ஏழு ஞானிகள் (கதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏழு ஞானிகள் என்பது ( ஏழு முனிவர்கள் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது சமஸ்கிருதம், பாரசீக அல்லது எபிரேய பாரம்பரிய கதைகளின் தொகுப்பு ஆகும்.

பேரரசர் பொன்டியனஸ், அவரது மகன் டியோக்லெஷியன் மற்றும் ஏழு அறிவாளிகள்

கதைக்களம்[தொகு]

சுல்தான் தனது மகனான இளம் இளவரசனை தனக்கு பின் தன்னுடைய அரசாங்கத்தை திறமையாக நிர்வகிக்கும் பொருட்டு ஏழு பாரம்பரிய கலைகளைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு சிந்துபாத் என்பவரை தலைவராக கொண்ட ஏழு ஞானிகளிடம் கற்றுகொள்ள அனுப்புகிறார். கற்று தேர்ந்த இளவரசரின் பால் ஈர்க்கப்பட்ட மாற்றாந்தாயான பேரரசி அவரை தன்வயப்படுத்த முயற்சிக்கிறாள். அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க ஏழு ஞானிகளின் தலைவரான சிந்துபாத்தின் அறிவுரைப்படி ஒரு வாரம் மௌன விரதத்தினை கடைப்பிடிக்கிறார். இடைப்பட்ட ஏழு நாட்களிலும், பேரரசி தனது கணவரிடம் ஏழு விடுகதைகள் வழியாக இளவரசரைக் குற்றம் சாட்டுகிறார், மேலும் அதன்படி தனது ஆசைக்கு இணங்காத இளவரசரை இக்கதைகளின் வழியே குற்றம்சாட்டி மரண மேடைக்கு அனுப்ப திட்டம் இருக்கிறாள். ஆனால் அவளது விடுகதை ஒவ்வொரு முறையும் சிந்துபாத் தலைமையிலான ஏழு ஞானிகளாலும் ஏழு மறுகதைகளின் வழியே விடுவிக்கப்படுகிறது . இறுதியாக இளவரசன் மௌனம் களைத்து மற்றொரு கதை மூலமாக உண்மையை அம்பலப்படுத்தி, அந்த பொல்லாத மகாராணியின் உண்மை முகத்தை அறியச்செய்கிறான். அதன்பின்னர் அவள் தூக்கிலிடப்படுகிறாள். [1]

ஒரு கதைக்குள் பல கதைகளை துணைப் பொருளாக கொண்டு செயல்படும் இலக்கிய நுட்பமான '''சட்டக கதை''' வடிவத்தில் இக்கதை அமைந்துள்ளதால், கேட்பவர்களின் அறிவுத்தளம் மென்மேலும் விரிவடைய வழிசெய்கிறது.

தோற்றம்[தொகு]

பல ஐரோப்பிய மொழிகளில் சுற்றிஅடித்து காணப்படும் இக்கதைகளின் தோற்றம் என்னவோ கிழக்கு பிராந்தியமான பாரசீகத்தைச்  சேர்ந்ததாகும். [1] சமஸ்கிருதத்தில் இதை ஒத்த ஒரு கதை தொகுப்பு உள்ளது, இது கிமு முதல் நூற்றாண்டில் இந்திய தத்துவஞானி சின்டிபாஸால் கூறப்பட்டது, ஆனால் அசல் தொகுப்பு எழுத்து வடிவத்தில் கிடைக்கப்பெறவில்லை.எழுத்து வடிவத்தில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால நூல்கள் பாரசீக மொழியில் இருப்பதால் பெர்சியன் அல்லது விவிலிய ஜோசப் போன்ற ஒத்த கதைகளைக் கொண்டதால் எபிரேய   மொழிகளை ஆரம்பமாக கருதலாம்.

பிற்கால வரலாறு[தொகு]

சில பாரசீக எழுத்து வடிவங்களை தவிர்த்து எஞ்சியிருக்கும்கதை தொகுப்புகள் நூற்றுக்கணக்கில் ஐரோப்பியமொழிகளில் இருக்கின்றன.[2] இந்த கதைகள் பொதுவாக  ஒவ்வொரு நாளிலும் ஞானிகளுக்கு ஒன்றும், பேரரசியான மாற்றாந்தாய்க்கு ஒன்றும் என பதினான்கு கதைகளும், கடைசியில்  இளவரசரிடமிருந்து ஒன்று எனவும் பதினைந்து கதைகளைக் கொண்டிருக்கும், இதே கட்டமைப்பில் ஐரோப்பிய கதை வடிவங்கள் இருந்தாலும் நான்கே நான்கு தொகுப்புகளில் தான் பாரசீக கதைகளின் பாதிப்பு காணப்படுகின்றன.[3]

ஆரம்பத்தில் கிழக்கு மொழிகளான அரபி மற்றும் பாரசீக ( சிந்துபாத்தின் புத்தகம் /ஏழு வைசியர்களின் புத்தகம்)[4] போன்றவற்றில் இருந்து சிரியாக் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிந்துபாத்தின் புத்தகம் என்றே அறியப்பட்டது, மேலும் கிரேக்க மொழியிலிருந்து டூலு என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஹாட்-சீல் அபேயின் துறவியான அல்டா சில்வாவின் ஜான் என்பவரால் டோலோபதோஸ் (பதிப்பு. ஹெர்மன் ஆஸ்டர்லி, ஸ்ட்ராஸ்பர்க், 1873) என்ற பெயரில் லத்தீனில் மொழி பெயர்க்கப்பட்டது. மேலும் 12 ஆம் நூற்றாண்டில், 1210 ஆம் ஆண்டில் ஹெர்பர்ஸ் என்ற ட்ரூவரால் '''Li romans de Dolopathos'' என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. மற்றொரு பிரெஞ்சு பதிப்பான, '''Roman des sept sages''' , வேறுபட்ட லத்தீன் மூலத்தை அடிப்படையாகக் கொண்டது. [1]

ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் இந்த தலைப்பின் கீழ் அச்சிடப்பட்ட கதை புத்தகங்கள் பொதுவாக இவற்றிலிருந்து வேறுபட்ட லத்தீன் மூலத்தை அடிப்படையாகக் கொண்டவை. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு மொழியை அடிப்படையாகக் கொண்ட மூன்று மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன. பன்னடைன் கிளப்பில் (எடின்பர்க், 1837) எடிட் செய்யப்பட்ட டால்கீத்தின் ஜான் ரோலண்ட் எழுதிய ஏழு சாகாக்கள் இதில் முக்கியமானது.

இலக்கிய மரபு[தொகு]

1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஏழு சாகாக்களின் சங்கம், அதன் இணைய மற்றும் அச்சிடப்பட்ட (இலவசம்) செய்திமடலில் வருடாந்திர புதுப்பிப்புகளுடன், நிரந்தரமான அறிவார்ந்த நூலகத்தை பராமரிக்கிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Chisholm 1911a.
  2. Laura A. Hibbard, Medieval Romance in England. p. 174. New York: Burt Franklin. 1963.
  3. Laura A. Hibbard, Medieval Romance in England. p. 175 New York: Burt Franklin. 1963
  4. W. A. Clouston, The Book of Sindbād, 1884.
  5. "Seven Sages Society". Archived from the original on 2019-09-11. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_ஞானிகள்_(கதை)&oldid=3893883" இலிருந்து மீள்விக்கப்பட்டது