உள்ளடக்கத்துக்குச் செல்

ஏஞ்சலா ஜுர்தக் கோவ்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஞ்சலா ஜுர்தக் கோவ்ரி
பிறப்பு(1915-09-24)செப்டம்பர் 24, 1915
தௌர் எல் சௌயர், மவன்ட் லெபனான்
இறப்புமே 29, 2011(2011-05-29) (அகவை 95)
வாசிங்டன், டி. சி.
தேசியம்லெபனான்
பணிஇராஜதந்திரி, கல்லூரிப் பேராசிரியர்

ஏஞ்சலா ஜூர்தக் கோவ்ரி (Angela Jurdak Khoury) (செப்டம்பர் 24,1915-மே 29,2011) லெபனானைச் சேர்ந்த இராஜதந்திரியும் மற்றும் கல்லூரிப் பேராசிரியரும்வார்.[1]

இளமை வாழ்க்கை

[தொகு]

ஏஞ்சலா ஜுர்தக், லெபனானின் தௌர் எல் சௌயரில் பெய்ரூத் அமெரிக்கப் பல்கலைக்கழக ஆசிரியரும், கணிதவியலாளரும் வானியலாளருமான மன்சூர் அன்னா ஜூர்தக் மற்றும் இலியா அப்ஸ் ஜூர்தக் ஆகியோருக்கு மகளகப் பிறந்தார். இவர் அமெரிக்க இளையோர் மகளிர் கல்லூரியிலும் பின்னர் பெய்ரூத் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். 1937 இல் இளங்கலை படிப்பையும், 1938 இல் சமூகவியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார்.[2] பிற்காலத்தில், வாசிங்டன் டி. சி. யில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

ஒரு இளம் பெண்ணாக, ஏஞ்சலா ஜுர்தக் லெபனான் தேசிய டென்னிசு அணியில் உறுப்பினராக இருந்தார். கச்சேரிகளில் பியானோ வாசித்தார். மேலும் நீண்ட தூர நீச்சல் வீரராகவும் அறியப்பட்டார்.[4]

தொழில் வாழ்க்கை

[தொகு]

1938 ஆம் ஆண்டு தொடங்கி பெய்ரூத்தின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கற்பித்தார். பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பயிற்றுவிப்பாளராக இவர் இருந்தார்.[2] இரண்டாம் உலகப் போரின் போது சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனத்திற்கான நேச நாடுகளின் வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.[5] போருக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் அவைக்கான லெபனான் தூதுக்குழுவில் சேர்ந்தார். மேலும் வாசிங்டன் டி. சி. யை தளமாகக் கொண்ட லெபனானின் தூதரகத்தில் உறுப்பினராக இருந்தார்.[6][7] கோவ்ரி, சிலகாலம் நியூயார்க்கில் லெபனான் தூதராக இருந்தார். மேலும் 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் பணியாற்றினார்.[8] 1966 இல் லெபனானின் வெளியுறவு அமைச்சகத்திலிருந்து தனது பதவியை துறந்து வெளியேறினார்.[9]

1967 முதல் 1982 இல் ஓய்வு பெறும் வரை ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் அரசாங்கப் பேராசிரியராக இருந்தார்.[10]

கௌரவங்கள்

[தொகு]

1959 ஆம் ஆண்டில் லெபனான் அரசாங்கத்தால் இவருக்கு தேசிய செடர் ஆணை வழங்கப்பட்டது. ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் இவரது நினைவாக அரசு மற்றும் சர்வதேச அரசியலில் சிறந்து விளங்குபவர்களுக்கான ஏஞ்சலா ஜே. கோவ்ரி விருது வழங்கப்படுகிறது.

சொந்த வாழ்க்கை

[தொகு]

ஏஞ்சலா ஜுர்தக், 1949 இல் வழக்கறிஞரான சூக்ரி இஸ்ஸா கோவ்ரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிலிப் மற்றும் ஜார்ஜ் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். 1985 ஆம் ஆண்டில் இவரின் கணவர் இறந்தார். ஏஞ்சலா ஜுர்தக் கோவ்ரி 2011 இல், தனது 95 வயதில், வாசிங்டன் டி. சி. யில் இறந்தார்.[9] She lived in her later years with her sister Salma Mansur Jurdak, also a diplomat based in Washington D.C.; Salma Jurdak died in 2017 at age 97.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Adami, Rebecca (2019). Women and the Universal Declaration of Human Rights. New York & London: Routledge. pp. 74–85. ISBN 9780429437939.
  2. 2.0 2.1 Betty S. Anderson, The American University of Beirut: Arab Nationalism and Liberal Education (University of Texas Press 2011): 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780292726918
  3. Office of Communications, "AUB Mourns Angela Jurdak Khoury"[தொடர்பிழந்த இணைப்பு] American University of Beirut (May 30, 2011).
  4. Jane Eads, "Lebanese Girl Gets UNO Post" Abilene Reporter-News (March 30, 1946): 14. via Newspapers.comopen access publication - free to read.
  5. Andrew Stimson, "Obituaries" The Washington Report on Middle East Affairs (August 2011): 63-64.
  6. "Achievements of LAU Women Graduates Throughout History" LAU Magazine & Alumni Bulletin (Winter 2011): 30.
  7. Samira Nawas Plesman, "Angela Jurdak Khoury - 95; Lebanon's First Woman Diplomat" Shweir.com.
  8. "UNO Body Adopts Platform on Women's Rights" Sydney Morning Herald (May 9, 1946): 3. via Newspapers.comopen access publication - free to read
  9. 9.0 9.1 Office of Communications, "AUB Mourns Angela Jurdak Khoury"[தொடர்பிழந்த இணைப்பு] American University of Beirut (May 30, 2011).
  10. Lea Lubag, "Former Government Professor and Diplomat Angela J. Khoury Dies" Mason Gazette (June 20, 2011).
  11. "Salma Mansur Jurdak" Washington Post (March 24, 2017).

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் வாசிக்க

[தொகு]
  • Marie Aziz Sabri, Pioneering Profiles: Beirut College for Women (Khayat Books 1967). (Includes an entry on Angela Jurdak Khoury.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சலா_ஜுர்தக்_கோவ்ரி&oldid=4466326" இலிருந்து மீள்விக்கப்பட்டது