ஏதென்சின் ஓடியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏதென்சில் உள்ள அக்ரோபோலிசின் தள வரைபடம் முக்கிய தொல்லியல் எச்சங்களைக் காட்டுகிறது - ஓடியன் எண் 19, வலதுபுறத்தில் உள்ளது

ஏதென்சின் ஓடியோன் அல்லது ஏதென்சில் உள்ள பெரிக்கிள்சின் ஓடியோன் (Odeon of Athens அல்லது Odeon of Pericles in Athens)என்பது (4,000 சதுர மீ ) ஏதென்சில் உள்ள அக்ரோபோலிசின் தென்கிழக்கு அடிவாரத்தில், டயோனிசஸ் அரங்கத்தின் நுழைவாயிலுக்கு அடுத்ததாக கட்டப்பட்ட ஒரு இசைக்கூடம் ஆகும்.

வரலாறு[தொகு]

இது முதன்முதலில் பெரிகிள்சால் கிமு 435 இல் பனாதேனியாவின் ஒரு பகுதியாக இசைப் போட்டிகளுக்காகவும், [1] குழு ஒத்திகைகளுக்காகவும், மோசமான வானிலையின்போது அரங்கத்தில் இருந்து பார்வையாளர்கள் தங்குவதற்காகவும் கட்டப்பட்டது. [2] அதன் சில எச்சங்கள் இப்போது எஞ்சியுள்ளன, ஆனால் அது மற்ற கிரேக்க ஓடியன்களின் வழக்கமான வட்ட வடிவில் உள்ள நிலையில் அந்த அமைப்பிற்கு மாறாக இது சதுரமாக உள்ளது. போரின் போது கைப்பற்றப்பட்ட பாரசீகக் கப்பல்களில் இருந்து எடுக்கப்பட்ட மரக்கட்டைகளால் இதன் கூரை அமைக்கபட்டிருந்தது. இதன் கூரை ஒரு கூடாரத்தை ஒத்த ஒரு சதுர பிரமிடு போன்று அமைக்கப்பட்டிருந்தது. இது கிமு முதலாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது " செர்க்செஸ் கூடாரத்தின் நகல்" என்று பௌசானியாஸ் எழுதினார்.

அசல் கட்டிடத்தில் பல இருக்கைகள் மற்றும் பல தூண்கள் இருந்தன என்று புளூடார்ச் எழுதியுள்ளார். நவீன அகழ்வாய்வுகளின் படி இதன் அடித்தளம் 62.40 பை 68.60 மீ (204.7 பை 225.1 அடி) என தெரியவந்துளது. மேலும் இதன் உட்புரத்தில் பத்துக்கு, ஒன்பது வரிசைகளில் 90 உள் தூண்கள் அமைக்கப்பட்டு அவற்றால் கூரை தாங்கப்பட்டதாக இப்போது அறியப்படுகிறது. [3]

கிமு 87-86 இல் நடந்த முதல் மித்ரிடாடிக் போரில் சுல்லா ஏதென்ஸை முற்றுகையிட்டபோது ஏதென்ஸின் அசல் ஓடியன் சுல்லாவால் எரிக்கப்பட்டது. [4] எரிக்கப்பட்டது, [5] அல்லது அக்ரோபோலிசைத் தாக்க சுல்லா இதன் மரக்கட்டைகளைப் பயன்படுத்துவாரோ என்ற பயத்தில் அவரது எதிரியான அரிஸ்டின் மூலம் எரிக்கப்பட்டடிருக்கலாம். பின்னர் எம். ஸ்டாலியஸ் மற்றும் மெனாலிப்பஸ் ஆகியோரை கட்டிடக் கலைஞர்களாகப் பயன்படுத்தி, கப்படோசியாவின் இரண்டாம் அரியோபர்சேன்சால் இது முழுமையாக மீண்டும் கட்டப்பட்டது. [6] புதிய கட்டிடம் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் "கிரேக்கர்களின் அனைத்து கட்டமைப்புகளிலும் மிகவும் அற்புதமானது" என்று பௌசானியாஸ் குறிப்பிட்டது. [7] ஏதென்ஸில் உள்ள ஒரு ஓடனில் "பார்க்கத் தகுந்த டயோனிசுவின் உருவம்" என்றும் அவர் குறிப்பிடுகிறார், [8] அது எந்த ஒடியன் என்று அவர் குறிப்பிடவில்லை.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதென்சின்_ஓடியன்&oldid=3593940" இலிருந்து மீள்விக்கப்பட்டது