எ.பி.சி பகுப்பாய்வு
எ.பி.சி பகுப்பாய்வு (ABC analysis) என்பது இருப்புக் கணக்கு வகைப்படுத்தல் நுட்பமாகும். எ.பி.சி பகுப்பாய்வு இருப்புக் கணக்கை மூன்று வகைகளாகப் பிரிக்கிறன்றது. "ஏ பொருட்கள்" மிக இறுக்கமாக கட்டுப்பாடு மற்றும் சரியான பதிவுகளோடும், "பி பொருட்கள்" குறைந்தளவு இறுக்கமாக கட்டுப்பாடு மற்றும் நல்ல பதிவுகளோடும், "சி பொருட்கள்" சாதாரண கட்டுப்பாடு மற்றும் குறைந்த பதிவுகளோடும் இருக்கும்.
எ.பி.சி பகுப்பாய்வானது, ஒட்டுமொத்தப் பொருள் விலையில் குறிப்பிடுமளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உருப்படிகளைக் கண்டறிவதற்கான ஓர் இயங்கமைப்பை வழங்குகிறது. மேலும் வெவ்வேறு மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு தேவைப்படும் இருப்பின் வகைகளையும் கண்டறிவதற்கான இயங்கமைப்பையும் வழங்குகிறது[1]
எ.பி.சி பகுப்பாய்வை நிகழ்த்தும் போது, பொருள் விவரப்பட்டியல்களின் உருப்படிகள் முதலில் முடிவுகளுடன் மதிப்பிடப்பட்டு பின்னர் தரப்படுத்தப்படுகின்றன. இந்த முடிவுகள் பின்னர் பொதுவாக மூன்று வகைகளாகக் குழுப்படுத்தப்படுகின்றன. இந்த மூன்று வகைகள் "எ.பி.சி குறிகள்" என அழைக்கப்படுகின்றன.
எ.பி.சி குறிகள்
[தொகு]- "எ பிரிவு" பொருள் விவரப்பட்டியலானது பொதுவாக மொத்த மதிப்பில் 70% அளவுக்கு நுகர்வு மதிப்பு கொண்ட பொருட்கள், அல்லது மொத்த எண்ணிக்கையில் 20% உருப்படிகளைக் கொண்டவை. (நுகர்வு மதிப்பு= வருடாந்திர நுகர்வு X விலை)
- "பி பிரிவு" பொருள் விவரப்பட்டியலானது மொத்த மதிப்பில் 25%, அல்லது மொத்த உருப்படிகளில் 30% ஐக் கொண்டிருக்கும்.
- "சி பிரிவு" பொருள் விவரப்பட்டியலானது மீதமுள்ள 5%, அல்லது மொத்த உருப்படிகளின் 50% ஐக் கொண்டிருக்கும்.
அதாவது "A" பிரிவு என்பது மிக உயர்ந்த மதிப்பு கொண்டவையாகவும் "C" என்பது மிகக் குறைந்த மதிப்பு கொண்டவையாகவும் இருக்கும். இதன் மூலம் விலை மதிப்பு அதிகமுள்ள பொருட்களின் மீது நாம் அதிக கவனம் செலுத்தலாம்.
எ.பி.சி பகுப்பாய்வு பரேட்டோ கொள்கையைப் போன்றதே ஆகும். அதில் "எ பிரிவு" குழுவானது ஒட்டுமொத்த மதிப்பில் அதிகபட்ச விகிதத்தைக் கொண்டிருக்கும், ஆனால் பொருள் விவரப்பட்டியலின் ஒட்டுமொத்த அளவில் சிறிய சதவீதத்தைக் கொண்டிருக்கும்.[2]
இதில் மற்றுமொரு முறையும் உண்டு.
- "எ" என்பது தோராயமாக 10% உருப்படிகள் எண்ணிக்கை அல்லது 66.6% நுகர்வு மதிப்பு கொண்டவை.
- "பி" என்பது தோராயமாக 20% உருப்படிகள் எண்ணிக்கை அல்லது 23.3% நுகர்வு மதிப்பு கொண்டவை.
- "சி" என்பது தோராயமாக 70% உருப்படிகள் எண்ணிக்கை அல்லது 10.1% நுகர்வு மதிப்பு கொண்டவை.
வகை | எண்ணிக்கை | நுகர்வு மதிப்பு |
---|---|---|
"எ" | 10% | 70% |
"பி" | 20% | 20% |
"சி" | 70% | 10% |
மொத்தம் | 100% | 100% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.supplychainmechanic.com/?p=46 பரணிடப்பட்டது 2008-06-17 at the வந்தவழி இயந்திரம் சரக்கு விவரப்பட்டியலின் ஒரு ABC பகுப்பாய்வை எவ்வாறு நிகழ்த்துவது?
- ↑ Purchasing and Supply Chain Management By Kenneth Lysons, Brian Farrington
வெளி இணைப்புக்கள்
[தொகு]- SAP library ABC Analysis
- Oracle Overview of ABC Analysis