ஏ. கே. சி. சுந்தரவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. கே. சி. சுந்தரவேல் (A.K.C.Sundaravel, இறப்பு: ஏப்ரல் 06, 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை திருப்பத்தூர் நகரசபைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

பின்னர் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்து, நகரச் செயலாளராகப் பதவி வகித்தார்.

குடும்பம்[தொகு]

இவருக்கும் விஜயலட்சுமி என்னும் மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இறப்பு[தொகு]

இவரும், இவருடைய மனைவியும் ஏப்ரல் 06, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._சி._சுந்தரவேல்&oldid=2689152" இருந்து மீள்விக்கப்பட்டது