உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழைகளுக்கான உணவுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழைகளுக்கான உணவுத் திட்டம்
நாடுஇந்தியா
பிரதமர்அடல் பிகாரி வாஜ்பாய்
துவங்கியது25 திசம்பர் 2000; 23 ஆண்டுகள் முன்னர் (2000-12-25)

அந்த்யோதயா அன்ன யோஜனா (ஏழைகளுக்கான உணவுத் திட்டம்)(Antyodaya Anna Yojana)(lit ; அந்தியோதயா ஏழை ஏழைகளைக் குறிக்கும் அந்தியோதயா உணவுத் திட்டம்) என்பது இந்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் இலட்சக் கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு அதிக மானிய விலையில் உணவை வழங்குவதற்கான இந்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும். இத்திட்டம் 25 திசம்பர் 2000 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை 2000ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கும் துறையின் அமைச்சர் என் ஸ்ரீவிஷ்ணு துவக்கிவைத்தார்.முதலில் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் செயல்படுத்தப்பட்டது.

கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் "ஏழ்மையானவர்கள்" (வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 10,000,000 ஏழ்மையான குடும்பங்கள்) கண்டறியப்பட்ட பின்னர்[1] அரசாங்கம் அவர்களுக்கு 35 கிலோகிராம் அரிசி மற்றும் கோதுமையை அதிக மானிய விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கத் தொடங்கியது. ஒரு கிலோ அரிசி 3, கோதுமை 2க்கும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.[2] கணக்கெடுப்புகளின் மூலம் அந்தந்த மாநில கிராமப்புற மேம்பாட்டு வசதிகளால் ஏழைக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்தத் திட்டம் இரண்டு முறை, சூன் 2003-ல் ஒரு முறையும், பின்னர் ஆகத்து 2004-ல் இரண்டாம் முறையும் விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் கூடுதலாக 5,000,000 வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்த்து, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 20,000,000ஆகக் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பிறகு 2003-ல் கூடுதலாக 50 லட்சம் குடும்பங்கள் சேர்க்கப்பட்டன.

குடும்ப அட்டைகள்

[தொகு]

ஒரு குடும்பம் தகுதியுடையதாக அங்கீகரிக்கப்பட்டவுடன், அவர்களுக்குத் தனித்துவமான "அந்தியோதயா குடும்ப அட்டை" வழங்கப்படுகிறது. இந்த அட்டை, பொது விநியோக அட்டை (பச்சை நிற அட்டை) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அடையாள வடிவமாகச் செயல்படுகிறது.[3]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • தீன் தயாள் உபாத்யாய் அந்தோதய யோஜனா

மேற்கோள்கள்

[தொகு]
  1. . 2004-11-01. 
  2. "Antyodaya Anna Yojana (AAY) - Eligibility & Application - IndiaFilings". IndiaFilings - Learning Centre (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-09. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
  3. pradhanmantriyojana (2021-09-20). "Antyodaya Anna Yojana (AAY) 202". PRADHAN MANTRI YOJANA (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.