உள்ளடக்கத்துக்குச் செல்

ஏர் இந்தியா பறப்பு 171

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர் இந்தியா பறப்பு 171
விபத்து நடந்த இடத்தை இந்திய உள்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
விபத்து சுருக்கம்
நாள்12 ஜூன் 2025
சுருக்கம்சில நிமிடங்களுக்கு பறந்து தரையில் மோதியது.
பயணிகள்230
ஊழியர்12
காயமுற்றோர்0
உயிரிழப்புகள்241
தப்பியவர்கள்1 (விஸ்வாஸ் குமார் ரமேஷ்)
வானூர்தி பெயர்போயிங் 787-8
இயக்கம்ஏர் இந்தியா
வானூர்தி பதிவுVT-ANB
பறப்பு புறப்பாடுசர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம், அகமதாபாது, இந்தியா
சேருமிடம்கேட்விக் வானூர்தி நிலையம், லண்டன், இங்கிலாந்து

ஏர் இந்தியா பறப்பு 171 (Air India Flight 171) என்ற பயணியர் வானூர்தி இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாது சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இலண்டன் செல்வதற்காக 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேருடன் 2025 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதி பிற்பகலில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.[1][2][3] விபத்துக்குள்ளான வானூர்தி போயிங் 787-8 வகையைச் சேர்ந்ததாகும்.[4]

2011-இல் வணிக சேவையில் நுழைந்த 787 ட்ரீம்லைனரின் முதல் அபாயகரமான விபத்து, விமான இழப்பு இதுவாகும்.

பின்னணி

[தொகு]

வானூர்தியும் வழித்தடமும்

[தொகு]

விபத்துக்குள்ளான விமானம் 11 வயதான போயிங் 787-8 ட்ரீம்லைனர் எனும் பதிவு செய்யப்பட்ட VT-ANB வகை. இதன் வரிசை எண் 36279 ஆகும்.[5][6] இந்த வானூர்தி போயிங் எவரெட் தொழிற்சாலையில்[7][8] உருவாக்கப்பட்டது. மேலும் போயிங் சவுத் கரோலினாவில் செய்யப்பட்ட உருகிப் பிரிவுகளும் அடங்கும்.[9] இதனை 28 சனவரி 2014 முதல் ஏர் இந்தியா பயன்படுத்த தொடங்கியது. இந்த வானூர்தி இரண்டு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ்-1பி67 பொறிகளால் இயக்கப்பட்டது.[10]

ஏர் இந்தியா 2023-இல் இலண்டன் கேட்விக் வழித்தடங்களை இயக்கத் தொடங்கியது.[11] விபத்தின் போது, ​​இது அகமதாபாத்திற்கு ஐந்து பறப்பு உட்பட ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு புறப்பாடுகளை கொண்டிருந்தது.[12] இந்த வானூர்தி நிலையம் அடர்த்தியான மக்கள் வசிக்கும் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.[13]

பயணிகளும் பணியாளர்களும்

[தொகு]
தேசியம் பயணிகள் பணியாளர்கள் மொத்தம்
இந்தியா 169 12 181
ஐக்கிய இராச்சியம் 53 53
போர்த்துகல் 7 7
கனடா 1 1
மொத்தம் 230 12 242

இந்த வானூர்தியில் 230 பயணிகள் உட்பட 242 பேர் இருந்தனர். இவர்களில் 13 குழந்தைகள், 2 கைக்குழந்தைகள் உட்பட - 2 விமானிகளும் 10 விமான பணிப்பெண்களும் பயணித்தனர்.[14][15] பயணிகளில் 169 பேர் இந்திய நாட்டவர்கள், 53 பேரி ஐக்கிய இராச்சியத்தினையும், 7 பேர் போர்த்துகல் நாட்டினையும் ஒரு கனடா நாட்டவரும் அடங்குவர்.[16][17][18] 55 வயதான விமானி சுமீத் சபர்வால், 8,200 மணிநேரம் பறந்த அனுபவமும், முதல் அதிகாரி கிளைவ் குந்தர், (32 வயது) 1,100 மணிநேரம் பறந்த அனுபவமும் கொண்டவர்.[19][20]

விபத்து விவரம்

[தொகு]

விபத்திற்குள்ளான வானூர்தி 11 வயதாகிய போயிங் 787-8 ஆகும். 14 டிசம்பர் 2013 அன்று முதலில் பறந்த இவ்வானூர்தியை, 28 ஜனவரி 2014 அன்று ஏர் இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது.

வானூர்தி நிலையத்தின் 'மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி' படம் பிடித்திருந்த காட்சி
Map
About OpenStreetMaps
Maps: terms of use
1km
0.6miles
Crash site
விபத்து நடந்த இடம்
Ahmedabad International Airport
Ahmedabad Airport
அளவுகோல் 0.6 மைல்கள் (970 m)


மேடே

[தொகு]

விமானம் சேதமடைந்தபோது, கடைசி முன்மொழிவு 'மேடே' அழைப்பாக இருந்தது. இது உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் உதவி வேண்டி கொடுக்கப்பட்ட அழைப்பாகும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்த குடியிருப்பு பகுதியின் நிலை என்ன?". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/india/1365301-plane-crashes-into-doctors-hostel-what-are-the-damages-in-the-residential-area-in-ahmedabad.html. பார்த்த நாள்: 12 June 2025. 
  2. ABP News Bureau (2025-06-12). "Air India Plane With 242 Onboard Crashes In Gujarat's Ahmedabad: Video". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-06-12.
  3. "Ahmedabad Incident: Smoke Seen After Air India Plane Crash at Adani Airport". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2025-06-12.
  4. DIN (2025-06-12). "குஜராத்தில் பயணிகள் விமானம் விழுந்தது! 240 பேரின் கதி என்ன?". Dinamani. Retrieved 2025-06-12.
  5. "Gujarat Air India Plane Crashed into Ahmedabad Doctors' Hostel, 25 Doctors Injured". ABP News. 12 June 2025 இம் மூலத்தில் இருந்து 12 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250612151816/https://news.abplive.com/cities/gujarat-air-india-plane-crash-ahmedabad-hospital-doctors-injured-1779345. 
  6. Lee, Danny; Siddharth Vikram, Philip; Mishra, Mihir (12 June 2025). "Over 200 Dead After London-Bound Boeing Jet Crashes in India Air India Boeing 787 Bound for London Crashes After Takeoff". https://www.bloomberg.com/news/articles/2025-06-12/air-india-boeing-787-from-ahmedabad-to-london-gatwick-crashes. "The aircraft involved in Thursday's accident carried the VT-ANB registration and was almost 12 years old. The plane was powered by two General Electric Co. GEnx engines." 
  7. Hemmerdinger, Jon (12 June 2025). "US investigators head to India to assist with 787-8 inquiry". FlightGlobal இம் மூலத்தில் இருந்து 12 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250612145701/https://www.flightglobal.com/safety/us-investigators-head-to-india-to-assist-with-787-8-inquiry/163337.article. 
  8. Henneke, Michael (12 June 2025). "Plane in Air India crash tragedy was built in Everett". The Everett Herald இம் மூலத்தில் இருந்து 13 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250613010449/https://www.heraldnet.com/news/plane-in-air-india-crash-tragedy-was-built-in-everett/. 
  9. Tkacik, Maureen (12 June 2025). "One of the Dreamliners That Gave a Boeing Manager Nightmares Just Crashed". The American Prospect இம் மூலத்தில் இருந்து 13 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250613004127/https://prospect.org/economy/2025-06-12-dreamliner-gave-boeing-manager-nightmares-just-crashed-air-india/. 
  10. Schofield, Adrian; Flottau, Jens (12 June 2025). "Air India Boeing 787-8 Crashes After Takeoff". Aviation Week & Space Technology. இணையக் கணினி நூலக மையம்:990683903 இம் மூலத்தில் இருந்து 12 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250612134318/https://aviationweek.com/air-transport/safety-ops-regulation/air-india-boeing-787-8-crashes-after-takeoff. 
  11. "Air India launches Gatwick routes". The Business Travel Magazine. 30 March 2023 இம் மூலத்தில் இருந்து 18 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250618064103/https://thebusinesstravelmag.com/air-india-launches-gatwick-routes/. 
  12. "Minister says black box found at Air India crash site as grieving families await answers". BBC News. 12 June 2025. Archived from the original on 14 June 2025. Retrieved 17 June 2025.
  13. "Black box found at site of India plane crash that killed 265". Agence France-Presse. Ahmedabad, India. 13 June 2025. https://www.france24.com/en/live-news/20250613-rescue-teams-comb-site-of-air-india-crash-that-killed-at-least-265. 
  14. "Why did Ahmedabad-London Air India flight crash? Black box holds all answers – here's what it is". The Financial Express (India). 12 June 2025 இம் மூலத்தில் இருந்து 13 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250613211640/https://www.financialexpress.com/india-news/why-did-ahmedabad-london-air-india-flight-crash-black-box-holds-all-answers-heres-what-it-is/3877636/. 
  15. Solanki, Ajit; Roy, Rajesh (12 June 2025). "London-bound Air India flight with more than 240 aboard crashes after takeoff from Ahmedabad, India". Associated Press News இம் மூலத்தில் இருந்து 13 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250613204848/https://apnews.com/article/india-plane-crash-cad8dad5cd0e92795b03d357404af5f8. 
  16. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AVH என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  17. Aguilar, Bryann; Leathong, Sean (12 June 2025). "Canadian dentist killed in Air India crash lived in Etobicoke" இம் மூலத்தில் இருந்து 12 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250612190901/https://www.ctvnews.ca/canada/article/canadian-dentist-killed-in-air-india-crash-lived-in-etobicoke/. 
  18. "Ahmedabad plane crash live updates: Chances of any survivors slim, say sources". Hindustan Times. 12 June 2025 இம் மூலத்தில் இருந்து 12 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250612101226/https://www.hindustantimes.com/india-news/ahmedabad-plane-crash-live-updates-air-india-flight-crashes-ahmedabad-airport-death-toll-news-101749717953751.html. 
  19. "Air India Ahmedabad-London flight crashes near airport in Meghani area". The Times of India. 12 June 2025 இம் மூலத்தில் இருந்து 13 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250613040231/https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/plane-crashes-in-ahmedabads-meghani-area/articleshow/121798487.cms. 
  20. Mashal, Mujib; Kumar, Hair. "A Takeoff, a Mayday Call, and 2 Air India Pilots Who Never Made it Home". The New York Times. Archived from the original on 15 June 2025. Retrieved 15 June 2025.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_இந்தியா_பறப்பு_171&oldid=4297539" இலிருந்து மீள்விக்கப்பட்டது