ஏற்காடு வாழிட வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏற்காட்டின் மலை அடிவாரம்

ஏற்காடு வாழிட வரலாறு (The history of Yercaud) என்பது சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மலை குறித்ததாகும். ஆங்கிலேயர்களால், இம்மலையானது, தமிழக கோடை வாழிடமாக மாற்றப் பட்டது என்பது வரலாறு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில், இம்மலைத்தொடர் உள்ளது. இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து, ஏறத்தாழ 5200 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. மலைப் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர். எனவே, இது ஒரு தமிழகத்தின் சட்டமன்றத் தொகுதியாகவும் விளங்குகிறது. [1].

ஆங்கிலேயரின் தொடக்கம்[தொகு]

நீலகிரி மலை ஒரு கோடை வாழ் இடமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே, கி. பி. 1819-இல் சேலம் நகரில் வாழ்ந்த ஆங்கிலேயே அதிகாரிகள், சேர்வராயன் மலையைத் தெரிவு செய்தனர். சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த காக்பர்ன் (Mr. Cockburn 1820-1829) என்பவர், சேர்வராயன் மலையில் முதன் முதலாகக் குடியேறினர். காஃபி, ஆப்பிள், பியர்ஸ், லாக்குவட்ஸ் முதலியவற்றைப் பயிரிட்டுச் சோதனைகளை நடத்தினர். இன்று ஏற்காட்டுக்கு அண்மையிலுள்ள, கிரேஞ் தோட்டம் (Grange Estate) தான் அவருடைய சோதனைக் களமாக இருந்தது. கிரேஞ் ஹவுசில் இப்போது சரக்கு அகம் (Store house) இருக்கும் இடத்தில்தான் இம்மலை மீது அமைக்கப்பட்ட முதல் கட்டடம் ஆகும். கி. பி. 1823-இல் சேலத்தில் அரசாங்க மருத்துவ (Civil Surgeon) ராக இருந்த ஒரு வெள்ளையரை, சேர்வராயன் மலையின் இயற்கை அழகு வெகுவாகக் கவர்ந்தது. கோடையில் வாழ்வதற்கு ஏற்ற இடமாகச் சேர்வராயன் மலையைக் கருதினர். அதன் மீது, ஒரு நகரம் அமைப்பின், சேலம் மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணினர்.

ஆளுநரின் ஆணை[தொகு]

அவ்வாண்டு சர் தாமஸ் மன்றோ(5 (Sir Thomas Manroe) மாநில ஆளுநராக விளங்கினர். அவருடைய ஆணைப்படி அவ்வாண்டிலேயே, இங்கிலண்ட் என்பவர் சேர்வராயன் மலைகளை அளந்து அறிக்கையை அனுப்பினார். அப்பொழுது இருந்த, சேலம் மாவட்டத் தலைமை மருத் துவர், சேர்வராயன் மலையின் மீது மல்லாபுரத்தில் இருந்து, ஒரு மலைப் பாதை (Ghat road) அமைப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி, மேலதிகாரிகளுக்கு ஒரறிக்கை விடுத்தார். ஆனல் சேர்வராயன் மலைகளின் மீது பரவிய ஒரு கொடிய காய்ச்சலால் தாக்கப் பட்டு அவ்வாண்டிலேயே அவர் இறந்தார். இதனால் இந்த முயற்சி கிடப்பில் போடப் பட்டது.

உடல்நல வாழிடம்[தொகு]

திருச்சபை மலை(Church)

கி. பி. 1824-இல், இந்திய இராணுவத்தில் தளபதியாகப் பணியாற்றி வந்த வெல்ஷ் துரை மகனுர் (Colonel Welsh) சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது சேர்வராயன் மலைகளைப் பார்வையிடும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. காக்பர்ன் தம் குடும்பத்தோடு மலைமீது தங்கி இருந்தார். அவர்களைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். பெட் (Mr. Bett) என்பவர், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது, காஃபி பயிரிடும் தொழில் வெற்றிகரமாக முன்னேறியது. ஆகையாலும், மக்கள் வருவாயை விரும்பி, மக்கள் பெரும் அளவில் அங்கு குடியேறத் தொடங்கினர். நோய்க் காலத்தில், தங்களுடைய தோட்டங்களை விட்டு வெளி யேறியவர்கள் மறுபடியும் குடியேறினர். இயற்கை அழகு மிக்க சரிவுகளில் தங்கள் மனைகளை எழுப்பினர். ஆனல் அவ் வீடுகளெல்லாம், ஏற்காட்டை விடத் தாழ்வான இடங்களிலேயே அமைக்கப் பட்டன. அவ்விடங்களெல்லாம், எளிதிலே மலேரியாக் காய்ச்சலுக்கு உள்ளாகும் இடங்கள், மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்றவையாக இருந்தன. ஆனால், ஏர்க்காடு அமைந்திருக்கும் இடம் ஈரமற்றது ; உடல் நலத்தை வளர்ப்பதற்கேற்ற தட்ப வெப்ப நிலையினைக் கொண்டது. இவ்வாறாக, இந்த நகரமானது சேர்வராயன் மலை மீதுள்ள பீடபூமியின், தென் பகுதியில் அமைந்துள்ளது.

முதல் ஆங்கிலேய வீடு[தொகு]

கி. பி. 1841-ஆம் ஆண்டு ஜெ. எம். லெச்லர் (Rev. M. Lechier) என்ற பாதிரியார், அப்பொழுது சேலம் மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருந்த (Sub Collector), பிரெட் (Brett) என்பவரோடு இங்குள்ள மலை வளங்களைக் கண்டு உந்துதல் அடைந்தார். அதனால் ஒரு வீட்டினைக் கட்டினார். இதுவே ஏற்காட்டின் முதல் வீடு எனக் கருதப்படுகிறது. திருவாளர் பிரெட் கலை உள்ளம் படைத்தவர். வீடுகளை அமைப்பதற்கு எழில் மிக்க இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் பெருவிருப்பம் கொண்டவர். கி. பி. 1845-இல் ஒரழகிய மனையை அமைத்தார். அவ்வில்லம் இப்போது பேர்லாண்டு ஓட்டல் (Fair-Lawns Hotel) என்ற பெயரோடு விளங்குகிறது. உடனே கிரேஞ் என்ற கட்டடமும் உருவாகியது. இது கற்களினால் உறுதியாகக் கட்டப்பட்ட ஈரடுக்கு மாளிகை ஆகும்.

இந்திய புரட்சி[தொகு]

கி. பி. 1857-ஆம் ஆண்டு வட இந்தியாவில் முதல் உரிமைப் போர் நடந்தது. நானா சாகப், ஜான்சிராணி, பகதூர்ஷா ஆகியோர் ஆங்கில அரசுக்கு எதிராகப் போரை நடத்தினர். ஆங்கிலேய இந்திய வரலாற்றாசிரியர்களால், இப்போர் சிப்பாய்க் கலகம் (Soldiers’ Mutiny) என்று அழைக்கப் படுகிறது. அதே ஆண்டில் மலையாள நாட்டில் கேனேலி (Canolly) என்ற ஒரு பெரிய ஆங்கில அதிகாரி படுகொலை செய்யப்பட்டார். அதைப் போன்ற கிளர்ச்சி சென்னை மாகாணத்தில் எதுவும் நடைபெறவில்லை. எனினும், பாதுகாப்புக் கருதி முக்கிய ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்காட்டில் குடியேறத் தொடங்கினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson Hunter, Sir William; Sutherland Cotton, James; Sir Richard Burn, Sir William Stevenson Meyer. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Historical importance of Yercaud
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • தமிழக அரசு தரும் சேலம் மாவட்ட காலக் கோடுகளை, ஆங்கிலத்தில் காணலாம்.

இப்பக்கங்களையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்காடு_வாழிட_வரலாறு&oldid=3293288" இலிருந்து மீள்விக்கப்பட்டது