ஏற்காட்டில் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்கம்பாடி, ஏற்காட்டின் ஒரு கிராமம்

ஏற்காட்டில் சுற்றுலா (Tourism in Yercaud) என்பது ஏற்காட்டில் சுற்றுலா செல்லும் போது, காண வேண்டிய இடங்களின் சிறப்புகளைக் கூறுவது எனலாம். ஏற்காடு, தமிழக மக்களால், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. காரணம் யாதெனில், ஊட்டி தமிழகத்தின் ஒரு மூலையில் இருப்பதால் அங்கு போய்வர செலவு ஆகும். மேலும், ஊட்டியானது தமிழக, கேரள எல்லையில் இருப்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமா இருக்கும். [1]அதனால் இயல்பாகவே, ஊட்டியில் விலைவாசி அதிகமாக இருக்கும். ஆனால், ஏற்காடு தமிழகத்தின் நடுப்பகுதியில் இருப்பதால், தமிழ்நாட்டு மக்களே அதிகம் காண வருவர். எனவே, சுற்றுலா செலவு குறைவாக இருக்கும். ஊட்டியில் கண்டு இரசிக்க வல்ல இடங்களைப் போல, ஏற்காட்டிலும் சுற்றுலா இடங்கள் உள்ளன.[2] இத்தகைய ஏற்காட்டில், யாவரும் கண்டு இரசிக்க பின்வரும் இடங்களைக் கூறலாம்.

ஏற்காட்டு ஏரி[தொகு]

ஏர்க்காட்டின் வட பகுதி பச்சைக் கம்பளம் பரப்பப்பட்டாற் போன்ற புல் வெளிகளில் அமைந்துள்ளது. அப் புல்வெளிகளில் நடுவில் பரந்து கிடக்கும் நன்னிர் ஏரி, கண்ணைக் கவரும் வனப் புடையது. இன்பமாகப் பொழுதைக் கழிக்க விரும்புவோர், இதில் படகில் சென்று மகிழ்வார். ஒரு சிறு தொகையைக் கட்டணமாகச் செலுத்திவிட்டு, அக்காலத்தில் அங்கும வாழ்ந்த வெள்ளையர் மீன் பிடித்துப் பொழுதைக் கழிப்பதும் உண்டு. திரைப்படங்களுக்குரிய காட்சிகள் இங்கு அடிக்கடி எடுக்கப்பெறுகிறது. மழைக்காலங்களில், இவ்வேரியிலிருந்து தோன்றும் வாணியாறு, கிளியூர் நீர் வீழ்ச்சியில் தாவிக் குதித்து ஓடும் காட்சியைக் காண்போர் உள்ளம் களி கொள்ளும்.

ஏரிக்கு மேற்கே, ஒரு குறுகிய பாதை, கிளியூர் நீர் வீழ்ச்சிக்குச் செல்லுகிறது. இவ்வழி மூன்று கல் தொலைவுடையது. மழைக் காலங்களில் ஏரியில் வழிந்து செல்லும். தண்ணிர் மூன்று கல் மேற்காக ஓடி, சுமார் 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுகிறது. இவ் விடத்திற்குச் செல்ல அரைக்கல் தொலைவு செப்பனிட்ட நல்ல பாதை உள்ளது. அது வரையில், பேருந்து வண்டிகளும், மிதி வண்டிகளும் செல்லலாம். அதற்கு மேல் பாதை சரிந்தும் குறுகியும் உள்ளது.

இவ்வேரியின் நீர் வளத்துக்குக் காரணமாக இருப்பது ஓர் அருவி ஆகும்.இது பழ மலையின் உச்சியிலிருந்து, மரங்கள் சூழ்ந்த படுகையின் வழியாக ஓடி வந்து, இதில் விழுகிறது. ஏரியின் வட புறத்தில் அமைந்திருக்கும் புனித இளமரக் காட்டில் (Sacred grove), மலையாளிகள் தொழுது வணங்கும் இரண்டு அழகிய கோயில்கள் உள்ளன. இக் கோயில்களுக்குச் சற்று மேற்கே, வாரச் சந்தை கூடும் இடமுள்ளது.

சீமாட்டி இருக்கை[தொகு]

ஏர்க்காடு உந்து வண்டி நிலையத்திலிருந்து சீமாட்டி இருக்கையை அடைய ஒரு கல் தொலைவு செல்ல வேண்டும். கடல் மட்டத்திலிருந்து இவ்விடம் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏர்க்காட்டில் வாழ்ந்த ஓர் ஐரோப்பிய மாது, இவ்வழகிய இடத்திற்கு நாள்தோறும் சென்று அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாராம். ஆகையினாலேயே இவ்விடம் சீமாட்டி இருக்கை (Lady Seat) என்று அழைக்கப்படுகிறது என்று அவ்வூர் வாழ் மக்கள் கூறுகின்றனர். இவ்விடத்தில் அமர்ந்து நோக்குவார்க்குச் செங்குத்தான மலைச் சரிவும், சம வெளிகளும் தோன்ற நிற்கும். மேட்டூர் அணை தன் பரந்த நீர்ப் பரப்போடு நம் கண்களில் படும். நெளிந்து செல்லும் மலைப் பாம்பு போல் மலை வழிப் பாதை தோன்றும். அப் பாதையில் மேலும் கீழுமாக ஊர்ந்து வரும் பேருந்து வண்டிகள், நம்மை இன்பத்தில் ஆழ்த்தும். சுண்ணாம்புக் கரட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பேருலைகளிலிருந்து எழும் புகை வான மண்டலத்தை இருட்டாக்கும் காட்சியைக் காணலாம். இரவு நேரங்களில் சேலத்தைக் காணும் போது, அது மின்விளக்குகளில் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்பது திண்ணம்.

பகோடா உச்சி[தொகு]

பகோடா கோவில்

வட கிழக்கில் பகோடா உச்சி (Pagoda Point) என்ற இடம் உள்ளது. இது 4507 அடி உயரமுள்ளது. இங்குள்ள மலைக் கோயில்கள் , பர்மியர்களின் பகோடா கோயில்களைப் போல் விளங்குகின்றன. பகோடாக்கள் அடியில், அகன்றும் மேலே செல்லச் செல்ல, குறுகியும் இருக்கும். எனவே, இவ்விடம் பகோடா உச்சி என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து காண்போருக்கு, கிழக்கில் இருக்கும் தேனுந்தி மலைகளும், கல்ராயன் மலைகளும், சேலம் ஆத்தூர் சமவெளிகளும், பரந்து கிடக்கும் கொல்லி மலை, பச்சைமலை, போதமலை, ஜெருகுமலைத் தொடர்களும் தோன்றும். பகோடா உச்சிக்கு எதிரில் மிகவும் அழகான பெரும்பாறை ஒன்று உள்ளது. அப் பாறையிலிருந்து, சில நூறு அடிகளின் கீழ், தேன்கூடு போன்று அழகுடன் காட்சியளிக்கும், காகம்பாடி என்னும் சிற்றுார் உள்ளது.

கரடிமலையும் பிராஸ்பெக்ட் உச்சியும்[தொகு]

கரடிமலை என்னும் சிகரம் 4828 அடி உயரமுள்ளது. பிராஸ்பெக்ட் உச்சி 4759 அடி உயரமுள்ளது. இவ்விரண்டு இடங்களில் நின்று காண்போருக்குத், திருச்செங்கோடு சமவெளியும், [[ஓமலூர்]க் கோட்டமும், அவை கட்குப் பின்னல், கோவை மாவட்டத்தில் பரவியிருக்கும், பில்லி மலைகள், பருகூர் மலைகள், கம்பட்டராயன் மலைகள், பாலமலை, லாம்ப்டன் சிகரம் முதலியனவும், மைசூர் நாட்டிலுள்ள குட்டிராயன் மலையும் நன்கு தெரியும். வானத்தில் மூட்டமில்லாமல் தெளிவாக இருக்கும் நாட்களில், ஆனை மலைகளும், நீலகிரி மலைகளும், பழனிமலைகளும் நன்கு தெரியும்.

டஃப் சிகரம்[தொகு]

சேர்வராயன் ம லைகளில் காண்பதற்குரிய மற்றாென்று, டஃப் சிகரம் (Duff’s Hill) ஆகும். இதி==லிருந்து காண்போர் சேர்வராயன் மலைகளின் மேற்குச் சரிவுகளையும், அழகுடன் விளங்கும் குறுகிய பள்ளத் தாககையும காணலாம.

காவேரி சிகரம்[தொகு]

ஏர்க்காட்டிலிருந்து நாகலூர் சென்றால், இவ்வுச்சியை அடையலாம். சேர்வராயன் மலையின் வட பகுதியை இவ்விடத்திலிருந்து நன்கு காணலாம். சேர்வராயன் மலையிலேயே மிகவும் அழகான காட்சிகளை இப்பகுதியில்தான் காண இயலும். இவ்விடத்திற்கு அண்மையில்தான் சிறந்த பழத் தோட்டங்களும், காஃபித் தோட்டங்களும் அமைந்துள்னன. காஃபிக் கொட்டையைத் தூய்மைப்படுத்தும் ஆலையும், இங்குதான் உள்ளது. வாணியாற்றுப் பள்ளத்தாக்கும், அதன் துணையாறுகளின் படுகைகளும், அங்கிருந்து காண்போருக்குக் காட்சிதரும். வெள்ளாளக் கடைப் பாதையில் அவைகள் வளைந்து, மஞ்சக் குட்டையை நோக்கிச் செல்லும் காட்சியையும் கண்டு மகிழலாம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yercaud
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • தமிழக அரசு தரும் சேலம் மாவட்ட காலக் கோடுகளை, ஆங்கிலத்தில் காணலாம்.

இப்பக்கங்களையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்காட்டில்_சுற்றுலா&oldid=3537326" இலிருந்து மீள்விக்கப்பட்டது