ஏர் டான்சானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏர் டான்சானியா என்பது டான்சானியா நாட்டின் தேசிய விமானச் சேவையாகும். இது டார் எஸ் சலாம் எனும் பகுதியினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் தலைமை மையம் ஜூலியஸ் நையிரேரே சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்நிறுவனம் 1977 ஆம் ஆண்டு, ஏர் டான்சானியா கார்பரேஷன் என்றுதான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டுவரை ஏர் டான்சானியா விமானச் சேவை நிறுவனம் முழுவதும் டான்சானியா நாட்டிற்குச் சொந்தமாக இருந்தது. நாட்டின் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தினை உயர்த்தும்பொருட்டு இந்த விமானச் சேவையின் பாதிபகுதி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனால் ஏர் டான்சானியா நிறுவனம் தனது பக்கம் 51 சதவீத பங்குகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ள பங்குகளைக் கொண்டு தென்னாப்பிரிக்க விமானச் சேவையான சௌத் ஆஃப்பிரிக்கன் ஏர்வேஸ் உடன் கூட்டுப் பங்காண்மை மேற்கொண்டது.

இந்த கூட்டுப் பங்காண்மை நான்கு ஆண்டுகளாக நீடித்தது. இதனால் சுமார் 24 பில்லியன் (19 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நஷ்டம் ஏற்பட்டது. இதனால் 2006 ஆம் ஆண்டு, டான்சானியா அரசு தனது பங்குகளை மீண்டும் தனியாரிடமிருந்து வாங்கிக்கொண்டு ஏர் டான்சானியா மீது முழுமையான உரிமையினைப் பெற்றது. பல ஆண்டுகளாக ஏர் டான்சானியா விமானச் சேவை நிறுவனம் உள்நாடு, வெளிநாடு மற்றும் கண்டங்களுக்கு இடைப்பட்ட இலக்குகளில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சமீபகாலமாக இதன் பங்கு வர்த்தகம் மிகவும் குறைந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில் 19.2 சதவீதமாக இருந்த இதன் பங்கு வர்த்தக மதிப்பு, 2011 ஆம் ஆண்டில் வெறும் 0.4 சதவீதமாக மாறியுள்ளது.[1][2][3]

வணிக விவரங்கள்[தொகு]

2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013
விற்பனைமுதல்

(TZS b)

39.6
விற்பனை

முதல் (அமெரிக்க டாலர் மில்லியனில்)

37.7
வரிக்கு

முந்தைய இலாபம் / நஷ்டம் (TZS b)

−8.7 −9.3
மொத்த

இலாபம் / நஷ்டம் (அமெரிக்க டாலர் மில்லியனில்)

−7.3 −7.7
வேலையாட்களின்

எண்ணிக்கை

300+ 182
பயணிகளின்

எண்ணிக்கை,(ஆயிரத்தில்)

267 246 295 207 60
பயணிகளின்

பளு விகிதம் (%)

விமானங்களின்

எண்ணிக்கை

2 2 2 2 2 2 1 1 1 1

இலக்குகள்[தொகு]

பிப்ரவரி 2015 இன் படி, ஏர் டான்சியா ஒரு சர்வதேச விமான இலக்கினையும், மூன்று உள்நாட்டு விமான இலக்குகளையும் கொண்டுள்ளது.

நாடு இலக்கு சர்வதேச

வான்வழிப் போக்குவரத்து குழுமம்

சர்வதேச,பயணிகள் விமானப் போக்குவரத்து,குழுமம் விமான

நிலையம்

டான்சானியா அருஷா ARK HTAR அரருஷா

விமான நிலையம்

கோமோரோஸ் மமோரோனி HAH FMCH இளளவரசர்

சையது இப்ரஹீம் சர்வதேச விமான நிலையம்

டான்சானியா டார்

எஸ் சலாம்

DAR HTDA ஜூலியஸ்,நைரேரே சர்வதேச விமான நிலையம்
டான்சானியா கிகோமா TKQ HTKA கிகோமா

விமான நிலையம்

டான்சானியா ம்பேயா - HTGW சாங்க்வே

விமான நிலையம்

டான்சானியா ம்ட்வாரா MYW HTMT ம்ட்வாரா

விமான

நிலையம்
டான்சானியா ம்வான்ஸா MWZ HTMW ம்வான்ஸா விமான நிலையம்
டான்சானியா டபோரா TBO HTTB டபோரா விமான நிலையம்

ஏர் டான்சானியா விமானச் சேவை, எந்தவித உயர்தர வழித்தடமுமின்றி செயல்படுகிறது.

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்[தொகு]

ஜூன் 2014 இன் படி, ஏர் டான்சானியா பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.

  • இன்டெரையர் தென்னாப்பிரிக்கா (டார் எஸ் சலாம் - ஜோஹன்ஸ்பெர்க்) .

அதற்கு முன்பு, என்டேப்பே – டார் எஸ் சலாம் வழிப்பாதையில் ஏர் உகாண்டா என்ற விமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

விமானக் குழு[தொகு]

விமானம் சேவையில்

இருப்பவை

வருங்கால

ஆணைகள்

பயணிகள் குறிப்புகள்
பாம்பார்டியர்

CRJ100

1 50
பாம்பார்டியர்

CRJ200

1 50 கென்யாவின்,டிஏசி ஏவியேஷனிடம் இருந்து,குத்தகைக்கு பெறப்பட்டது
பாம்பார்டியர்

டேஷ் 8-300

1 50
பாம்பார்டியர்

டேஷ் 8-400

- 2 78 014

இல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடன் வழியாக,வாங்கப்பட்டது.

எம்பெரர்

170

- 1 80 பிரேசில்

முன்னேற்ற வங்கியின் கடன் உதவியால் வாங்கப்பட உள்ளது.

எம்பெரர்

190

- 1 100
ஹார்பின்

Y-12E

- 2 18 சீனாவின்

எக்ஃஸிம் வங்கியின் சலுகைக் கடன் உதவியால் வாங்கப்பட உள்ளது.

மொத்தம் 3 6

விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்[தொகு]

  • மார்ச் 1, 2010 : ஏர்டான்சியாவின் போயிங்க் 737 – 200 ரக விமானம், ம்வான்ஸா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஈரமான ஓடுதளம் காரணமாக சறுக்கி விழுந்தது. இதனால் அந்த விமானத்தின் முற்பகுதியில் அமைந்திருந்த சக்கரங்கள் பழுதானது, அத்துடன் விமானத்தின் உடற்பகுதி மற்றும் வலதுபக்க இஞ்சினும் பழுதானது, ஆனால் பயணிகளுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.[4][5]
  • ஏப்ரல் 8, 2012. கிகோமா விமான நிலையத்தில் இருந்து ஏர் டான்சியா நிறுவனத்தின் டி ஹாவில்லான்ட் கனடா டிஎச்சி - 8 – 311 க்யூ ரக விமானம் மேலே எழும்ப முற்பட்டபோது விபத்துக்குள்ளானது. பயணிகளுக்கு எவ்வித காயமும் இல்லை, ஆனால் விமானத்தினை மீண்டும் பழுது நீக்க முடியாதபடி சேதமடைந்தது.[6]

குறிப்புகள்[தொகு]

  1. "Air Operators - Market Share 2009-2011" (PDF). Tanzania Civil Aviation Authority. 2011. Archived from the original (PDF) on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "ATCL Destinations". airtanzania.co.tz. Archived from the original on 14 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "About Air Tanzania". cleartrip.com. Archived from the original on 20 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Air crash in Mwanza", Tanzanian Affairs, 26 September 2015
  5. "Air Tanzania Corporation Ltd", Tanzanian Affairs, 26 September 2015
  6. Harro Ranter (9 April 2012). "ASN Aircraft accident de Havilland Canada DHC-8-311Q 5H-MWG Kigoma Airport (TKQ)". பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_டான்சானியா&oldid=3631000" இலிருந்து மீள்விக்கப்பட்டது