ஏந்திசைத் துள்ளல் ஓசை
Appearance
யாப்பருங்கலம் என்னும் நூல் கலிப்பாவின் துள்ளல் ஓசையை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. [1] அவற்றில் ஒன்று ஏந்திசைத் துள்ளல்.
- எடுத்துக்காட்டு
முருகவிழ்தார் மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே
வருசினனார் அருமறைநூல் வழிபிழையா மனமுடையோர்
இருவினைபோய் விழமுறியா எதிரியகா தியையெறியா
நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே[2]
- விளக்கம்
இதில் எல்லாச் சீர்களும் நிரையசையில் தொடங்கிக் கலித்தளையால் கட்டப்பட்டுத் துள்ளுகின்றன.
மேற்கோள்
[தொகு]- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 225
- ↑ தேன் துளிக்கும் மாலை சூடியவர் இமையோர். அவர்கள் சூழ்ந்து வர அருகன் நூலில் வழி பிழையாத மனம் உடையவர்கள் இருவினை நீங்கப் பெற்று காதுகள் ஆடும்படி மலம் அவிந்த நிருமலராக, அரு உருவம் கொண்டவராக, சோதியில் நிலவுவர் - என்பது இதன் கருத்து.