ஏல மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏல மலைகள்
Koh Kong logging.JPG
கோ கொங் மாகாணத்தில் ஏல மலைத் தொடரில் சட்டத்திற்கு புறம்பாக மரம் வெட்டுதலின் வான் தோற்றம்
உயர்ந்த இடம்
PeakPhnom Aural
உயரம்1,813 m (5,948 ft)
Dimensions
நீளம்300 km (190 mi) NW/SE
அகலம்70 km (43 mi) NE/SW
புவியியல்
ஏல மலைகள் is located in Cambodia
ஏல மலைகள்
ஏல மலைகள்
Countryகம்போடியா
நிலவியல்
பாறையின் வயதுகேம்பிரியக் காலம்[1]
பாறை வகைமெட்டாகாங்லோமெரேட்டு

ஏல மலைகள் (Cardamom Mountains; கெமர் மொழியில்: ជួរភ្នំក្រវាញ) என்பது கம்போடியாவின் தென்மேற்கு, கிழக்கு தாய்லாந்து என்பவற்றுக்கு இடையே உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இம்மலைத்தொடர் கிராவந்த்து மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏல மலைகளின் நிழற்படம் தாய்லாந்து நாட்டிலுள்ள டிரத் மாகாண முத்திரையுடன் தோன்றும்[2].

அமைப்பு[தொகு]

தென்கிழக்கு-வடமேற்கு அச்சில், தாய்லாந்து வளைகுடாவில் உள்ள கோ கோங் மாகாணத்தில் தொடங்கி இம்மலைகள் பர்சத் மாகாணத்தில் உள்ள வீயங் மாவட்டம் வரையிலும், தென்கிழக்குத் திசையில் யானை மலைகள் எனப்படும் தாம்ரெய் மலை வரையிலும் பரந்து விரிந்து காணப்படுகின்றன.[3] இம்மலைத்தொடரின் வடமேற்கு எல்லை தாய்லாந்தில் உள்ள சந்தபுரி மாகாணத்தில் முடிவடைகிறது. மேலும், இதைப் பார்ப்பதற்கு சொய் தாவோ மலைகளில் தோன்றுவது போலவும் தோன்றுகிறது. சில வரைபடங்களில் இது சந்தபுரி மலைத்தொடராகவும் கருதப்படுகிறது.

அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகள் ஈரமான மேற்குச் சரிவுகளில் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் 150 முதல் 200 அங்குலம் (3,800-5,000 மி.மீ.) வரையிலான மழை ஆண்டுதோறும் பொழிகிறது. முரணாக, மரங்களடர்ந்த கிழக்குச் சரிவுகளில் உட்புறக் கம்போடியச் சமவெளியை நோக்கியிருக்கும் கிரிரோம் தேசியப் பூங்கா பகுதிகளில் 40 முதல் 60 அங்குலம் (1,000 to 1,500 மி.மீ.) வரையிலான மழைப் பொழிவே பதிவாகிறது. கிழக்குச் சரிவுகளில் ஏலக்காயும் மிளகும் வணிகரீதியிலாகவும் விளைகின்றன.

மலை உச்சிகள்[தொகு]

ஏல மலையின் மிகவுயர்ந்த கொடுமுடி 1813 மீட்டர் (5,948 அடிகள்) உயரத்தில் இருக்கும் புனோம் ஆரல் ஆகும். இதுவே கம்போடியாவில் உள்ள மிக உயர்ந்த சிகரமும் ஆகும். புனோம் சம்கோசு (1,717 மீ.), புனோம் தும்போர் (1,516 மீ.) மற்றும் புனோம் கிமோச் (1,220 மீ.) முதலியவை மற்ற முக்கியமான கொடுமுடிகளாகும்.

வரலாறு[தொகு]

ஏல மலைகளில் 15 முதல் 17 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த பல தொல்பொருள் தளங்கள் காணப்படுகின்றன. இத்தளங்களில் 60 செ.மீ. அளவுள்ள வித்தியாசமான பீங்கான் சாடிகள் மற்றும் செழுமையடையாத வெட்டப்பட்ட சவப்பெட்டிகள் மலை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.[4] சாடியில் புதைப்பது என்ற பழக்கம் இம்மலையின் தனித்துவச் சிறப்பு ஆகும். கெமர் கலாச்சார வரலாற்றில் பிணங்களைப் புதைக்கும் இம்முறை பதிவு செய்யப்படவில்லை. மலையில் காணப்பட்ட எலும்புகள் கம்போடிய அரசக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று உள்ளூர்ப் புனைவுகள் தெரிவிக்கின்றன. எளிதில் அணுகமுடியாத மலைத்தொடர் என்று கெமர் ரூச் மக்களால் நம்பப்பட்ட இம்மலைத் தொடர் கம்போடிய வியட்நாம் போரின்போது வியட்நாமியப் படைகள் முறியடித்து வெற்றி கொண்டன. தாய்லாந்தின் எல்லையான மேற்குப் பகுதி சீனர்களின் ஆதரவைப் பெறுவதற்கு உதவுகின்ற ஒரு பாதையாகப் பயன்பட்டது. இறுதியாக கெமர் போராளிகள் மற்றும் அகதிகள் தப்பி மறையும் சரணாலயமாகவும் பயன்பட்டது. எளிதில் அணுகமுடியாத இம்மலையின் தன்மை இப்பகுதியைப் பாதுகாக்கவும் பயன்பட்டது[5].

ஏலக்காய் மலைகளைப் பொருத்தவரையில் சுற்றுலா என்பது ஒப்பீட்டளவில் ஒரு புதிய அம்சமாகும். 2008 ஆம் ஆண்டில் வனவிலங்கு கூட்டணி நிறுவனம் என்ற ஒரு சமூகம் சார்ந்த சூழியல் சுற்றுலா திட்டம் சிபாட் என்ற கிராமத்தில் தொடங்கப்பட்டது. ஏலக்காய் மலையின் நுழை வாயில் என்றும் சந்தைப்படுத்தப்பட்டது.[6] இருப்பினும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அங்கோர் வாட்டின் இருப்பிடமான சியம் ரிப் நகருக்கு வருகைதரும் பயணிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இப்பகுதியில் இயங்கும் அனைத்துலக பாதுகாப்பு நிறுவனம்,[7] அனைத்துலக விலங்குகள் மற்றும் தாவரங்கள் நிறுவனம்,[8] இயற்கைக்கான உலகளாவிய நிதியம் போன்றவை வனவிலங்கு கூட்டணி[9] நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் மற்ற அனைத்துலக நிறுவனங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏல_மலைகள்&oldid=2606941" இருந்து மீள்விக்கப்பட்டது