ஏர்வாடி தீ விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர்வாடி தீ விபத்து
நாள்6 ஆகத்து 2001[1]
நிகழிடம்ஏர்வாடி
காயப்பட்டோர்5
உயிரிழப்பு28

ஏர்வாடி தீ விபத்து (Erwadi fire incident) என்பது 2001 ஆகத்து 6 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு தீ விபத்து ஆகும், இந்த தீவிபத்தானது நம்பிக்கை சார்ந்த மனநலக் காப்பகத்தில் 28 மன நோயாளிகள் தீயில் கருகி இறந்தனர். இந்த மன நோயாளிகள் தமிழ்நாட்டின்இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கிராமத்தில் இயங்கி வந்த மொகைதீன் பாதுசா மனநலக் காப்பகத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர்.[2][3]

இந்த நேர்சியானது மாநிலத்தில் நடந்த நான்கு மிகப்பெரிய தீவிபத்துக்களில் ஒன்றாகும், பிற விபத்துகள் 2004 சனவரி 23 இல் திருவரங்கம் திருமணக்கூட தீவிபத்தில் 50 பேர் இறந்தனர். அடுத்து 1997 சூன் 7 அன்று தஞ்சை பெரிய கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து அதில் 48 பேர் இறந்தனர். அடுத்து  கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து இதில் 94 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர்.

சவுதி அரேபியாவில் இருந்து இங்கு வந்த குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது வலியுல்லாவின் தர்கா என்னும் அடக்கத்தலாத்தால் ஏர்வாடி புகழ்பெற்றது. இங்கு ஏராளமான மனநலக் காப்பகங்கள் இருந்தன. இந்த தர்காவில் எரியும் விளக்கில் உள்ள எண்ணை மற்றும் புனித நீர் போன்றவை பல்வேறு நோய்களை, குறிப்பாக மனநலப் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கான சக்தி கொண்டதாக பலர் நம்புகின்றனர். இங்கு தரப்படும் சிகிச்சைகளில் தொடர்ந்து பிரம்பால் அடிப்பது, அடித்து நொறுக்கி "தீமையை விரட்டுதல்" போன்றவையும் அடங்கும். நோயாளிகள் பகலில் தடிமனான கயிறுகளால் மரங்களில் கட்டிவைத்திருப்பார்கள். இரவில் அவர்களது படுக்கைகளில் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பார்கள்.[4] நோயாளிகள் தங்களது கனவில் வரும் தெய்வீகக் கட்டளை வந்தப் பிறகு வீடு திரும்புவர். இந்த தெய்வீகக் கட்டளை கிடைக்க இரண்டு மாதங்களிலிருந்து பல ஆண்டுகள் வரை ஆகும் என கருதி காத்திருக்கின்றனர்.

தர்காவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை காலவோட்டத்தில் அதிகரித்ததால், நோயாளிகளைப் பராமரிப்பதாக ஏராளமான காப்பகங்கள் அமைக்கப்பட்டன. ஏர்வாடிக்கு தங்கள் உறவினரைக் குணப்படுத்த அழைத்துவருபவர்களுக்காக இந்த காப்பகங்கள் பெரும்பாலும் நிறுவப்பட்டன.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை, தீ பரவிய பின்னர், அங்கு இருந்த 45 நோயாளிகளைக் காப்பாற்ற குறைந்த அளவே வாய்ப்பு இருந்தது, ஏனென்றால் மன நோயாளிகள் இந்திய சட்டங்களுக்குப் புறம்பாக, அவர்கள் தூங்கும் படுக்கைகளில் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தனர். தீயில் இருந்த தப்ப முயன்ற மன நோயாளிகளால் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதால் தப்ப இயலவில்லை. இந்த நேர்ச்சியில் ஐந்து பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாதவையாக இருந்தன.[5]

பின்விளைவுகள்[தொகு]

இங்கு செயல்பட்டுவந்த மனநலக் காப்பகங்களை அனைத்தும் 2001 ஆகத்து 13 அன்று மூடப்பட்டு, அங்கு இருந்த 500 மன நோயாளிகள் அரசாங்க பராமரிப்பில் கொண்டுவரப்பட்டனர்.[6] உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, என். ராமதாஸ் தலைமையிலான ஒரு ஆணையம் இந்த மரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. ஆணையமானது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கவனிப்பானது மேம்படுத்தப்பட வேண்டும், மனநலக் காப்பகத்தை அமைக்க விரும்புபவர்கள் அனைத்து கைதிகளும் கொண்டதாக காப்பகத்தை அமைக்க வேண்டும், அதற்கு உரிய உரிமத்தைக் கட்டாயம் பெறவேண்டும் என்று பரிந்துரைத்தது.[7]

2007 ஆம் ஆண்டு, தீவிபத்து நேர்ந்த மொகைதீன் பாதுசா மனநலக் காப்பக உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு உறவினர்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chronology of major fire accidents". Hindustan Times (New Delhi, India). 9 December 2011 இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140610085953/http://www.highbeam.com/doc/1P3-2531606241.html. பார்த்த நாள்: 30 November 2013. (subscription required)
  2. Asha Krishnakumar (18 August 2001). "Deliverance in Erwadi". Frontline,. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)CS1 maint: extra punctuation (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Indian mental homes face closure". BBC News. 8 August 2001. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011.
  4. Tarun Arora (August). "Indian Parliament: Responding To International Obligations Regarding – The Rights Of Mentally Retarded People". Legal Service India. Com. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011. {{cite web}}: Check date values in: |date= (help); More than one of |author= and |last= specified (help)
  5. BARRY BEARAK (8 August 2001). "25 Inmates Die, Tied to Poles, In Fire in India In Mental Home". New York Times. பார்க்கப்பட்ட நாள் 21 August 2017. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  6. ASHA KRISHNAKUMAR (August 2001). "Escape from Erwadi". Frontline. Archived from the original on 10 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  7. ASHA KRISHNAKUMAR (9 November 2002). "Probe report on Erwadi". Frontline. Archived from the original on 10 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  8. "Erwadi: Accused get 7 yrs' RI". Express news service. Indian Express. Oct 31, 2007. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்வாடி_தீ_விபத்து&oldid=3928312" இலிருந்து மீள்விக்கப்பட்டது