ஏப் வேடிங்டன்
ஏப் வேடிங்டன் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஏப் வேடிங்டன் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 184) | திசம்பர் 17 1920 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | பிப்ரவரி 11 1921 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 12 2010 |
ஆபிரஹாம் " ஏப்" வேடிங்டன் (Abraham "Abe" Waddington, பிறப்பு: பெப்ரவரி 4 1893, இறப்பு: அக்டோபர் 28 1959), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இரண்டுமே ஆத்திரேலிய அணிக்கு எதிரானவை , 266 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1920 - 1921 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அந்த ஆண்டுகளில் இஅவ்ர் 255 போட்டிகளை யார்க்சயர் அணிக்காக விளையாடியுள்ளார். இடது கை வேகப் பந்து வீச்சாளரான இவர் 852 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். இவரின் பந்து வீசும் பாவனைக்காக பரவலாக அறியப்பட்டார். இவர் விளையாடிய காலங்களில் எதிர் அனி வீரர்களை கோபமூட்டும் செயல்களிலும் நடுவரின் தீர்ப்பினை கேள்விக்கு உள்ளாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஆபிடஹம் வேடிங்டன் பிராட்போர்டில் உள்ள கிளேடனில் பெப்ரவரி 4, 1893 இல் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு இவரே மூத்த குழந்தை ஆவார்.[1] இவரின் பெற்றோருக்கு கொழுப்பினை சுத்திகரிக்கும் தொழில் இருந்தது.[1] இவரின் தந்தை பெயர் சாம்[2]. பள்ளிப்படிப்பை நிறுத்திய பிறகு இவர் அந்த ஆலையின் ஓட்டுநராகப் பணி புரிந்தார். சில சமயங்களில் சுத்திகரிப்பு பணிகளிலும் ஈடுபட்டார்.
முதல்தரத் துடுப்பாட்டம்
[தொகு]இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யார்க்சயரின் வேகப்பந்து வீச்சாளர்களில் சிலர் இறப்பு மற்றும் ஓய்வு போன்றவற்றிக்குப் பிறகு அந்த அணியில் வேகப் பந்துவீச்சாளர்களின் தேவை ஏற்பட்டது.[3][4] மே மற்ரும் சூன் மாதங்களில் நடைபெற்ற போட்டிகளில் அணி மோசமான தோல்வியினை சந்தித்தது.
தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . டிசம்பர் 7 இல் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியின் துவக்க ஓவர்களை வீசிய இவர் முதல் ஆட்டப் பகுதியில் 13 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.பின் பந்துவீச்சில் 8 ஓவர்களை வீசி மூன்று ஓவர்களை மெய்டனாக வீசினார். அதில் 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 23 ஓவர்களை வீசி நான்கு ஓவர்களை மெய்டனாக வீசினார். அதில் 53 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் இலங்கை அணி 377 ஓட்டங்களில் வெற்றி பெற்றது[5]
1921 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .பெப்ரவரி 11 இல் மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் துவக்க ஓவர்களை வீசிய இவர் முதல் ஆட்டப் பகுதியில் 4 பந்துகளில் ஓடங்கள் எதுவும் எடுக்காமல் மைலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 5 ஓவர்களை வீசி மூன்று ஓவர்களை மெய்டனாக வீசினார். அதில் 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 25 பந்துகளைச் சந்தித்து 3 ஓட்டங்களை எடுத்து மைலியின் பந்துவீச்சில் மீன்டும் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி எட்டு இலக்குகளால் வெற்றி பெற்றது.[6]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Howe, p. 72.
- ↑ "Social Record". Hull Daily Mail (Hull): p. 4. 27 March 1925.
- ↑ Rogerson, Sidney (1960). Wilfred Rhodes. London: Hollis and Carter. pp. 120–21.
- ↑ Howe, p. 73.
- ↑ "இரண்டாவது போட்டி".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "இறுதிப் போட்டி".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)