ஏற்பு குணக எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எக்சு மற்றும் காமாக் கதிர்கள் ஒரு ஊடகத்தின் வழியாக செல்லும் போது அதன் ஒரு பகுதி ஊடகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒருபகுதி ஊடுருவிச் செல்கிறது. இது ஊடகத்தினையும் கதிரின் அலைநீளத்தையும் பொறுத்திருக்கிறது. ஊடகத்தின் வழியாகச் சென்று வெளிப்படும் கதிரின் செறிவு I என்றும் அக்கதிரின் ஆரம்பச் செறிவு I0 என்றும் கொண்டால்:

μ என்பது ஏற்பு குணக எண் (Linear Absorption coefficient ) ஆகும். x என்பது ஊடகத்தின் தடிமனளவாகும். இது செறிவு குறைதல் குணக எண் (Linear Attenuation coeffficient) என்றும் அறியப்படும். x செ.மீட்டரில் அளவிடப்பட வேண்டும். μ என்பதின் அலகு /செ.மீ. அல்லது செ.மீ.-1.ஆகும்.

சில நேரங்களில் ஏற்புக் குணக எண்ணினை நீளத்திற்கு இவ்வளவு என்பதனைவிட, அலகு பரப்பிற்கு இவ்வளவு கிராம் என்று கொடுப்பது விரும்பப் படுகிறது. ஏற்கும் பொருளின் மொத்த நிறையினைவிட அலகுபரப்பின் நிறையினை இது குறிக்கிறது. gm/cm2. பரப்பு-நிறை (area mass) என்பது ஒரு அலகு பரப்பின் மேல் உள்ள ஒரு கிராம் நிறையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்பு_குணக_எண்&oldid=1529355" இருந்து மீள்விக்கப்பட்டது