ஏகல் மு. நடேசன்
தோற்றம்
ஏகல் மு. நடேசன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | எஸ். சிவராஜ் |
| பின்னவர் | கோவிந்தராஜு |
| தொகுதி | இரிஷிவந்தியம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 மார்ச்சு 1944 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
ஏகல் மு. நடேசன் (Ekal M. Natesan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏகல் கிராமத்தினைச் சேர்ந்தவர். அரியலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]