ஏஷ்வல் பிரின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஷ்வல் பிரின்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஏஷ்வல் பிரின்ஸ்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்பிப்ரவரி 22 2002 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசனவரி 2 2011 எ. இந்தியா
ஒநாப அறிமுகம்அக்டோபர் 9 2002 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபஏப்ரல் 26 2007 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 62 52 198 208
ஓட்டங்கள் 3,556 1,018 12,034 4,611
மட்டையாட்ட சராசரி 43.36 35.10 44.08 31.36
100கள்/50கள் 11/10 0/3 31/55 2/22
அதியுயர் ஓட்டம் 162* 89* 254 128
வீசிய பந்துகள் 96 12 276 91
வீழ்த்தல்கள் 1 0 4 0
பந்துவீச்சு சராசரி 47.00 41.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/2 0/3 2/11 0/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
42/– 26/– 135/– 93/–
மூலம்: கிரிக்கட் ஆக்கைவ், பிப்ரவரி 6 2011

ஏஷ்வல் பிரின்ஸ் (Ashwell Prince, பிறப்பு: மே 2 1982 ), தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 62 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 52 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 198 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 208 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 -2011 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2002 -2007 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

தனது துடுப்பாடும் பாங்கு மற்றும் களத் தடுபபடும் விதத்தினாலும் இவர் பரவலாக அறியப்பட்டார். கிரீம் சுமித் காயம் காரணமாக விலகியதால் இவர் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு இரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தலைவராக நியமிக்கப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒருவர் தென்னாப்பிரிக்க அணியின் தலைவராவது இதுவே முதல்முறை. 1995 ஆம் ஆண்டில் இவர் கிழக்கு மாகாண அணிக்காக விளையாடத் துவங்கினார். இஅவ்ர் தென்னாப்பிரிக்க தேசிய அணி மட்டுமல்லாது மேற்குமாகாணம், போலந்து மாகாண அணி, கேப் கோப்ராஸ் மற்றும் வாரியர்சு அணி சார்பாக விளையாடினார். மேலும் நாட்டிங்காம்சயர், லங்காசயர் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடினார். 2015 ஆம் ஆண்டில் தனது ஓய்வினை அறிவித்தார்.[1]

சர்வதேச போட்டிகள்[தொகு]

2002 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .பெப்ரவரி 22 இல் ஜோகன்ஸ்பார்க்கில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 99 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்து கில்லெஸ்பி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 48 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்து ஷேன் வார்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 360 ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆட்டப் பகுதியில் வெற்றி பெற்றது.[2]

2002-03 ஆண்டுகளில் இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார். ஆனால் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தத் தவறியதனால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கு எதிரான தேர்வுத் தொடரில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். பின் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 131 ஓட்ட்ங்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் ஜாக்கஸ் காலிசுடன் இணைந்து 267 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஐந்தாவது இணைக்கு அதிக ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்க இணை எனும் சாதனை படைத்தது.2011 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . டிசம்பர் 26 இல் டர்பனில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 21 பந்துகளில் 14 ஓட்டங்களை எடுத்து ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 24 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்து பெர்னாண்டோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 208 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

சான்றுகள்[தொகு]

  1. "BBC Sport – Ashwell Prince: Lancashire's ex-South Africa batsman to retire". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
  2. "Full Scorecard of South Africa vs Australia 1st Test 2002 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஷ்வல்_பிரின்ஸ்&oldid=3006858" இலிருந்து மீள்விக்கப்பட்டது