ஏ.கே.சி. சுந்தரவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. கே. சி. சுந்தரவேல்
A. K. C. Sundaravel
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்டம்
பதவியில்
1991–1996
முன்னையவர்ஜி. சண்முகம்
பின்னவர்பி. சுந்தரம்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு6 ஏப்ரல் 2019
அரசியல் கட்சிஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

ஏ. கே. சி. சுந்தரவேல் (A.K.C.Sundaravel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை திருப்பத்தூர் நகரசபைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்து, நகரச் செயலாளராகப் பதவி வகித்தார்.

குடும்பம்[தொகு]

விஜயலட்சுமி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகள் பிறந்தார்.

இறப்பு[தொகு]

இவரும், இவருடைய மனைவியும் ஏப்ரல் 06, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தனர்.[3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu Assembly Election Results in 1991". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  2. "Tiruppattur Assembly Constituency Election Result". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  3. "Former AIADMK MLA Sundaravel dies in ghastly road accident". News Today. 6 April 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  4. "Former AIADMK MLA, 2 others killed in mishap". United News of India. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  5. "Former MLA killed as SUV rams lorry". The Times of India. 7 April 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ.கே.சி._சுந்தரவேல்&oldid=3523087" இலிருந்து மீள்விக்கப்பட்டது