ஏபர்-வெயிசு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏபர்-வெயிசு வினை (Haber–Weiss reaction) ஐதரசன் பெராக்சைடு (H2O2) மற்றும் சூப்பராக்சைடு எனப்படும் மிகையாக்சைடில் இருந்து (•OH) எனப்படும் ஐதராக்சில் தனியுறுப்பைத் தோற்றுவிக்கிறது. இரும்பு வினையூக்கியாகச் செயல்படும் இவ்வினை மிகவும் மெதுவாக நிகழ்கிறது. பெர்ரிக் அயனி பெர்ரசு அயனியாக குறைக்கப்படுவது இவ்வினையூக்கச் சுழற்சியின் முதல் படிநிலையாகும்.

Fe3+ + •O2 → Fe2+ + O2

பெண்டன் வினை இரண்டாவது படிநிலையாகும்.

Fe2+ + H2O2 → Fe3+ + OH + •OH

நிகர வினையாக

•O2 + H2O2 → •OH + OH + O2

இவ்வினை அமைகிறது.

ஃபிரிட்சு ஏபர் மற்றும் யோசப் யோசுவா வெயிசு ஆகியோர் இவ்வினையைக் கண்டறிந்த காரணத்தால் இவ்வினை ஏபர்-வெயிசு வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏபர்-வெயிசு_வினை&oldid=2747870" இருந்து மீள்விக்கப்பட்டது