ஏகம்பவாணர் மனைவி பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏகம்பவாணர் மனைவி பாடல் என்னும் குறிப்போடு ஒரே ஒரு பாடல் கிடைத்துள்ளது.[1] உழவர் நாற்றைப் பறித்து,, சேற்றில் தழை மிதித்த வயலில் நடுவர். மூவேந்தர் முடிகளை நாற்றுமுடிகளாக்கி கம்பன் தன் பாடலில் நட்டான் என்று இந்தப் பாடல் கம்பனைப் பாராட்டுகிறது.

சேனை தழையாக்கி செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த வருஞ்சேற்றின்- மானபரன்
பாவேந்தர் வேந்தன் பறித்து நட்டானே கம்பன்
மூவேந்தர் தங்கண் முடி. பாடல் 61

அடிக்குறிப்பு[தொகு]

  1. தனிப்பாடல் திரட்டு நூல் பக்கம் 45-54 பாடல் எண் 61
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகம்பவாணர்_மனைவி_பாடல்&oldid=3437735" இலிருந்து மீள்விக்கப்பட்டது