எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை (இறப்பு: திசம்பர் 15, 2011) இலங்கையின் மெல்லிசை, மற்றும் பொப் இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.

எஸ்.வி.ஆர்.கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாடகராக இருந்தவர். தமிழ், மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாடக்கூடிய இவர், மேடைப் பாடல்களின் மூலம் பிரபலம் அடைந்தார்.

அவள் ஒரு ஜீவநதி, சர்மிளாவின் இதயராகம் ஆகிய இலங்கைத் தமிழ் திரைப்படங்களில் பின்னணிப் பாடி புகழ்பெற்றவர். ‘அஜாசக்த’ என்ற சிங்களத் திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, அதிலும் பின்னணி பாடியுள்ளார். இவர் இலங்கைத் தகவல் திணைக்களத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் 2009 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

விருதுகள்[தொகு]

இவருக்கு இலங்கை அரசு 2011 ஆம் ஆண்டில் கலாபூசணம் விருது வழங்கியது.

மறைவு[தொகு]

62 வயதான இவர், 2011 டிசம்பர் 15 கொழும்பு, மகரகமை மருத்துவமனையில் காலமானார்[1].

மேற்கோள்கள்[தொகு]