உள்ளடக்கத்துக்குச் செல்

எ டிரிப் டூ தி மூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ டிரிப் டூ தி மூன்
சந்திரனின் கண்ணில் விண்வெளி ஓடம் இறங்குவது, திரைப்படத்தின் மிகச்சிறந்த காட்சி
இயக்கம்ஜார்ஜஸ் மெலிஸ்
தயாரிப்புஜார்ஜஸ் மெலிஸ்
கதைஜார்ஜஸ் மெலிஸ்
நடிப்பு
  • ஜார்ஜஸ் மெலிஸ்
  • புளூட் பெர்னான்
  • பிரான்சுவா லாலேமென்ட்
  • என்றி டெலானாய்
ஒளிப்பதிவு
  • தியோஃபில் மைக்கேல்ட்
  • லூசியன் டெய்ங்குய்
படத்தொகுப்புஜார்ஜஸ் மெலிஸ்
கலையகம்ஸ்டார் பிலிம் நிறுவனம்
வெளியீடு1 செப்டம்பர் 1902 (1902-09-01)
ஓட்டம்
  • 260 metres/845 feet[1]
  • 18 minutes (12 frame/s)[2]
  • 16 minutes (14 frame/s)[2]
  • 14 minutes (16 frame/s)[2]
  • 9 minutes (24 frame/s)[2]
நாடுபிரான்ஸ்
மொழிஊமைத் திரைப்படம்
ஆக்கச்செலவு10,000 பிரெஞ்சு பிராங்க்
எ ட்ரிப் டு தி மூனின் முழுமையடையாத லெராய் பதிப்பு; இயங்கும் நேரம் 00:11:10
எ ட்ரிப் டு தி மூனின் மீட்டெடுக்கப்பட்ட கருப்பு-வெள்ளை பதிப்பு; இயங்கும் நேரம் 00:12:47

எ டிரிப் டூ தி மூன் (A Trip to the Moon, பிரெஞ்சு மொழி: Le voyage dans la lune)[a] என்பது 1902 ஆம் ஆண்டய பிரெஞ்சு அறிபுனை சாகச தந்திரத் திரைப்படம் ஆகும். இதை ஜார்ஜஸ் மெலிஸ் எழுதி இயக்கி, தயாரித்ததார். ழூல் வேர்ண்ணின் 1865 ஆண்டு புதினமான ஃப்ரம் தி எர்த் டு தி மூன் மற்றும் 1870 ஆம் ஆண்டின் அரௌண்ட் தி மூன் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு இப்படத்தை உருவாக்கினார். துப்பாக்கியால் உந்தப்படும் ஒரு குப்பியில் சந்திரனுக்குப் பயணிக்கும் வானியலாளர்கள் நிலவுக்குச் சென்று, நிலவின் மேற்பரப்பை ஆராய்கிறார்கள். அங்கே உள்ள செலினைட்டுகளால் (நிலவுவாசிகள்) சிறைபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து தப்பித்து மீண்டும் பூமியை வந்தடைகின்றனர். பேராசிரியர் பார்பென்ஃபுல்லிஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று பிரெஞ்சு நாடக கலைஞர்களின் குழுவையும் மெலிஸ் வழிநடத்தினார்.

திரைப்படத் துறையில் இருந்து மெலியஸ் ஓய்வு பெற்ற பிறகு இந்த படம் மறைந்து. 1930 ஆம் ஆண்டில் திரைப்பட வரலாற்றில் மெலியசின் முக்கியத்துவம் திரைப்பட ஆர்வலர்களால் அங்கீகரிக்கத் தொடங்கியபோது, அது மீண்டும் கண்டுபிடிக்கபட்டது. அசல் கை வண்ண அச்சு 1993 இல் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் 2011 இல் மீட்டெடுக்கப்பட்டது.

தி வில்லேஜ் வாய்ஸ் மூலம் 20 ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த படங்களில் எ டிரிப் டூ தி மூன் 84 வது இடத்தைப் பிடித்தது.[5] இந்த்த் திரைப்படத்தில் சந்திரனின் கண்ணில் குப்பி இறங்கும் தருணம் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்ததாகவும் அடிக்கடி குறிப்பிடப்படும் படங்களில் ஒன்றாகவும் உள்ளது.

கதை

[தொகு]
தலைப்பு அட்டை

வானியல் கழகத்தின் கூட்டத்தில், அதன் தலைவர் பேராசிரியர் பார்பென்ஃபூலிஸ்,[b][c] நிலவுக்கு ஒரு பயணம் என்ற திட்டத்தை முன்மொழிகிறார். சில கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, ஐந்து துணிச்சலான வானியலாளர்கள் - நோஸ்ட்ராடாமஸ்,[d] அல்கோஃப்ரிஸ்பாஸ்,[e] ஒமேகா, மைக்ரோமேகாஸ்,[f] பராஃபராகாரமஸ்- ஆகியோர் திட்டத்திற்கு ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு துப்பாக்கி குண்டு வடிவிலான ஒரு விண்வெளி குப்பி செய்யப்படுகிறது. அதை விண்வெளியில் சுட ஒரு பெரிய துப்பாக்கியும் உள்ளது. வானியலாளர்கள் குப்பிக்குள் அமர்கிறார்கள். அவர்களின் குப்பி விண்வெளி தொழில் நுட்பக் குழுவில் இருக்கும் இளம் பெண்களால் துப்பாக்கியில் வைத்து சுடப்படுகிறது. குப்பி நெருங்கி வருவதை சந்திரன் பார்க்கிறது. குப்பி சந்திரனின் வலக் கண்ணில் பாய்கிறது.[g]

நிலவில் பாதுகாப்பாக தரையிறங்கியதும், வானியலாளர்கள் குப்பியில் இருந்து இறங்கி (விண் உடைகள் அல்லது சுவாசக் கருவிகள் தேவையில்லாமல்) அங்கிருந்து தொலைவில் உள்ள பூமியை பார்க்கிறார்கள். பயணத்தால் ஏற்பட்ட களைப்பில், போர்வைகளைப் போர்த்திக் கொண்டு தூங்குகிறார்கள். அவர்கள் தூங்கும்போது, ஒரு வால்வெள்ளி கடந்து செல்கிறது, எழுமீன்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்தும் மனித முகங்கள் அவர்களை உற்று நோக்குகின்றன. வயதான சனி தன் வளையம் சூழ்ந்த கிரகத்தில் இருந்து ஒரு ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறது. மேலும் சந்திரனின் தெய்வமான ஃபோப், பிறைச் சந்திர ஊஞ்சலில் அமர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. ஃபோப் அங்கே பனிப்பொழிவை ஏற்படுத்துகிறது, அதனால் வானியலாளர்களை எழுகிறார்கள். அவர்கள் ஒரு குகைக்குள் தங்குமிடம் தேடுகிறார்கள், அங்கு அவர்கள் இராட்சத காளான்களைக் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு வானியலாளர் தனது குடையைத் திறக்கிறார்; அது உடனடியாக வேரூன்றி ஒரு மாபெரும் காளானாக மாறுகிறது.

இந்த கட்டத்தில், ஒரு செலினைட்டு (கிலேக்க நிலவு தேவதைகளில் ஒருவரான செலீனின் பெயரிடப்பட்ட சந்திரனின் ஒரு பூச்சி நிலவுவாசி ) தோன்றுகிறது. ஆனால் அது ஒரு வானியலாளரால் எளிதில் கொல்லப்படுகிறது, ஏனெனில் அந்த உயிரினங்கள் ஆற்றலுடன் தாக்கப்பட்டால் அவை வெடிக்கும். மேலும் செலினைட்டுகள் வந்து, அவர்களை சூழ்கின்றன. அவற்றை அழிப்பது வானியலாளர்களுக்கு கடினமாகிறது. இறுதியில் செலினைட்டுகள் வானியலாளர்களைப் பிடித்து தங்கள் அரசனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறன. ஒரு வானியலாளர் செலினைட் மன்னரை அவரது சிம்மாசனத்தில் இருந்து தூக்கி தரையில் வீசுகிறார், இதனால் அவர் வெடிக்கிறார்.

பின்தொடரும் செலினைட்டுகளைத் தொடர்ந்து தாக்கிறார்கள். அதனால் வானியலாளர்கள் தங்கள் விண்வெளி ஓடமான குப்பியை நோக்கி ஓடிவருகின்றனர். ஐந்து பேர் உள்ளே சென்றுவிடுகின்றனர். ஆறாவது வானியலாளர், பார்பென்ஃபௌலிஸ், நிலவிலிருந்து விண்வெளிக்கு குப்பியை அனுப்ப ஒரு கயிற்றைப் பயன்படுத்துகிறார். ஒரு செலினைட் கடைசி நேரத்தில் விண்வெளி ஓடமான குப்பியை கைப்பற்ற முயற்சிக்கிறாது. வானியலாளர், குப்பி, ஒரு செலினைட் ஆகியன விண்வெளியில் இருந்து விழுந்து பூமியின் கடலில் இறங்குகின்றன. அங்கு அவை ஒரு கப்பலால் மீட்கப்பட்டு கரைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றன. இறுதிக் காட்சியில் (படத்தின் சில காட்சிகள் காணவில்லை) சிறைபிடிக்கப்பட்ட செலினைட்டின் காட்சி மற்றும் "லேபர் ஓம்னியா வின்சிட்" என்ற பொன்மொழியைத் தாங்கிய ஒரு நினைவுச் சிலையை திறப்பது உட்பட, விண்வெளி வீரர்கள் திரும்பியதைக் கொண்டாடும் ஒரு கொண்டாட்ட அணிவகுப்பு போன்றவைை சித்தரிக்கிறன்றன.[h]

நடிகர்கள்

[தொகு]

எ டிரிப் டூ தி மூன் படம் தயாரிக்கபட்டபோது, ​​திரைப்பட நடிகர்கள் குறித்த எந்தப் பெயரும் திரையில் இடப்படவில்லை; திரைப்படங்களில் தொடக்கத்திலும், இறுதியிலும் படக் குழுவினர் குறித்து குறிப்பிடும் நடைமுறை பிற்காலத்திலேதான் வந்தது.[10]

குறிப்புகள்

[தொகு]
  1. A Trip to the Moon, the common English-language title,[1][3] was first used in Méliès's American catalogues. It was initially labelled in British catalogues as Trip to the Moon, without the initial article.[4] Similarly, though the film was first sold in France without an initial article in the title,[4] it has subsequently been commonly known as Le Voyage dans la Lune.[1][3]
  2. Proper names taken from the authorized English-language catalogue description of the film: see Méliès 2011a, ப. 227–29.
  3. Barbenfouillis is French for "Tangled-Beard".[6] The name probably parodies President Impey Barbicane, the hero of Jules Verne's From the Earth to the Moon; Méliès had previously used the name in a different context in 1891, for the stage magic act "Le Décapité Recalcitrant".[7]
  4. The name of the purported prophet.
  5. Alcofribas was a pseudonym of François Rabelais.
  6. The name of a space traveller from Voltaire's story of the same name.
  7. The image is a visual pun: the phrase dans l'œil, literally "in the eye," is the French equivalent of the English word "bullseye".[8]
  8. "Labor omnia vincit" is இலத்தீன் for "work conquers all".[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Hammond, Paul (1974), Marvellous Méliès, London: Gordon Fraser, p. 141, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900406-38-0
  2. 2.0 2.1 2.2 2.3 Frame rate calculations produced using the following formula: 845 feet / ((n frame/s * 60 seconds) / 16 frames per foot) = x. See Elkins, David E. (2013), "Tables & Formulas: Feet Per Minute for 35 mm, 4-perf Format", The Camera Assistant Manual Web Site (companion site for The Camera Assistant's Manual [Burlington, MA: Focal Press, 2013]), பார்க்கப்பட்ட நாள் 8 August 2013.
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; EzraSatire என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 Malthête & Mannoni 2008, ப. 344
  5. Village Voice Critics' Poll (2001), "100 Best Films", filmsite.org, AMC, archived from the original on 13 June 2016, பார்க்கப்பட்ட நாள் 2 August 2013
  6. Rosen 1987, ப. 748
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Essai111 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. Kessler 2011, ப. 123
  9. Frazer 1979, ப. 98
  10. Ezra 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_டிரிப்_டூ_தி_மூன்&oldid=4133587" இலிருந்து மீள்விக்கப்பட்டது