ஏகபாகநூற்றந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏகபாகநூற்றந்தாதி ஓரடியினையே நான்கு முறை எழுதி ஒரு பாடலாக ஆக்கி, வரிதோரும் வெவ்வேறு பொருள் தரக்கூடியதாய் அமைக்கப்பெற்ற நூறு பாட்டுக்களை உடையது ஏகபாகநூற்றந்தாதி ஆகும். இந்நூல் ஆசிரியர் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் ஆவர்.

பெயர்க்காரணம்[தொகு]

ஒரு பாடலின் அந்தம் மற்றொரு பாடலின் ஆதியாக இருக்க யாக்கப்பெற்றமையால் இந்நூல் ஏகபாகநூற்றந்தாதி எனப் பெயர்பெற்றது.

உரை[தொகு]

இந்நூலுக்கு ஆசிரியராலேயே உரை எழுதப்பட்டுள்ளது. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் 1902 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கி நடத்திய ஞானசித்தி இதழில் வெளிவந்தது.

நூற்பா[தொகு]

                                   திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே 
                                   திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே 
                                   திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே 
                                   திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே

சீர் பிரித்தல்[தொகு]

  1. திரு -- தகு -- ஐயா -- கத்த -- மாலையது -- அணித்து -- இல—கவ்வை -- ஏ
  2. திருத்த -- கை -- யாகத்த -- மாலைய -- தண் -- நித்தில -- கவ்வை -- யே
  3. திரு -- தகை -- ஆகத்த -- மால், ஐய—தனித்து -- இலக—வை -- ஏ
  4. திருத்த -- கை -- ஆகு -- அத்தம் -- ஆலைய -- தணி -- திலக—ஐயே.

பொருள்[தொகு]

  1. அழகிற் குரிய ஐயனே, கர்த்தனே, மாலைப் பொழுதாயிற்று ( பறவை முதலானவற்றின் ஒலியும் இலவாய் அடங்குகின்றன.
  2. பூரணனே ! ஒழுக்கமுள்ள வேள்வித் தலைவா! தண்ணிய முத்து மாலை அணிந்தவனே! அலரோ பரவா நின்றது.
  3. இலக்குமி வசிக்கும் பெரிய மார்பகத்தையுடைய விண்டுவுக்குத் தலைவா, தலைவியின் காம வேட்கையைத் தனித்து விளங்கத் தலையளி செய்க.
  4. அவள் வாட்டம் திருத்துக. கையின்கனுள்ள பொருளை ஒப்பாய், திருத்தணி ஆலயத்து விளங்கும் திலகம் போல்பவனே, அழகனே!

பார்வை நூல்[தொகு]

ஆய்வுலகம் போற்றும் ஆசிரியமணிகள், பதிப்பு - வி. மி. ஞானப்பிரகாசம்,சே. ச., க. சி. கமலையா, தமிழ்ப் பண்பாட்டு மன்றம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகபாகநூற்றந்தாதி&oldid=3719662" இலிருந்து மீள்விக்கப்பட்டது