ஏமி கார்மைக்கேல்
ஏமி பீட்ரைஸ் கார்மைக்கேல் | |
|---|---|
இந்தியாவில் சிறுமிகளுடன் ஏமி கார்மைக்கேல் | |
| பிறப்பு | 16 திசம்பர் 1867 மில்லிஸ்லே, கவுண்டி டவுன், அயர்லாந்து |
| இறப்பு | 18 சனவரி 1951 (அகவை 83) டேனாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| வணங்கும் திருஅவைகள் | ஆங்கிலிக்க ஒன்றியம் |
| திருவிழா | 18 சனவரி |
ஏமி பீட்ரைஸ் கார்மைக்கேல் (Amy Beatrice Carmichael, 16 திசம்பர் 1867 - 18 சனவரி 1951) என்பவர் இந்தியாவில் பணிபுரிந்த ஒரு ஐரிய கிறித்தவ மறைப்பணியாளர் ஆவார். இவர் டோனாவூரில் ஒரு அனாதை இல்லத்தை நிறுவினார். இவர் இந்தியாவில் 55 ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் ஒரு மறைப்பணியாளராகத் தனது பணிகளைப் பற்றி 35 புத்தகங்களை எழுதியுள்ளார்.
துவக்க கால வாழ்க்கை
[தொகு]ஆமி பீட்ரைஸ் கார்மைக்கேல் 1867 ஆம் ஆண்டு அயர்லாந்தின் கவுண்டி டவுனில் உள்ள மில்லிஸ்லே என்ற சிறிய கிராமத்தில் ஏழு உடன்பிறப்புகளில் மூத்தவராகப் பிறந்தார். இவரது பெற்றோர் டேவிட் கார்மைக்கேல், கேத்தரின் ஆகியோராவர். ஆலை உரிமையாளரான இவரின் தந்தையும், தாயாரும் இறை பக்தியுள்ள கிறிஸ்தவர்களாவர்.[1] ஏமி தனது இளமைப் பருவத்தில் நான்கு ஆண்டுகள் ஹாரோகேட் மகளிர் கல்லூரியில் பயின்றார்.
ஏமிக்கு 16 வயதாக இருந்தபோது இவருடைய தந்தை குடும்பத்துடன் பெல்ஃபாஸ்டுக்கு இடம்பெயர்ந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்தார். பெல்ஃபாஸ்டில், கார்மைக்கேல்ஸ் வெல்கம் எவாஞ்சலிகல் சர்ச்சை நிறுவினர்.[2] 1880களின் நடுப்பகுதியில், ரோஸ்மேரி தெரு பிரஸ்பைடிரியனின் தேவாலய மண்டபத்தில் 'ஷாலிஸ்' (தொப்பிகளுக்குப் பதிலாக சால்வைகளை அணிந்த மில் பெண்கள்) பிரிவினருக்காக ஞாயிற்றுக்கிழமை காலை வகுப்பைத் தொடங்கினார். இந்த பணி விரைவாக வளர்ந்து பல நூறு பங்கேற்பாளர்களை உள்ளடக்கியதாக ஆனது. இந்த நேரத்தில், 500 பவுண்டுகளுக்கு அமைக்கக்கூடிய, 500 பேர் அமரக்கூடிய ஒரு இரும்பு அரங்கத்துக்கான விளம்பரத்தை தி கிறிஸ்டியன் பத்திரிகையில் ஏமி பார்த்தார். மிஸ் கேட் மிட்செல்லிடமிருந்து £500 மற்றும் ஒரு ஆலை உரிமையாளரிடமிருந்து நிலம் என இரண்டு நன்கொடைகள் வழங்கப்பட்டன, இதன் மூலம் 1887 ஆம் ஆண்டில் கேம்ப்ராய் தெரு மற்றும் ஹீதர் தெருவின் மூலையில் முதல் "வரவேற்பு மண்டபம்" கட்டப்பட்டது.[சான்று தேவை][ மேற்கோள் தேவை ]
1889 ஆம் ஆண்டு மான்செஸ்டரின் மில் பெண்களிடையே பணிபுரிய அழைப்பு வரும் வரை ஏமி வெல்கம் நிகழ்ச்சியில் தொடர்ந்தார், அதிலிருந்து அவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் வெளிநாட்டு மறைப்பணிக்குச் சென்றார். 1887 ஆம் ஆண்டு கெஸ்விக் மாநாட்டில், சீனா இன்லேண்ட் மிஷனின் (சிஐஎம்) நிறுவனர் ஹட்சன் டெய்லர் மறைப்பணியாளர் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதைக் கேட்டார்; அதன் பிறகு விரைவில், மறைப்பணிக்கான தனக்கு அழைப்பு வருமென்று அவள் உறுதியாக நம்பினார். இவர் சிஐஎம்-இக்கு விண்ணப்பித்து இலண்டனில் உள்ள பெண்களுக்கான பயிற்சி இல்லத்தில் வசித்து வந்தார். அங்கு இவர் எழுத்தாளரும் சீனாவிற்கு மறைப்பணியாளரான மேரி ஜெரால்டின் கின்னசை சந்தித்தார், அவர் மறைப்பணியைத் தொடர ஊக்குவித்தார். கார்மைக்கேல் ஆசியாவிற்குப் பயணம் செய்யத் தயாராக இருந்தார், ஆனால் அவரது உடல்நிலை இவரை அந்தப் பணிக்குத் தகுதியற்றவராக ஆக்கியுள்ளது என்று கூறப்பட்டது. அவர் சிஐஎம்-இல் தனது மறைப்பணி வாழ்க்கையை ஒத்திவைத்துவிட்டு, பின்னர் சர்ச் மிஷனரி சொசைட்டியில் சேர முடிவு செய்தார்.

இந்தியாவில் பணி
[தொகு]துவக்கத்தில் கார்மைக்கேல் யப்பானுக்குப் பயணம் செய்து, பதினைந்து மாதங்கள் தங்கியிருந்தார், ஆனால் உடல்நலக் காரணங்களுக்காக நாடு திரும்பினார்.[3] இலங்கையில் குறுகிய காலம் பணிபுரிந்தார். பின்னர் தனது உடல்நலன் பொருட்டு இந்தியாவின் பெங்களூருக்குச் சென்றார், அங்கு ஒரு மறைப்பணியாளராகத் தனது பணியைத் தொடர ஏதுவாக அங்கேய தங்க முடிவெடுத்தார். இவர் இங்கிலாந்து திருச்சபையின் ஜெனானா மிஷனால் நியமிக்கப்பட்டார். கார்மைக்கேலின் மிகவும் குறிப்பிடத்தக்க பணியாக பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே பணிபுரிந்தார். அவர்களில் சிலரை தேவதாசியாக ஆக்கப்பட்டு கட்டாயப் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதிலிருந்து மீட்டார் [4][5]
கார்மைக்கேல் தனது பணியைத் தொடர 1901 ஆம் ஆண்டு டோனாவூர் சங்கத்தை [6] நிறுவினார்,[7] பின்னர் இவர் தி கோல்ட் கார்டில் (1932) எழுதினார். இந்தியாவின் தென் முனையிலிருந்து முப்பது மைல் தொலைவில், தமிழ்நாட்டில் டேனாவூர் அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெர்மன் மறைப்பணியாளர்களுக்கு நிதியளித்த கவுண்ட் டோனாவின் பெயரிலிருந்து இந்த ஊர்ப் பெயர் வந்தது. பின்னர் ரெவ். தாமஸ் வாக்கர் ஒரு பள்ளியை நிறுவினார். கார்மைக்கேலின் கூட்டுறவால் டோனாவூர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சரணாலயமாக மாற்றியது.[8] கோயில் தேவதாசிகளாக்கபட்ட சிறுமிகளை மீட்பதற்கான தனது ஊழியம் பிரீனா என்ற பெண்ணுடன் தொடங்கியதாக கார்மைக்கேல் அவ்வப்போது கூறுவார். தனது விருப்பத்திற்கு மாறாக கோயில் தேவதாசியாக மாற்றபட்டதால், பிரீனா தப்பித்து வந்தார். ஏமி கார்மைக்கேல் அப்பெண்ணுக்கு தங்குமிடம் அளித்தார், இதன் மூலம் அவள் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தார்.[9]
இந்தியப் பண்பாட்டை மதிக்கும் முயற்சியாக, டேனாவூரில் மறைப்பணியில் ஈடுப்பட்டவர்கள் இந்திய உடைகளை அணிந்து, மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்தியப் பெயர்களைச் சூட்டினர். கார்மைக்கேல் இந்திய ஆடைகளை அணிந்துகொண்டு, தனது தோலுக்கு அடர் காபியால் சாயம் பூசினார் . இந்தியாவில் பணியாற்றும் போது, மறைப்பணி வாழ்க்கையைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடமிருந்து கார்மைக்கேல் ஒரு கடிதம் பெற்றார், "மறைப்பணி வாழ்க்கை எப்படி இருக்கிறது?" என்று அதில் அவர் கேட்டிருந்தார். அதற்கு கார்மைக்கேல், "மறைப்பணி வாழ்க்கை என்பது வெறுமனே இறப்பதற்கான ஒரு வாய்ப்பு" என்று பதில் எழுதினார்.[10]
1912 ஆம் ஆண்டில், டேனாவூரில் ஒரு மருத்துவமனைக்கான நிதியுதவியும், தொழிலாளர்களும் கிடைத்தனர்.[11] 1913 வாக்கில், டேனாவூர் சங்கம் 130 சிறுமிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்தது. 1918 ஆம் ஆண்டில், டோனாவூரில் இளம் சிறுவர்களுக்கான ஒரு இல்லம் அமைக்கபட்டது. அவர்களில் பலர் முன்னாள் தேவதாசிகளுக்குப் பிறந்தவர்கள். இதற்கிடையில், 1916 ஆம் ஆண்டில் கார்மைக்கேல் பொது வாழ்க்கையின் சகோதரிகள் என்ற புராட்டஸ்டன்ட் சமய அமைப்பை உருவாக்கினார்.
மரபு
[தொகு]ஏமி கார்மைக்கேல் ஒரு சிறந்த எழுத்தாளர், இந்தியாவில் ஒரு மறைப்பணியாளராக தனது அனுபவங்களைப் பற்றி பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டார்.
1948 ஆம் ஆண்டு இந்தியாவில் தேவதாசி முறை தடைசெய்யப்பட்டது.
கார்மைக்கேல் 1951 ஆம் ஆண்டு தனது 83 வயதில் இந்தியாவில் இறந்தார். டேனாவூரில் உள்ள தனது கல்லறையின் மேல் எந்த கல்லும் வைக்கூடாது என்று அவர் விரும்பினார்.
மற்ற கிறித்தவ மறைப்பணியாளர்கள் இவரை ஒரு செல்வாக்கு மிக்கவுர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
டேனாவூர் சங்கம் தனது ஊழியத்தைத் தொடர்கிறது, இப்போது 400 ஏக்கரில் 16 நர்சரிகள், ஒரு மருத்துவமனையுடன் சுமார் 500 பேருக்கு ஆதரவளிப்பதாக உள்ளது. இந்த அறக்கட்டளை தற்போது 1896 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி மறைமாவட்டத்தின் அதிகார வரம்பின் கீழ் இந்தியர்களால் நிருவகிக்கப்படுகிறது. இந்திய சட்டத்தின்படி இதன் மாற்றப்பட்ட கொள்கைகள், டேனாவூரில் பிறந்த அல்லது அங்கு கொண்டு வரப்படும் அனைத்து ஆதரவற்றக் குழந்தைகளையும் 6 ஆம் வகுப்பில் கல்விக்காக வெளியே அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றன. மேலும், 1982 முதல், ஆண் குழந்தைகளை சங்கத்தில் வைத்திருப்பதற்கு பதிலாக தத்துகொடுக்கப்படுகிறனர்.
18, சனவரி அன்று இங்கிலாந்து திருச்சபையில் ஏமி நினைவுகூறப்படுகிறார் .[12]
ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் மோர்டன் விரிகுடா நகரத்தின் மொரேஃபீல்டில் உள்ள ஒரு கல்லூரிக்கு கார்மைக்கேல் கல்லூரி என இவரது பெயரிடப்பட்டது.[13]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
[தொகு]- From Sunrise Land: Letters from Japan, Marshall (1895)
- From fight[15] (1901)
- Raisins (1901)
- Things as they are; mission work in southern India, London: Morgan and Scott (1905)
- Overweights of Joy (1906)[16]
- Beginning of a Story (1908)
- Lotus Buds, London: Morgan and Scott (1912)
- Continuation of a Story (1914)[17]
- Walker of Tinnevelly, London: Morgan & Scott (1916) (biography of Thomas Walker)
- NorScrip (1922)[14]
- Ragland, pioneer, Madras: S.P.C.K. Depository (1922) (biography of Thomas Gajetan Ragland)
- Made in the Pans (1917)
- Ponnammal: Her Story (1918)
- From the Forest (1920)
- Dohnavur Songs (1921)
- Tables in the Wilderness (1923)
- The Valley of Vision (1924)
- Mimosa: A True Story (1924), CLC Publications (September 2005)
- Raj (1926)
- The Widow of the Jewels (1928)
- Meal in a Barrel (1929)
- Gold Cord (1932),[18] Christian Literature Crusade (June 1957)
- Rose from Brier (1933), Christian Literature Crusade (June 1972)
- Ploughed Under: The Story of a Little Lover, Society for Promoting Christian Knowledge (SPCK) (1934)
- Gold by Moonlight (1935)[19]
- Towards Jerusalem (1936)
- Windows (1937)
- If (1938), Christian Literature Crusade (June 1999) If...
- Figures of the True (1938)
- Pools and the Valley of Vision (1938)
- Kohila: The Shaping of an Indian Nurse (1939), CLC Publications (July 2003
- His Thoughts Said...His Father Said (1941)
- Though the Mountains Shake, Madras: Diocesan Press (1943)
- Before the Door Shuts (1948)
- This One Thing (1950)
- Edges of His Ways, Fort Washington: Christian Literature Crusade (1955) Edges of His ways : selections for daily reading
- Wings (with Florence Margaret Spencer Palmer; 1960)[20]
- Thou Givest, They Gather, Thou givest-- they gather CLC Publications (June 1970)
- Candles in the Dark, Christian Literature Crusade (June 1982)
- Mountain Breezes: The Collected Poems of Amy Carmichael, Christian Literature Crusade (August 1999)
- Whispers of His Power, CLC Publications (June 1993) Whispers of His power
- That Way and No Other, Plough Publishing (January 2020) https://www.plough.com/en/topics/faith/discipleship/that-way-and-no-other
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amy Carmichael of Dohnavur". The Heartbeat of the Remnant. Ephrata ministries. Archived from the original on 1 February 2014. Retrieved 2015-03-07.
- ↑ "Amy Carmichael". Welcome church. 30 July 2013. Archived from the original on 1 February 2014. Retrieved 2015-03-07.
- ↑ "A Living Legacy:: Amy Carmichael and the Origin of the Dohnavur Fellowship". Mission Frontiers. 1999-01-01. Archived from the original on 1 February 2014. Retrieved 2015-03-07.
- ↑ "Slaves of the Gods : Katherine Mayo". 1929.
- ↑ "Short film Devadasi by Lenalaxmi in LVPrasad Film & TV Academy | Tamil with English subtitles". Archived from the original on 11 April 2021. Retrieved 11 April 2021 – via யூடியூப்.
- ↑ "Santhosha Vidhyalaya – Dohnavur Fellowship". Dohnavurfellowship.org. 2018-03-16. Archived from the original on 26 November 2018. Retrieved 26 November 2018.
- ↑ "Dohnavur Fellowship". Dohnavurfellowship.org. 2018-03-16. Archived from the original on 26 November 2018. Retrieved 26 November 2018.
- ↑ "Welcome to Dohnavur – Home". Dohnavur.weebly.com. Archived from the original on 12 June 2018. Retrieved 2015-03-07.
- ↑ "Amy Carmichael:Rescuer of Children". atgsociety. Archived from the original on 1 May 2011. Retrieved 2012-06-27.
- ↑ Elliot, Elisabeth (May 2005). A Chance to Die. Fleming H Revell. ISBN 0800730895.
- ↑ "Amy Carmichael – Welcome". Welcomechurch.co.uk. 30 July 2013. Archived from the original on 1 February 2014. Retrieved 2015-03-07.
- ↑ "The Calendar". The Church of England (in ஆங்கிலம்). Archived from the original on 9 March 2021. Retrieved 2021-03-27.
- ↑ "Our Story". Carmichael College (in அமெரிக்க ஆங்கிலம்). 20 July 2021. Archived from the original on 2 January 2022. Retrieved 2022-01-02.
- ↑ 14.0 14.1 "Nor Scrip – by Amy Carmichael – dated 1921 – brought by Peter-John Parisis – The School of Prayer's Founder" – via Internet Archive.
- ↑ "From the fight : Carmichael, Amy, 1867–1951". 1887.
- ↑ "Overweights of joy : Carmichael, Amy, 1867–1951". 1906.
- ↑ Alyson-Wieczorek. "The continuation of a story : Carmichael, Amy, 1867–1951". Retrieved 2019-10-27.
- ↑ "Gold Cord The Story of a Fellowship : Amy Carmichael". 1932.
- ↑ Lotu Tii (1991). Gold by moonlight : Carmichael, Amy, 1867–1951. CLC Publications. ISBN 978-0-87508-087-1.
- ↑ Doig, Chris. "Spencer Palmer Children". Thornbury Roots (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-01-09.