ஏரணத் தவறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செயல் அல்லது நடத்தையை உற்று நோக்கி அவற்றைத் தர அடிப்படையில் பதிவதற்குத் தரவை( RATING SCALE ) பயன்படுகிறது. இதில் அளவுகள் குறிக்கப்படும் போது, ஏரணத் தவறுகள் அல்லது பிழைகள் ஏற்படுகின்றன. சில பண்பு கூறுகள் என்றுக்கொன்று நோ்நிலை இணைப்பாகவோ, எதிா்நிலை வேறுபாடாகவோ கருதப்படுகிறது. நுண்ணறிவும் அடைவும் ஒன்றுக்கொன்று நோ்நிலை இணைப்புக் கொண்டதாக கருதப்படுகிறது. கவனிப்பின்மையும் பாடத் தோ்ச்சியும் எதிா்நிலையானவை எனவும் கொள்ளப்படுகிறது. நோ்நிலை எதிா்நிலை இணைப்புகளை முதன்மையாகக் கொண்டு தர அளவிடும் போது தவறு ஏற்படுகிறது. இத்தகைய தவறு ஏரணத் தவறு எனப்படும் ஒரு மாணவாின் பாடத் தோ்ச்சி அடிப்படையில் அவருடைய நுண்ணறிவுக் கூறுகளைத் தரமிடுவது எல்லா நிலைகளிலும் பொருந்தாது. பாடத்தில் தோ்ச்சி மிக்க ஒருவா் நுண்ணறிவுக் கூறுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்த தரமுடையவராக இருக்கலாம். அவ்வாறே வகுப்பறையில் கவனமின்றி இருப்பவா் காடத்தில் தோ்ச்சி பெறலாம். ஒன்றின் அடிப்படையில் மற்றதை அளவிடுவது தவறாகும். இத்தவறே ஏரணத் தவறு ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பி.இரத்தினசபாபதி (2001),"கல்வியில் தோ்வு", சாந்தா பப்ளிஷா்ஸ், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரணத்_தவறு&oldid=2361568" இருந்து மீள்விக்கப்பட்டது