ஏஞ்சல் மேரி சோசப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏஞ்சல் மேரி ஜோசப் (Angel Mary Joseph) (பிறப்பு: செப்டம்பர் 24, 1953) ஓய்வு பெற்ற இந்திய தட கள விளையாட்டு வீரர் ஆவார். அவர் 100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், ஐவகைப்போட்டி ஆகியவற்றில் திறமை பெற்றவர் ஆவார். ஒரு சமயத்தில் மேற்கண்ட மூன்றிலும் மற்றும் உயரம் தாண்டுதல் மற்றும் ஹெப்டாத்லான் ஆகிய போட்டிகளிலும் தேசிய சாதனைகளைப் படைத்தார் . 1978 ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், நீளம் தாண்டுதல் மற்றும் ஐவகைப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். அவர் தேசிய வாகையாளர் போட்டிகளில் கருநாடகம் மற்றும் இரயில்வே கூடைப்பந்து அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தினார். [1]

தடகளப் போட்டிகளில் அவர் செய்த சாதனைகளை உணர்ந்து மேரிக்கு 1979 ஆம் ஆண்டில் இந்திய அரசு அருச்சுனா விருது வழங்கியது. [2]

குறிப்புகள்[தொகு]

  1. "Angel Mary Joseph". sportsbharti.com. மூல முகவரியிலிருந்து 15 August 2016 அன்று பரணிடப்பட்டது.
  2. "Arjuna Award Winners from Kerala". keralaathletics.org. மூல முகவரியிலிருந்து 1 November 2010 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சல்_மேரி_சோசப்&oldid=2800215" இருந்து மீள்விக்கப்பட்டது