ஏவா அகுனெர்ட் உரோகுல்ப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏவா அகுனெர்ட்- உரோகுல்ப்சு (Eva Ahnert-Rohlfs) (11 ஆகத்து 1912 - 9 மார்ச்சு 1954) ஓர் செருமானியப் பெண் வானியலாளர் ஆவார். இவர் மாறும் விண்மீன்களின் நோக்கீடுகளில் சிறப்பான பங்களிப்புகள் நிகழ்த்தியுள்ளார்.

இவர் செருமனியைச் சேர்ந்த கோபர்கில் பிறந்தார். இவ்வூர் டச்சி சாக்சே-கோபர்கு-கோத்தாவில் உள்ளது. இவர் உர்சுபர்கு, மூனிச், கீல் ஆகிய பல்கலைக்கழகங்களில் 1931 முதல் 1933 வரை படித்தார்.ஒன்பது ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்குப் பின்னர், 1942 இல் இருந்து இரண்டாம் உலகப்போரின் முடிவுவரை கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் 1945 இல் இருந்து உதவி வானியலாளராக பேராசிரியர் கூனோ கோப்மைசுட்டரிடம் சான்னேபர்கு வான்காணகத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் 1951 இல் வானியற்பியலில் தன் முனைவர் பட்டத்தை ஜேனா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் 1952 இல் இவர் சான்னேபர்கு வான்காணகத்தில் வானியலாளர் பவுல் ஆசுவால்டு அகுனெர்ட்டைச் சந்தித்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர் தன் 41 ஆம் அகவையில் சன்னேபர்கில் இறந்தார்.

நூல்தொகை[தொகு]

  • "Strahlungsdruck, Poynting-Robertson-Effekt und interstellare Materie." Mitteilung der Sternwarte Sonneberg 43 (1953)
  • "Vorläufige Mitteilung über Versuche zum Nachweis von Meteoritischem Staub." Mitteilung der Sternwarte Sonneberg 45 (1954)
  • "Zur Struktur der Entstehung des Perseidenstroms." Veröffentlichung der Sternwarte Sonneberg (part 2, p. 5 - 38) (1956)

நினைவேந்தல்[தொகு]