ஏரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏரிஸ்

ஏரிஸ் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் கடவுளர்களான ஜூஸ் மற்றும் ஹீரா ஆகியோரின் மகன் ஆவார். இவர் போருக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மார்ஸ் ஆவார். போர்க்கலையில் சிறந்தவராக பொதுவாக அறியப்பட்டாலும், ஹோமர் எழுதிய இலியட் காப்பியத்தில் ஏரிஸ் சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதினா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவளாகவும், ஏரிஸ் சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரிஸ்&oldid=2019500" இருந்து மீள்விக்கப்பட்டது