ஏவுதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏவுதளம் அல்லது ஏவுமேடை ( launch pad ) என்பது ராக்கெட் அல்லது விண்கலத்தை விண்ணில் ஏவப் பயன்படும் இடம் மற்றும் வசதிகளை உள்ளடக்கியதாகும். விண்வெளித் துறைமுகம் ( ராக்கெட் ஏவும் தளம் ) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஏவுதளங்களைக் கொண்டிருக்கலாம். ஒரு பொதுவான ஏவுதளம் சேவை மற்றும் umbilical கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும். சேவை கட்டமைப்பு என்பது ஏவு ஊர்தியை ஏவும் முன் சோதிக்க அணுகல் தளத்தை வழங்குகிறது. umbilical கட்டமைப்பு என்பது ஏவு ஊர்திக்கான எரிபொருள் நிரப்புதல், எரிவாயு, மின்சாரம், மற்றும் தகவல்தொடர்பு இணைப்புகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். ஏவு ஊர்தி ஏவு மேடையின் மேல் நிலை நிறுத்தப்பட்டிருக்கும், இந்த ஏவு மேடை ராக்கெட் ஏவும் போது ராக்கெட் இயந்திரங்களினால் உருவாகும் மிக அதிக வெப்பம் மற்றும் எடையைத் தாங்கும் வகையில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவுதளம்&oldid=2303647" இருந்து மீள்விக்கப்பட்டது