எ. சு. நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எ. சு. நாராயணன் அல்லது என்னபாடம் சுந்தர நாராயணன் (Ennapadam Sundara Narayanan)(15 பிப்ரவரி 1904 - 23 சனவரி 1991) என்பவர் இந்தியப் பூச்சியியல் வல்லுநர் ஆவார். இவர் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறையில் நிபுணத்துவம் பெற்றவர். இந்திய சுதந்திரத்தின் போது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் பிரிவுக்கு பதினைந்து ஆண்டுகளாக தலைமை தாங்கினார்.

கேரள மாநிலம் பாலகாட்டில் பிறந்த இவர், பாலக்காடு, அரசு விக்டோரியா கல்லூரியில் படித்தப்பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் (எம்.ஏ.) பட்டம் பெற்றார். 1930ல் இம்பீரியல் வேளாண்மை ஆய்வு நிறுவனத்தில் சேர்ந்தார். இஅவர் தாமஸ் பெயின்பிரிக் பிளெட்சரின் கீழ் பணிபுரிந்தார். முனைவர் பட்டப்படிப்புக்காக லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். இவர் கோடைக் காலத்தில் டபுள்யு. ஆர். தாம்சனின் கீழ் உயிரியல் கட்டுப்பாடு மற்றும் மூன்று மாதங்கள் கென்ட் நடைமுறையில் தேனீ வளர்ப்பில் பணியாற்றினார். அயலக கல்விகற்றல் முடிந்த பின்னர், புது தில்லி திரும்பி பூச்சியியல் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். இவர் 15 ஆண்டுகள் இந்தப் பதவியினை வகித்தார். மைசூரில் உள்ள பட்டுப்புழு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து 1962ல் ஓய்வு பெற்றார். இவர் இந்தியாவின் பூச்சியியல் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும், இந்தியத் தேசிய அறிவியல் கழகம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் முதலியவற்றில் உறுப்பினராகவும் இருந்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rao, B.R. Subba (1998). History of Entomology in India. Bangalore: Institution of Agricultural Technologists. பக். 116–118. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._சு._நாராயணன்&oldid=3377827" இலிருந்து மீள்விக்கப்பட்டது