உள்ளடக்கத்துக்குச் செல்

ஏஜியன் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஜியன் தீவுகள்
(கிரேக்கம்)
Νήσοι Αιγαίου
கிரேக்கப் பிராந்தியங்கள்
கிரேக்கத்துக்குச் சொந்தமான ஏஜியன் தீவுகள் (நீலம்).
கிரேக்கத்துக்குச் சொந்தமான ஏஜியன் தீவுகள் (நீலம்).
நாடு கிரேக்க நாடு
ஏஜியன் தீவுகள்
(துருக்கி)
Ege Adaları
துருக்கியைச் சேர்ந்த ஏஜியன் தீவுகள் (நீலம்)
துருக்கியைச் சேர்ந்த ஏஜியன் தீவுகள் (நீலம்)
நாடு துருக்கி
ஏஜியன் கடல் தீவுகளின் தீவுக் குழுக்களை வரைபடம் காட்டுகிறது
ஏஜியன் கடல் மற்றும் தீவுகளின் செயற்கைக்கோள் படக் காட்சி

ஏஜியன் தீவுகள் (Aegean Islands, கிரேக்கம்: Νησιά Αιγαίου‎  ; துருக்கியம்: Ege Adaları ) என்பது ஏஜியன் கடலில் உள்ள தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுக் கூட்டங்களின் மேற்கிலும் வடக்கிலும் கிரேக்கமும், கிழக்கில் துருக்கியின் பிரதான நிலப்பகுதியும் உள்ளன. தீவுக் கூட்டத்தின் தென் எல்லையாக கிரீட் தீவும், தென்கிழக்கு எல்லையாக ரோட்ஸ், கர்பதோஸ், கசோஸ் ஆகிய தீவுகள் அமைந்துள்ளன. ஏஜியன் கடலின் பண்டைய கிரேக்க பெயர், ஆர்கபேளகோ ( ἀρχιπέλαγος , தீவுக்கூட்டங்கள் ) என்பதாகும். பின்னர் அதில் உள்ள தீவுகளுக்கு அப்பெயர் பயன்படுத்தப்பட்டது. பின்னர் பொதுவாக எந்த தீவுக் கூட்டத்தைக் குறிக்கவும் சொலாக அது மாறியது.

ஏஜியன் தீவுகளில் பெரும்பாலானவை கிரேக்க நாட்டைச் சேர்ந்தவை. அவை ஒன்பது நிர்வாகப் பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏஜியன் கடலில் துருக்கிக்குச் சொந்தமான குறிப்பிடத்தக்க தீவுகளாக கடலின் வடகிழக்கு பகுதியில் இம்ப்ரோஸ் (Gökçeada) மற்றும் தெனெடோஸ் (Bozcaada) போன்றவை உள்ளன. துருக்கியின் மேற்கு கடற்கரையில் உள்ள பல்வேறு சிறிய தீவுகளும் துருக்கிய இறையாண்மையின் கீழ் வருகின்றன.

தீவுகளில் வெப்பமான கோடையும், மிதமான குளிர்காலமும் உள்ளது. இது நடுநிலக்கடல் சார் வானிலை ( கோப்பன் காலநிலை வகைப்படுத்தலில் Cfa ) உள்ளது.

தீவுக் கூட்டங்கள்[தொகு]

ஏஜியன் தீவுகள் பாரம்பரியமாக வடக்கிலிருந்து தெற்கு வரை ஏழு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன:

  • வடகிழக்கு ஏஜியன் தீவுகள்
  • யூபோயா
  • ஸ்போரேட்ஸ் ( வடக்கு ஸ்போரேட்ஸ் )
  • சைக்லேட்ஸ்
  • சரோனிக் தீவுகள்
  • டோடெகனீஸ் ( தெற்கு ஸ்போரேட்ஸ் )
  • கிரீட்

ஏஜியனின் தீவுகளில் இத்தாலிய தீவுகள் என்ற பெயரானது ( இத்தாலியம்: Isole Italiane dell’Egeo ) 1912 இல் இட்டாலோ-துருக்கியப் போரின்போது இத்தாலியால் கைப்பற்றப்பட்ட ஏஜியன் தீவுகளைக் குறிக்க சில சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை 1923 முதல் 1947 வரை இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்தன ( லாசேன் உடன்படிக்கையின் மூலம்): ரோட்ஸ், காஸ்டெல்லோரிசோ, டோடெகனீஸ் உள்ளிட்ட தீவுகள் இருந்தன. 1947 இல் சமாதான உடன்படிக்கையில், இத்தாலிய கட்டுப்பாட்டில் இருந்த இத் தீவுகள் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்டன.

ஆயர் கடல்கள்[தொகு]

உரோமானிய மாகாணமான இன்சுலேயின் (ஏஜியன் தீவுகள்) பண்டைய ஆயர் கடல்களாக, அன்னுரியோ பொன்டிஃபியோவில் பட்டியலிடப்பட்டுள்ளது. : [1]

உரோமானிய மாகாணமான லெஸ்போஸின் (ஏஜியன் தீவுகள்) பண்டைய எபிஸ்கோபல் சீஸ், அன்னுரியோ பொன்டிஃபியோவில் பட்டியலிடப்பட்டுள்ளது: [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Annuario Pontificio 2013 (Libreria Editrice Vaticana 2013 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-209-9070-1), "Sedi titolari", pp. 819-1013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஜியன்_தீவுகள்&oldid=3399789" இலிருந்து மீள்விக்கப்பட்டது