ஏபிஸ் செரினா இன்டிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Apiscerana.jpg

ஏபிஸ் செரினா இன்டிகா அல்லது இந்தியத் தேனீ என்பது ஆசியத் தேனீக்களின் ஒரு துணைச்சிற்றினமாகும். இவ்வகை தேனீக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. இது சாதுவான தேனீயாக உள்ளதாலும் கொட்டும் தன்மையை குறைவாக வெளிப்படுத்துவதாலும், தேனீ வளர்ப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இத்தேனீ ஏபிஸ் மெல்லிப்ரா (ஐரோப்பிய) வகையைப் போன்றே இருப்பினும், அதனைக் காட்டிலும் சற்று பெரியதாக இருப்பதால் எளிதில் வேறுபடுத்த முடிகிறது.

இவ்வகை தேனீக்கள் மரத்தின் கிளைகள், பொந்துகள், மனிதனால் கட்டப்பட்ட கட்டிடங்கள், குகைகள் ஆகியவற்றில் தேன் கூட்டைக் கட்டி அதில் தேனைச் சேமிக்கின்றன. மேலும் இவை தென்னை மரங்களின் முக்கியமான மகரந்தக்காவிகளாக உள்ளன.[1]

உசாத்துணைகள்[தொகு]

  1.  P.K. Thampan. 1981. Handbook on Coconut Palm. Oxford & IBH Publishing Co.
  • Benjamin P. Oldroyd and Siriwat Wongsiri. Asian Honey Bees (Biology, Conservation, and Human Interactions). 2006: Harvard University Press, Cambridge, Massachusetts and London, England.
  • Tautz, J and M. Lindauer. 1997. "Honeybees establish specific nest sites on the comb for their waggle dances". Journal of Comparative Physiology 180:537-539.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏபிஸ்_செரினா_இன்டிகா&oldid=2723756" இருந்து மீள்விக்கப்பட்டது