ஏர் அல்சீரியா
![]() | |||||||
| |||||||
நிறுவல் | மார்ச்சு 15, 1947 | ||||||
---|---|---|---|---|---|---|---|
வான்சேவை மையங்கள் | யுவாரி பூமெடீன் வானூர்தி நிலையம் | ||||||
முக்கிய நகரங்கள் | ஓரான் எ செனியா வானூர்தி நிலையம் | ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | ஏர் அல்சீரியா புளுசு | ||||||
வானூர்தி நிலைய ஓய்விடம் | மார்ஹபா ஓய்விடம் | ||||||
துணை நிறுவனங்கள் | ஏர் அல்சீரியா சரக்கு | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 49 | ||||||
சேரிடங்கள் | 69 | ||||||
மகுட வாசகம் | எப்போதும் உங்கள் கவனிப்பில்[1] | ||||||
தாய் நிறுவனம் | அல்சீரிய அரசு | ||||||
தலைமையிடம் | அல்ஜியர்ஸ், அல்சீரியா | ||||||
முக்கிய நபர்கள் | மொகமது-சாலா பவுல்டிஃப் (தலைவர்) | ||||||
Revenue | ![]() | ||||||
நிகர வருவாய் | ![]() | ||||||
இணையத்தளம் | www |
ஏர் அல்சீரியா எஸ்பிஏ[2] (Air Algérie SpA, அரபு மொழி: الخطوط الجوية الجزائرية) அல்சீரியாவின் தேசிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும்.[3] இதன் தலைமையகம் அல்ஜியர்சின் இம்மெயுபிள் எல்-யாசைரில் அமைந்துள்ளது.[4][5]யுவாரி பூமெடீன் வானூர்தி நிலையத்தை மையமாகக் கொண்டு ஏர் அல்சீரியா 28 நாடுகளில் 39 சேரிடங்களுக்கு கால அட்டவணைப்படியான சேவைகளை வழங்கி வருகிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர உள்நாட்டிலும் 32 வானூர்தி நிலையங்களுக்கு சேவை வழங்குகிறது. பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கத்தின் உறுப்பினரான ஏர் அல்சீரியா[6] அரபு வான் சேவையாளர்கள் அமைப்பிலும்[7] ஆபிரிக்க வான்போக்குவரத்து நிறுவனங்களின் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளது.[8]திசம்பர் 2013[update] நிலவரப்படி ஏர் அல்சீரியா 100% அல்சீரிய அரசுக்கு உரிமையுள்ள நிறுவனமாகும். இசுடார் அலையன்சு அல்லது இசுக்கைடீம் அமைப்புகளுடன் இணைய விண்ணப்பித்திருப்பதாகவும் லுஃப்தான்சாவுடன் கூட்டாக சேவை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.[9]
செப்டம்பர் 2021 இல், பிரான்ஸ் மற்றும் அல்ஜீரியா இடையே போதைப்பொருட்களை கடத்தி வந்த அதன் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட பிறகு, தேசிய நிறுவனம் அதன் விதிகளை கடுமையாக்கியது.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Air Algérie Official website
- ↑ "Company Overview of Air Algerie SpA." Bloomberg Businessweek. Retrieved on 13 October 2012.
- ↑ Ahmed, Hamid Ould (6 January 2014). "UPDATE 2-Air Algerie signs deals to buy Airbus, Boeing jets". ராய்ட்டர்ஸ். Archived from the original on 2014-06-25. https://web.archive.org/web/20140625232806/http://www.reuters.com/article/2014/01/06/air-algeria-idUSL6N0KG0WD20140106.
- ↑ "Our Branches பரணிடப்பட்டது 2016-09-10 at the வந்தவழி இயந்திரம்." Air Algérie. Retrieved on 10 February 2011. English: "HeadQuarters Address AIR ALGÉRIE 1, PLACE MAURICE AUDIN ALGER- ALGÉRIE" French: "Direction Générale SIÉGE social AIR ALGÉRIE 1, PLACE MAURICE AUDIN ALGER- ALGÉRIE"
- ↑ "World Airline Directory." Flight International. 30 March 1985. 33." Retrieved on 17 June 2009. "Head Office: 1 Place Maurice Audin, Immeuble El-Djazair, Algiers, Algeria."
- ↑ "Current Airline Members". International Air Transport Association. 15 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Moores, Victoria (26 November 2010). "EgyptAir chief to push AFRAA-AACO co-operation". அடிஸ் அபாபா: Flightglobal. Archived from the original on 17 ஜனவரி 2013. https://www.webcitation.org/6DkADNY37?url=http://www.flightglobal.com/news/articles/egyptair-chief-to-push-afraa-aaco-co-operation-350263/. பார்த்த நாள்: 17 January 2013.
- ↑ "AFRAA Current Members". African Airlines Association. 15 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Saidoun, Nabila (1 July 2012). "Le PD-G Mohamed-Salah boultif vise le leadership du marché international". Liberte-algerie.com. Archived from the original on 25 ஜூன் 2014. https://web.archive.org/web/20140625230538/http://www.liberte-algerie.com/actualite/les-nouvelles-ambitions-d-air-algerie-le-p-dg-mohamed-salah-boultif-vise-le-leadership-du-marche-international-181035.