ஏரியல் (நிலா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏரியல்
Ariel
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) வில்லியம் இலாசல்
கண்டுபிடிப்பு நாள் 24 அக்டோபர் 1851
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்யுரேனசு I
அரைப்பேரச்சு 191020 km
சுற்றுப்பாதையின் சராசரி ஆரம் 190900 km
மையத்தொலைத்தகவு 0.0012
சுற்றுப்பாதை வேகம் 2.520 d
சராசரி சுற்றுப்பாதை வேகம் 5.51 கிமீ/செ
சாய்வு 0.260° (யுரேனசின் நிலநடுக்கோட்டிற்கு)
இது எதன் துணைக்கோள் யுரேனசு
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 1162.2 × 1155.8 × 1155.4 km[2]
சராசரி ஆரம் 578.9±0.6 km (0.0908 Earths)[2]
புறப் பரப்பு 4211300 km2
கனஅளவு 812600000 km3
நிறை (1.353±0.120)×1021 kg (2.26×10−4 Earths)[3]
அடர்த்தி 1.592±0.15 g/cm3[4]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.27 மீ/செ2
விடுபடு திசைவேகம்0.558 கிமீ/செ
சுழற்சிக் காலம் ஒத்திசைவு
எதிரொளி திறன்
  • 0.53 (geometrical)
  • 0.23 (Bond)[5]
மேற்பரப்பு வெப்பநிலை
   ஞாயிற்றியக் கோடு[7][8]
சிறுமசராசரிபெரும
?≈ 60 K84 ± 1 K
தோற்ற ஒளிர்மை 14.4 (R-band)[6]

ஏரியல் (Ariel) என்பது யுரேனசின் 27 அறியப்பட்ட நிலவுகளுல் நான்காவது மிகப்பெரிய நிலவு ஆகும். ஏரியல் சுற்றுவதும் சுழலுவதும் யுரேனசின் மத்தியகோட்டுத்தளத்தில் தான். இது  கிட்டத்தட்ட  யுரேனசின் சுற்றுப்பாதைக்கு  செங்குத்தாக உள்ளது. அதனால் இது ஒரு தீவிர பருவகால சுழற்சி கொண்டுள்ளது . 

இது அக்டோபர் 1851 இல் வில்லியம் இலாசல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இலக்கியத்தின் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் வரும் ஒரு பாத்திரத்தின்  பெயரை இதற்கு  சூட்டியுள்ளனர். 1986 ஆம் ஆண்டு வாயேஜர் 2 என்ற விண்கலம் அதன் யுரேனசு பயணத்தின் போது இந்நிலவின் மேற்பரப்பை 35% படம் பிடித்திருந்தது அதுவே 2012 ஆம் ஆண்டளவிலும் ஏரியலை குறித்த விரிவான அறிவை நமக்குத் தந்திருக்கிறது . இந்த சந்திரனை இன்னும் விரிவாக ஆராய்வதற்கு தற்போது எந்தவொரு செயல்திட்டமும் இல்லை. எனினும் யுரேனசு சுற்றுப்பாதை மற்றும் ஆய்வு போன்ற பல்வேறு கருத்துக்கள் அவ்வப்போது முன்மொழியப்பட்டுள்ளன . 

யுரேனசின் ஐந்து பெரிய வட்டமான துணைைக்கோள்களுள் மிராண்டாவுக்குப் பிறகு, ஏரியல் இரண்டாவது மிகச் சிறியது. சூரிய மண்டலத்தின் மிகச்சிறிய  19 நிலவுகளுள் விட்டத்தின் அடிப்படையில் இது 14 வது நிலையில் உள்ளது . இது கிட்டத்தட்ட சமமான பனி மற்றும் பாறை பொருட்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அதன் நிறை     பூமியின்   நீர்கோளத்திற்கு  சம அளவில்  உள்ளது.

யுரேனசின் மற்ற நிலவுகள் போலவே, கோள் உருவாக்கம் முடிந்த உடனேயே கோளைச் சுற்றியுள்ள ஒரு அக்ரேஷன் டிஸ்கில் இருந்து ஏரியலும் உருவாகியிருக்கலாம். மற்ற பெரிய நிலவுகளைப் போல இதுவும் வேறுபட்டது. எப்படியெனில் உள்மையம் பாறையினாலும் கவசம் பனியினாலும் அமைந்துள்ளது .  ஏரியல் ஒரு சிக்கலான மேற்பரப்பு கொண்டிருக்கிறது. செங்குத்துச் சரிவுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் முகடுகள் இவற்றால் நிலப்பரப்பு  அதிக குறுக்கு வெட்டு தோற்றங்களைையும், பள்ளங்களையும் கொண்டுள்ளது. மேற்பரப்பு மற்ற யுரேனிய நிலவுகளை விட சமீபத்திய புவியியல் செயல்பாடுகளின் அறிகுறிகளைக் காட்டுகிறது. பெரும்பாலும் அலைநீள வெப்பம் காரணமாக இங்கு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Planetary Satellite Mean Orbital Parameters". Jet Propulsion Laboratory, California Institute of Technology.
  2. 2.0 2.1 Thomas, P. C. (1988). "Radii, shapes, and topography of the satellites of Uranus from limb coordinates". Icarus 73 (3): 427–441. doi:10.1016/0019-1035(88)90054-1. Bibcode: 1988Icar...73..427T. 
  3. Jacobson, R. A.; Campbell, J. K.; Taylor, A. H.; Synnott, S. P. (June 1992). "The masses of Uranus and its major satellites from Voyager tracking data and earth-based Uranian satellite data". The Astronomical Journal 103 (6): 2068–2078. doi:10.1086/116211. Bibcode: 1992AJ....103.2068J. 
  4. "Ariel: Facts and Figures". NASA Solar System Exploration. 2014. Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2014-11-13.
  5. Karkoschka, Erich (2001). "Comprehensive Photometry of the Rings and 16 Satellites of Uranus with the Hubble Space Telescope". Icarus 151 (1): 51–68. doi:10.1006/icar.2001.6596. Bibcode: 2001Icar..151...51K. 
  6. Arlot, J.; Sicardy, B. (2008). "Predictions and observations of events and configurations occurring during the Uranian equinox" (pdf). Planetary and Space Science 56 (14): 1778–1784. doi:10.1016/j.pss.2008.02.034. Bibcode: 2008P&SS...56.1778A. http://www.lesia.obspm.fr/perso/bruno-sicardy/biblio/biblio/Arlot_sicardy_pheura_PSS08.pdf. 
  7. Grundy, W. M.; Young, L. A.; Spencer, J. R.; Johnson, R. E.; Young, E. F.; Buie, M. W. (October 2006). "Distributions of H2O and CO2 ices on Ariel, Umbriel, Titania, and Oberon from IRTF/SpeX observations". Icarus 184 (2): 543–555. doi:10.1016/j.icarus.2006.04.016. Bibcode: 2006Icar..184..543G. 
  8. Hanel, R.; Conrath, B.; Flasar, F. M.; Kunde, V.; Maguire, W.; Pearl, J.; Pirraglia, J.; Samuelson, R. et al. (4 July 1986). "Infrared Observations of the Uranian System". Science 233 (4759): 70–74. doi:10.1126/science.233.4759.70. பப்மெட்:17812891. Bibcode: 1986Sci...233...70H. https://archive.org/details/sim_science_1986-07-04_233_4759/page/70. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஏரியல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரியல்_(நிலா)&oldid=3546631" இலிருந்து மீள்விக்கப்பட்டது