ஏல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏல்

ஏல் (Ale) அல்லது மாவடி என்பது பார்லியின் முளைகூழை மேல்-நொதிக்கும் காடியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை பியராகும். இவ்வகைக் காடி விரைவாக நொதிப்பதால் இனிய பழச்சாரைப்போன்ற சுவையை பியருக்கு கொடுகின்றன. கூடுதலான ஏல் வகைகளில் கைப்பான பச்சிலையை ஒத்த சுவையைக் கொண்டுள்ள ஒப் (hops) தாவரத்தின் பூவும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பூக்கள் பார்லி முளைகூழின் இனிப்புச் சுவையை சமப்படுத்துவதோடு ஏலை பதனிடும் பொருளாகவும் செயற்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, கனடாவின் கிழக்கு மாகாணங்களில் ஏல் பாவனை அதிகமாக காணப்படுகிறது. மற்றைய முக்கிய பியர் வகையான லாகர் கீழ்--நொதிக்கும் காடியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏல்&oldid=3778292" இலிருந்து மீள்விக்கப்பட்டது