ஏர் பெர்லின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர் பெர்லின்
Air Berlin Logo.svg
IATA ICAO அழைப்புக் குறியீடு
AB BER AIR BERLIN
நிறுவல்1978 (ஏர் பெர்லின் ஐக்கிய அமெரிக்கா)
செயற்பாடு துவக்கம்1979
வான்சேவை மையங்கள்
முக்கிய நகரங்கள்
 • ஹாம்பர்க் விமானநிலையம்
 • மியூனிச் விமானநிலையம்
 • பால்மா டி மல்லோர்கா விமானநிலையம்
 • ஸ்டட்கர்ட் விமானநிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்டாப்போனஸ் (topbonus)
வான்சேவைக் கூட்டமைப்பு
துணை நிறுவனங்கள்
 • பிலெய்ர்
 • நிக்கி
 • எல்ஜிடபிள்யூ (LGW)
வானூர்தி எண்ணிக்கை131
சேரிடங்கள்171
மகுட வாசகம்Your Airline.
தாய் நிறுவனம்ஏர்பெர்லின் குழுமம்
தலைமையிடம்
பெர்லின், ஜெர்மனி
RevenueRed Arrow Down.svg 4.15 பில்லியன் (2013)[1]
இயக்க வருவாய்Red Arrow Down.svg -231.9 மில்லியன் (2013)[1]
நிகர வருவாய்Red Arrow Down.svg -315.5 மில்லியன் (2013)[1]
சொத்துRed Arrow Down.svg 1.89 பில்லியன் (2013)[1]
Total equityRed Arrow Down.svg -186.1 மில்லியன் (2013)[1]
ஊழியர்கள்8,905 (12/2013)[1]

ஏர் பெர்லின் (Air Berlin) விமான நிறுவனம், ஜெர்மனியின் இரண்டாவது பெரிய விமானச் சேவையாக விளங்குகிறது. ஜெர்மனியின் முதல் பெரிய விமானச் சேவையாக லுஃப்தான்சா விமானச் சேவை விளங்குகிறது. அதிகப்படியான பயணிகளுக்கு பயனளிப்பது என்ற விகிதத்தின் அடிப்படையில் ஐரோப்பாவின் எட்டாவது பெரிய விமானச் சேவையாக ஏர் பெர்லின் இடம்பெற்றுள்ளது.[2]

இதன் அமைப்பில் 17 ஜெர்மன் நகரங்கள், சில ஐரோப்பிய பெருநகரங்கள் மற்றும் பல நிலநடுக்கடல் பகுதி ஓய்வு இலக்குகள், மதீரா, கேனரி தீவுகள், வட ஆப்பிரிக்கா மற்றும் கரிபியனில் அமைந்துள்ள கண்டங்களுக்கு இடைப்பட்ட இலக்குகள், அமெரிக்காக்களின் பகுதிகள் போன்றவை அடங்கும். பெர்லின் நகரின் டேகேல் விமான நிலையம் [3] மற்றும் டசெல்டார்ஃப் விமான நிலையங்களை ஏர் பெர்லின் மையமாகக் கொண்டு செயல்படுகிறது. விமான நிலைய பணியகத்தின் மையமான சார்லோட்டென்பர்க் – வில்மெர்ஸ்டோர்ஃப்பினை [4] ஏர் பெர்லின் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. ஏர் பெர்லின் ஒன்வேர்ல்ட் கூட்டணியில் ஒரு உறுப்பினராகவும், ஆஸ்திரியாவின் நிக்கி மற்றும் சுவிட்சர்லாந்தின் பெலையர் ஆகியவற்றின் துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது. ஏர் பெர்லின் நிறுவனத்தின் 29.21 சதவீத பங்குகளை எடிஹட் ஏர்வேஸ் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் பெற்றுள்ளது.[5]

இலக்குகள்[தொகு]

கண்டங்களுக்கு இடைப்பட்ட சேவை விமானங்களாக அமெரிக்கா, கரிபீயன் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு விமானச் சேவைகளை ஏர் பெரிலின் நிறுவனம் செயல்படுத்துகிறது. இத்துடன் விடுமுறை தின விமானச் சேவைகளாக கேனரி தீவுகள் மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகிய இடங்கள் உட்பட சுமார் 40 நாடுகளின் முக்கியப் பகுதிகளில், 150 இலக்குகளைக் கொண்டு செயல்படுகிறது. பெர்லின் மற்றும் டச்செல்டார்ஃப் ஆகிய இடங்கள் ஏர் பெர்லின் நிறுவனத்தின் முக்கிய இடங்கள் ஆகும். இங்கு அதிக தூரம் செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் ஐரோப்பாவினை இணைக்கும் விமானங்களுக்குரிய பகுதிகளாக இந்த முக்கிய இடங்கள் விளங்குகின்றன.

உயர்தர வழித்தடங்கள்[தொகு]

கோஹ் சமுய் – பாங்காக், பாங்காக் – கோஹ் சமுய், எடின்பர் – லண்டன் மற்றும் லண்டன் – கிளாஸ்கோவ் ஆகிய வழித்தடங்கள் ஏர் பெரிலின் செயல்படக்கூடிய உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 98, 98, 81 மற்றும் 68 விமானங்களை ஏர் பெர்லின் நிறுவனம் இயக்குகிறது.[6]

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்[தொகு]

ஏப்ரல் 2015 இன் படி, ஏர் பெர்லின் நிறுவனம் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.

 • ஏர் பால்டிக்
 • ஏர் செர்பியா [7]
 • ஏர் செய்செல்லெஸ்
 • அலிடாலியா [8]
 • அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
 • பாங்காக் ஏர்வேஸ்
 • பிரிட்டிஷ் ஏர்வேஸ்
 • பல்கரியா ஏர் [9]
 • டார்வின் ஏர்லைன்
 • எடிஹட் ஏர்வேஸ்
 • ஃபின்னையர்
 • ஹைன்ன் ஏர்லைன்ஸ்
 • இபேரியா
 • ஜப்பான் ஏர்லைன்ஸ்
 • ஜெட் ஏர்வேஸ் [10]
 • நிகி
 • பெகஸஸ் ஏர்லைன்ஸ்
 • ராயல் ஜோர்டானியன்
 • எஸ்7 ஏர்லைன்ஸ்
 • யுஎஸ் ஏர்வேஸ்
 • விர்ஜின் ஆஸ்திரேலியா

விமானக் குழு[தொகு]

தற்போதைய விமானக் குழு[தொகு]

ஜூன் 2015 இன் படி, ஏர் பெர்லின் நிறுவனத்தின் விமானக் குழுவில் பின்வரும் விமானங்கள் உள்ளன.[11]

விமானம் ! சேவையில்

இருப்பவை

ஆர்டர் விருப்பங்கள் பயணிகள்
வணிகம் பொருளாதாரம் மொத்தம்
ஏர்பஸ்

ஏ319-100

4 4 150 150
ஏர்பஸ்

ஏ320-200

43 6 180 180
ஏர்பஸ்

ஏ321-200

17 13 210 210
ஏர்பஸ்

ஏ330-200

14 1 19— 279336 298336
போயிங்க்

737-700

8 144 144
போயிங்க்

737-800

28 2 186 186
பாம்பார்டியர்

டாஷ் 8 க்யூ 400

17 76 76
மொத்தம் 131 26

விமானக் குழு முன்னேற்றம்[தொகு]

ஏர் பெர்லின் பின்வரும் விமானங்களை செயல்படுத்தி வருகிறது.[12]

விமானம் அறிமுகம் ஓய்வு

பெற்றது

ஏர்பஸ்

ஏ319

2006
ஏர்பஸ்

ஏ320

2005
ஏர்பஸ்

ஏ321

2008
ஏர்பஸ்

ஏ330-200

2008
ஏர்பஸ்

ஏ330-300

2008 2013
BAe

146-200

2003 2004
போயிங்க்

707

1978 1981
போயிங்க்

737-200

1980 1986
போயிங்க்

737-300

19862007 19902010
போயிங்க்

737-400

1990 2007
போயிங்க்

737-700

2003
போயிங்க்

737-800

1998
பாம்பார்டியர்

டாஷ் 8 க்யூ 400

2008
எம்பெரர்

190

2013 2013
ஃபோக்கர்

100

2004 2009

விருதுகள்[தொகு]

 • 2008 – கேபிடல் பத்திரிக்கை : “ஏர்லைன் ஆஃப் த இயர் 2008”. டெலெகிராப் டிராவல் அவார்ட், உலக பயண விருது 2008,[13] சிறந்த கட்டண விமானச் சேவை [14]
 • 2009 – ஐரோப்பிய வணிக விருது 2009, ஓய்கோம் ஆய்வு : முன்னணி முதலீட்டிற்கான விருது [13]
 • 2010 : வணிக பயண விருது 2010, ரெயிஸ்பிளிக் 2010 : 2010 ஆம் ஆண்டிற்கான விமானச் சேவை, ஸ்பெயின் சுற்றுலா விருது 2010,[13] கிளவெர் ரெய்சென் 2010 : “ஐரோப்பாவின் இளமை விமானக் குழு”, ஸ்கைடிராக்ஸ் உலக ஏர்லைன் விருது 2010: “சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை ஐரோப்பா”, ஃபிரான்ஸ்-வோன்-மென்டெல்சாஹ்ந் பதக்கம், டானிஷ் பயண விருது : “சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை” [13]
 • 2011 – டிராவல்பிளஸ் ஏர்லைன் அமெனிடி பேக் விருதுகள், பிராண்ட் விருது 2011, ஓகோகுளோப் 2011.

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2013 - Financial Figures". Air Berlin. பார்த்த நாள் 2014-04-21.
 2. airberlin Strategy and Business Model. Air Berlin, retrieved on 19 January 2011.
 3. "Berlin Tegel still Air Berlin’s #1 base". Anna.aero. பார்த்த நாள் 2012-03-28.
 4. "Approach map." Air Berlin. Retrieved on 5 May 2010.
 5. "Annual Report 2012 - Financial Figures". Air Berlin. பார்த்த நாள் 2013-10-09.
 6. "On-Board Air Berlin". cleartrip.com.
 7. Young, Kathryn M. (2013-07-17). "Air Berlin, JAT Airways agree to codeshare | Airports & Routes content from". ATWOnline. பார்த்த நாள் 2013-12-19.
 8. http://www.wiwo.de/unternehmen/dienstleister/codeshare-abkommen-air-berlin-bietet-fluege-mit-alitalia-an/10836162.html
 9. http://chronicle.bg/air-berlin-i-bulgaria-air-podpisaha-sporazumenie-za-kod-sher/
 10. [1]
 11. "Air Berlin fleet". ch-aviation.ch. பார்த்த நாள் 2015-06-05.
 12. "Air Berlin historic fleet list at airfleets.net. Retrieved 2011-04-18". Airfleets.net. பார்த்த நாள் 2012-03-28.
 13. 13.0 13.1 13.2 13.3 "Air Berlin awards". Airberlin.com. பார்த்த நாள் 2012-03-28.[தொடர்பிழந்த இணைப்பு]
 14. World Winners 2008, World Travel Awards
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_பெர்லின்&oldid=2747005" இருந்து மீள்விக்கப்பட்டது