ஏஞ்ஜெலா லீ டக்வர்த்
ஏஞ்செலா லீ டக்வர்த் ( angela lee duckworth 1970) அமெரிக்கப் பெண் கல்வியாளர், உளவியலாளர் மற்றும் அறிவியல் நூலாசிரியர் ஆவார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், கிறிஸ்தோபர் எச் பிரௌனி உளவியல் பிரிவில் பேராசிரியராக இருந்து வருகிறார். மேலும் கேரக்டர் லேப் என்ற நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக உள்ளார். [1]
வாழ்க்கைக்குறிப்புகள்
[தொகு]மேலாண்மை ஆலோசகர் அலுவலைக் கைவிட்டு நியூயார்க்கு நகரில், ஒரு பொதுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குக் கணிதம் கற்பிக்கும் வேலையை மேற்கொண்டார். கடின உழைப்பு என்பது வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை தமது பட்டறிவினால் உணர்ந்தார்.
ஆர்வர்ட் பள்ளியில் நரம்பு உயிரியல் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் நரம்பியல் படிப்பில் முது அறிவியல் பட்டம் பெற்றார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பில் ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார். அதே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். மெக்கார்தர் மதிப்புறு உறுப்பினர் என்னும் தகுதியை 2013 இல் பெற்றார்.[2] கிரிட்: தி பவர் ஆப் பாசன் அண்ட் பர்சீவரன்ஸ் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.இந்த நூல் 2016 இல் வெளியாகி பல ஆயிரக்கணக்கான படிகள் விற்பனை ஆனது.[3] மிகப் பெரிய வெற்றியை அடைவதற்குத் திறமை மட்டும் இருந்தால் போதாது; தணியாத ஊக்கமும், இடைவிடாத முயற்சியும் தேவை என்பதை இந்த நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
பெற்ற சிறப்புகள்
[தொகு]கே. ஐ. பி. பி. வழங்கும் பியாண்ட் இசட் விருது இவருக்கு அளிக்கப்பட்டது. டெட் (மாநாடு) இணைய தளப் பேச்சைப் பல்லாயிரக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள்.
மேற்கோள்
[தொகு]- ↑ http://angeladuckworth.com/about-angela/
- ↑ "Angela Duckworth". MacArthur Foundation. 2013-09-25. பார்க்கப்பட்ட நாள் 2013-11-07.
Age: 43
- ↑ https://www.amazon.com/Grit-Passion-Perseverance-Angela-Duckworth/dp/1501111108