங்கிரசு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
1957 தாராபுரம் இந்திய தேசிய காங்கிரசு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
1962 ஒட்டன்சத்திரம் இந்திய தேசிய காங்கிரசு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
1967 காங்கேயம் இந்திய தேசிய காங்கிரசு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
1980 பழனி மக்களவைத் தொகுதி இந்திய தேசிய காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்
1984 பழனி மக்களவைத் தொகுதி இந்திய தேசிய காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்
1989 பழனி மக்களவைத் தொகுதி இந்திய தேசிய காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்
1991 பழனி மக்களவைத் தொகுதி இந்திய தேசிய காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சேனாபதி_கவுண்டர்&oldid=3546501" இலிருந்து மீள்விக்கப்பட்டது