ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஆங்கில இதழ்)
![]() ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி இதழின் -ஏப்ரல் 24-மே 7-அட்டைப் படம் | |
![]() ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி இதழின் -ஏப்ரல் 24-மே 7-அட்டைப் படம் | |
தலைமை ஆசிரியர் | ஜோசப் சி. அன்செல்மோ |
---|---|
முன்னாள் இதழாசிரியர்கள் |
|
வகை | விண்வெளி |
இடைவெளி | வாரம் இருமுறை |
வெளியீட்டாளர் | கிரிகோரி டி. ஹாமில்ட்டன் |
தொடங்கப்பட்ட ஆண்டு | 1916 |
நிறுவனம் | இன்ஃபோர்மா |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
அமைவிடம் | நியூயார்க்கு நகரம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | www |
ISSN | 0005-2175 |

ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Aviation Week & Space Technology) என்னும் ஆங்கில கிழமை இதழ், மெக் கிரா ஹில் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது.[1] இது அச்சு வடிவிலும், இணையவழியாகவும் வானூர்தி மற்றும் பறப்பூர்திகள் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வருகின்றது. இத்துறைக்கான தொழிலங்கங்கள் பற்றியும், வானூர்தி போக்குவரத்து நிறுவனங்கள் பற்றியும், வான் போக்குவரத்து பற்றிய அரசுகளின் கொள்கைகள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்களையும் நல்ல நடுநிலையுடன் இடுவதாக அறியப்படும் ஓர் இதழ்.[2]
விமானப் போக்குவரத்து வாரம் என்பது பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்கள் தங்கள் செய்திக்குறிப்பு மூலம் கொள்கை முயற்சிகளின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தகவல்களை கசியவிடுவதற்கான ஒரு விருப்பமான வழியாகும். இதன் விளைவாக இது முறைசாரா முறையில் "விமானக் கசிவு மற்றும் விண்வெளி புராணம்" என்று குறிப்பிடப்பட்டது.[3]
வானூர்தி பற்றிய ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் விரும்பிப் படிப்பவர்கள். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த படைத்துறை நிறுவனமாகிய பென்ட்டகனில் உள்ளவர்களுடனும், வானூர்திப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உள்ளாள்களுடனும் தொடர்பு உடையதால் முன்னணிச் செய்திகளும் கருத்துக்களும் இந்த இதழில் கிடைக்கின்றது.[4]
வருங்காலத்து வானூர்திகளின் உள் கட்டுமானங்கள் பற்றிய விளக்கங்கள் முதல் பல அரிய செய்திகள் இதில் வெளியாகின்றன.[5] சக் யீகர் முதன்முதலாக ஒலியின் விரைவை மீறிச் செலுத்திய வானூர்தி பறப்பு பற்றி வெளியுலகுக்கு தெரிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இவ்விதழில் வெளியாகியது. அண்மையில், ஜனவரி 18, 2007ல் வெளியாகிய ஏவியேஷன் வீக் இதழில் சீனாவின் செய்மதியை]அழிக்கும் ஆயுதம் ஒன்றை விண் வெளியில் (500 மைல் உயரத்தில்) சோதனை செய்து பார்த்தது பற்றியும் செய்தி முதன் முதலாக வெளியிட்டது.[6]
இந்த ஆங்கில இதழுக்குப் போட்டியாக இத்துறையில் இருக்கும் மற்ற இதழ்கள்:
ஏவியேஷன் வீக் இதழ் வெளியிடும் நிறுவனம் இதழ் வெளியிடுவது மட்டுமல்லாமல், பொது இணையத்தளம் ஒன்றும், கட்டணம் செலுத்திப் பார்வையிடும் வலைத்தளங்களும், செய்திமடல்களும், உலக வானூர்தி வான்வெளி தரவுத்தொகுதி, ஏவியேஷன் வீக் சோர்ஸ்புக் என்னும் இத்துறை பற்றிய தொழிலகங்களின் முகவரிகள் அடங்கிய தரவுப் புத்தகம் முதலிய வெளியிடுவதும் பராமரிப்பதும் செய்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McGraw, James H. (2 August 1943). "About Aviation News". Aviation News. Vol. 1, no. 1. p. 7. Retrieved 21 September 2021.
- ↑ Martin, Robert W. (24 February 1958). "A Message from the Publisher: Our 1958 Program". Aviation Week Including Space Technology. Vol. 68, no. 8. p. 21. Retrieved 21 September 2021.
- ↑ "The Mystery Continues". GlobalSecurity.org. Retrieved 21 September 2021.
- ↑ "Concentration of Effort". Aviation and Aircraft Journal. Vol. 9, no. 7. 1 November 1920. p. 215. Retrieved 21 September 2021.
- ↑ "Aviation". Aviation. Vol. 12, no. 1. 2 January 1922. p. 5. Retrieved 21 September 2021.
- ↑ Foster, John (June 1947). "To Our Readers". Aviation. Vol. 46, no. 6. p. 5. Retrieved 21 September 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Aviation Week Magazine – Digitized issues from 1 August 1916 to 30 December 1963 on the