எஸ். வெற்றிவெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். வெற்றிவெல் (S. Vetrivel) தமிழ்நாடு மாநிலத்தில் தீவிரமாகச் செயல்படும் ஒரு அரசியல்வாதி. இவர் தற்போது தமிழகச் சட்டமன்றத்தின் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.[1] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

வெற்றிவேல் தனது பள்ளிப்படிப்பைச் சேலத்தில் உள்ள சிறு மலர் பள்ளியில் முடித்தார். மேலும் இவர் சேலம், சவுடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

இவர் 14 வயதிற்குட்பட்டோர் மற்றும் 23 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். இவர் தமிழ்நாடு துடுப்பாட்ட வாரிய தேர்வுக் குழு மற்றும் சென்னை துடுப்பாட்ட கிளப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 1991ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். 2011 முதல் 2015 வரை கருப்பூர் நகரப் பஞ்சாயத்துக்குத் தலைவராக இருந்தார். 2016ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியின் அதிமுக சார்பில் சட்டமன்றத்திற்கு வேட்பாளராகப் போட்டியிட்டு 19,956 வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Saqaf, Syed Muthahar (2016-04-05). "AIADMK denies seats to six MLAs in Salem district" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmk-denies-seats-to-six-mlas-in-salem-district/article8434833.ece. 
  2. "Government of Tamil Nadu | Tamil Nadu Government Portal". www.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வெற்றிவெல்&oldid=3121434" இலிருந்து மீள்விக்கப்பட்டது