ஏ. கே. ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. கே. ராஜன்
ஏ. கே. ராஜன், நீதிபதி, ஓய்வு
பிறப்புராஜன்
சிலுக்குவார்பட்டி, தமிழ நாடு இந்தியா
பணி
  • நீதிபதி
அறியப்படுவதுதலைவர், நீட் தேர்வு ஆணையம், சென்னை
பட்டம்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்

நீதிபதி ஏ. கே. ராஜன் ஒய்வு பெற்ற நீதிபதியாவார். இவர் பல்வேறு முக்கிய பதிவிகளிலும் பொறுப்புகளிலும் பணி புரிந்துள்ளார்.[1] தற்போது தமிழக அரசு நீதிபதி ஏ. கே. ராஜன் அவர்களை நீட் தேர்வில் மாணவர்களின் பாதிப்பு குறித்து விசாரணை செய்ய அமைத்துள்ள் ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது.[2]

இளமைக் காலம்[தொகு]

நீதிபதி ஏ. கே ராஜன் திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.[3]

நீதித்துறை[தொகு]

நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு நிலைகளில், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்தார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ஏ.கே ராஜன் 1996-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஏகே ராஜன் சட்டத்துறை செயலாளராக பணியில் இருந்தபோதுதான் அவர் தயாரித்த முதல் சட்டம் 'மெட்ராஸ்' எனும் பெயரை 'சென்னை' என மாற்றியது.

சீட்டு கம்பெனி நடத்திவிட்டு, பணத்தை ஏமாற்றி எடுத்து செல்லும் நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் மீண்டும் தங்கள் பணத்தை மீட்க டி. என். பி. ஐ. டி (TNPID) என்ற சட்டத்தை வரைந்தார், இந்த சட்டத்திற்கு மிக பெரிய எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அது அனைத்தையும் கடந்து இயற்றப்பட்ட சட்டம் மூலம் 3000 கோடி ரூபாய் பணம் மக்களிடம் கொண்டு வந்து சேர்க்க ஏகே ராஜன் காரணமாக இருந்தார்.

மாணவர்களின் நலன் கருதி கேலிவதை தடுப்பு சட்டம் மற்றும் பெண்களை சீண்டுதல் தடுப்புச் சட்டத்தை வரைந்தவர் ஏகே ராஜன்.

இப்படி சட்டத்துறை செயலாளராக தான் பொறுப்பேற்றிருந்த (1996-1999) காலத்தில் பல முக்கிய சட்டங்களை தமிழகத்திற்கு வகுத்தார் ஏகே ராஜன். பின்னர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி 2005-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ஆணையம்[தொகு]

நீதிபதி ஏ. கே. ராஜன் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல்வேறு முக்கிய சட்ட ஆணையங்களில் தலைவராக பணியாற்றியுள்ளார்.[4]

நீட் தேர்வு ஆணையம்[தொகு]

இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் நீட் நுழைவுத் தேர்வு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் படி தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது.[5] அந்த ஆணையத்திற்கு நீதிபதி ஏ. கே. ராஜன் அவர்களை தலைவராக நியமித்தது. மேலும், இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விபரம்:

1. நீதிபதி  ஏ.கே. இராஜன் (ஓய்வு) - தலைவர்

2. டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் - உறுப்பினர்

3. டாக்டர் ஜவஹர் நேசன் - உறுப்பினர்

4. அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர்

5. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை - உறுப்பினர்

6. அரசு செயலாளர், சட்டத் துறை - உறுப்பினர்

7. அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர்

8. இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் - உறுப்பினர்

9. கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு - உறுப்பினர் / செயலர் / ஒருங்கிணைப்பாளர்ம்.

இந்த ஆணையம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் அமைந்துள்ளது. இதில் பொதுமக்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்லது.[6] கருதுக்களை நேரடியாகவோ, மின்னஞ்சல் (neetimpact2021@gmail.com) மூலமாகவோ அல்லது ஆலோசணை பெட்டியில் சேர்ப்பதன் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

இந்தக் குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.[7]

குறிப்புகள்[தொகு]

  1. "Dr. Justice A.K. Rajan Archives" (in en-US). https://thamizhbooks.com/authors/dr-justice-a-k-rajan/. 
  2. "தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைப்பு!". 2021-06-10. http://www.dailythanthi.com/News/State/2021/06/10143918/panel-headed-by-retired-judge-AK-Rajan-to-examine.vpf. 
  3. "நியமன அறிவிப்பு". https://tamil.abplive.com/news/tamil-nadu/get-to-know-about-ak-rajan-state-government-forms-committee-to-examine-neet-under-him-5259. 
  4. "தினமணி நாளிதழ் செய்தி". https://www.dinamani.com/latest-news/2021/jun/10/impact-of-neet-selection-appointment-of-members-of-the-examination-committee-3639249.html. 
  5. "நீட் தேர்வால் பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது: ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி" (in ta). https://www.hindutamil.in/news/vetrikodi/news/681972-ak-rajan-on-neet-exam.html. 
  6. 100010509524078 (2021-06-18). "NEET impact committee invites public comments" (in en). https://www.dtnext.in/News/TamilNadu/2021/06/18033827/1301604/NEET-impact-committee-invites-public-comments.vpf. 
  7. "ஆணையம் நியமனம் பற்றிய செய்தி". https://www.dailythanthi.com/News/State/2021/06/10143918/panel-headed-by-retired-judge-AK-Rajan-to-examine.vpf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._ராஜன்&oldid=3593920" இருந்து மீள்விக்கப்பட்டது