உள்ளடக்கத்துக்குச் செல்

ஏறைக்கோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏறை என்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைகளில் ஒன்று.

இந்த மலையை ஆண்ட ஏறைக்கோன் சிறந்த போர்வீரர். குறமகள் இளவெயினி என்னும் பெண்பாற்புலவர் ஏறைக்கோன் வீரத்தைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[1] இந்தப் பாடலில் இவரது வள்ளண்மை கூறப்படவில்லை. என்றாலும் பாராட்டிய புலவரை இவர் பேணியிருக்கலாம்.

'பெருங்கல் நாடன்' என இவர் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

இவரது நான்கு பண்புகள் பாடலில் காணப்படுகின்றன.

  1. இவரைச் சேர்ந்தவர்கள் இவருக்குத் தீங்கிழைத்தால் அதனை இவர் பொறுத்துக்கொள்வாராம்.
  2. பிறர் தவறு செய்தால் அதற்காகத் தான் நாணுவாராம்.
  3. தான் போரிடும் படைக்குப் பழி வாராமல் போரிடும் வல்லமை பெற்றவராம்.
  4. வேந்தன் அவையில் பீடுடன் வீரநடை போடுவாராம்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. புறநானூறு 157
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறைக்கோன்&oldid=4356185" இலிருந்து மீள்விக்கப்பட்டது