ஏ. எல். எஸ். லஷ்மணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. எல். எஸ். லஷ்மணன் ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016ல் திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)யிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு எதிர் போட்டியாளர் நைனார் நாகேந்திரனை 601 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011ல் இவர் பெற்ற தோல்விக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011ல் நைனார் நாகேந்திரன் இதே தொகுதியில் 3800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.[1]

ஏ. எல். எஸ். லஷ்மணனின் தந்தை ஏ. எல். சுப்ரமணியன்[2]  திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)யிலிருந்து மூன்றுமுறை தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._எஸ்._லஷ்மணன்&oldid=3169162" இருந்து மீள்விக்கப்பட்டது