ஏரியல் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடிகை இசெலா வேகா ஏரியல் விருதுடன்

ஏரியல் விருதுகள் என்பது மெக்ஸிகோ திரைப்பட சங்கத்தால் வழங்கப்படும் விருதுகள் ஆகும். இது 1947 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மெக்ஸிகன் சினிமாவில் நடிப்பு, இயக்கம் மற்றும் திரைக்கதை போன்ற மோஷன் பிக்சர் தயாரிப்பில் சிறந்து விளங்குவோர்களை இந்த விருது அங்கீகரிக்கிறது. இது மெக்சிகன் திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது. மெக்ஸிக்கோ சினிமாவில் இவ்விருதுகள் அகாடமி விருதுகளுக்கு ( "ஆஸ்கார்") சமமாக கருதப்படுகிறது. [1]

விருதுகள்[தொகு]

 • சிறந்த விசுவல் எப்பக்ட்ஸுக்கான ஏரியல் விருது
 • சிறந்த முதல் படைப்புக்கான ஏரியல் விருது
 • சிறந்த குறுகிய ஆவணப்படத்திற்கான ஏரியல் விருது
 • சிறந்த ஆவணப்படத்திற்கான ஏரியல் விருது
 • சிறந்த அனிமேஷனுக்கான ஏரியல் விருது
 • சிறந்த புனைகதைக்கான ஏரியல் விருது
 • சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஏரியல் விருது
 • சிறந்த ஐபரோ-அமெரிக்க திரைப்படத்திற்கான ஏரியல் விருது
 • சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சிறந்த நடிகருக்கான ஏரியல் விருது
 • சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சிறந்த நடிகைக்கான ஏரியல் விருது
 • சிறந்த குழந்தை நடிப்புக்கான ஏரியல் விருது
 • சிறந்த இளைஞர் நடிப்புக்கான ஏரியல் விருது

கூடுதல் விருதுகள்[தொகு]

 • சிறப்பு வெள்ளி ஏரியல் விருது
 • சிறப்பு ஏரியல் விருது
 • கவுரவ விருது
 • சால்வடார் டோஸ்கானோ பதக்கம்
 • சிறப்பு அங்கீகாரம்
 • கெளரவ டிப்ளோமா [2]

குறிப்புகள்[தொகு]

 1. Chaiken, Jan. "The Mexican Academy of Film". The Eye Magazine (The Eye Magazine) இம் மூலத்தில் இருந்து 22 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222034917/http://www.eyemagazine.net/the-mexican-academy-of-film/. பார்த்த நாள்: 13 February 2014. 
 2. Summary of Ariel Awards பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம், Internet Movie Database.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரியல்_விருதுகள்&oldid=3236774" இருந்து மீள்விக்கப்பட்டது