ஏஜெண்ட் கிம் ரீஆக்டிவேட்டட்
| ஏஜெண்ட் கிம் ரீஆக்டிவேட்டட் | |
|---|---|
| 김 부장 | |
| வகை |
|
| மூலம் | { |
| எழுத்து |
|
| இயக்கம் |
|
| நடிப்பு |
|
| இசை | கிம் சுங்-யூல் |
| நாடு | தென் கொரியா |
| மொழி | கொரிய மொழி |
| அத்தியாயங்கள் | 6 |
| தயாரிப்பு | |
| நிருவாக தயாரிப்பு |
|
| தயாரிப்பாளர்கள் |
|
| ஒளிப்பதிவு |
|
| தொகுப்பு |
|
| தயாரிப்பு நிறுவனங்கள் |
|
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | எஸ்.பி.எஸ். டிவி |
| ஒளிபரப்பான காலம் | சூன் 26, 2026 – தற்போது |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
ஏஜென்ட் கிம் ரீஆக்டிவேட்டட் (Agent Kim Reactivated ) என்பது நாம் டே-ஜோங் எழுதி, லீ சியுங்-யங்கும் லீ சோ-யூனும் இணைந்து இயக்கிய தென் கொரியப் பழிவாங்கும் அதிரடிப் பரபரப்பூட்டும் தொலைக்காட்சித் தொடராகும். சோய் டே-ஹூன், யூன் கியுங்-ஹோ, ஜோ சாங்-வூக், சோன் நா-யூன், கிம் சுங்-கியூ, லீ ஜே-யோங், வோன் ஹியூன்-ஜுன், பார்க் ஜின்-வூ, ஜோ போக்-ரே, லீ டோங்-ஹா, சியோ சு-மின் மற்றும் யூ ஜி-ஆன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுமத்தின் ஒரு பகுதியாக சியோ ஜி-சப் முதன்மைக் பாத்திரத்தில் நடிக்கிறார். இது நெற்ஃபிளிக்சில் ஒளிபரப்பாகிறது.
கதைச் சுருக்கம்
[தொகு]மேலாளர் கிம் என்று அழைக்கப்படும் கிம் டோ-ஹையோன், முன்னாள் வட-தென் கொரிய இரகசியச் செயல்பாட்டாளர் ஆவார், இவர் தனது மறைந்த மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றி, அலுவலக ஊழியராகவும் ஒற்றைத் தந்தையாகவும் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் மின்-ஜி கடத்தப்படும்போது, கிம் தனது கடந்தகால போர்ப் பயிற்சியைப் பயன்படுத்தி இவளைக் காப்பாற்றுகிறார். இவரது திடீர் செயல்பாடு தேசியச் சிறப்புத் தூதரகப் பணியகத்தின் கவனத்தை ஈர்க்கிறது. தனது தேடலின் போது, கிம் முன்னாள் செயல்பாட்டாளர்களான சியோங் ஹான்-சூ, பார்க் ஜின்-சியோல் ஆகிய இரண்டு நண்பர்களுடன் இணைகிறார். கட்டுமான நிர்வாகி ஜூ காங்-சான், சாங்-ஆ என்ற கூட்டாளி, வட கொரிய முகவரான பார்க் காங்-சியோங் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடமிருந்து மூவரும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர்.
வெளியீடு
[தொகு]இந்தத் தொடர் 2026ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை எஸ். பி. எஸ் உறுதிப்படுத்தியது, இது இவர்களின் வெள்ளிக்கிழமை-சனிக்கிழமை வரிசை வெளியீட்டின் ஒரு பகுதியாகும்.[1] இந்தத் தொடர் சூன் 26 அன்று எஸ். பி. எஸ் டிவியில் திரையிடப்படுவது உறுதி செய்யப்பட்டது, மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் நெற்பிளிக்சில் ஒளிபரப்பாகும்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jung, Hee-yeon (September 11, 2025). https://sports.donga.com/ent/article/all/20250911/132364016/1.
- ↑ Shin, Young-eun (May 22, 2026). https://www.mk.co.kr/news/broadcasting-service/12055224.
- ↑ Waugh, J.R. (May 29, 2026). "Netflix's Upcoming Action Thriller Is Taken Meets Mercy For None". Screen Rant. Retrieved June 12, 2026.